பீனிக்ஸ் சினிமா விமர்சனம்

0
548

பீனிக்ஸ் சினிமா விமர்சனம் : பீனிக்ஸ் – விறுவிறுப்புடன் ஆக்ரோஷம் நிறைந்த பழி வாங்கும் ஆக்ஷன் அதிரடியில் ஈர்க்கும் | ரேட்டிங்: 3.5/5

ராஜலட்சுமி ‘அனல்’ அரசு தயாரித்திருக்கும் பீனிக்ஸ் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ‘அனல்’அரசு

இதில் சூர்யா சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனார் ரமேஷ், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நக்ஷத்ரா, வர்ஷா விஸ்வநாத், நவீன், ரோகித், மது வசந்த், கிஷோர், ரிஹான், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ், ஆடுகளம் நரேன், ஸ்ரீPஜித் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு இயக்குனர்: வேல்ராஜ் ஆர்.இணை இயக்குனர்: என். ஜான் ஆல்பர்ட், இசை: சாம் சிஎஸ், எடிட்டர்: பிரவீன் கே.எல், கலை இயக்குனர்: மதன் கே, பாடலாசிரியர்: விவேகா, மதன் கார்க்கி, லோகன், வித்யா,நடனம்: பாபா பாஸ்கர், ஜானி, அதிரடி ஆக்ஷன்: ‘அனல்’ அரசு,தயாரிப்பு நிர்வாகி: சக்தி ஜெகதீசன்,நிர்வாகத் தயாரிப்பாளர்: எம்.எஸ்.முருகராஜ், மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அகமது, பராஸ் ரியாஸ்​17 வயது நிரம்பிய சிறுவன் சூர்யா(சூர்யா சேதுபதி) ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கரிகாலனை (சம்பத்) பொது மக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் நடுரோட்டில் 36 வெட்டுக்களை வெட்டி கொலை செய்கிறான். பரபரப்பூட்டும் இந்த சம்பவத்தால் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டின் உத்தரவின்படி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். கணவனை படுகொலை செய்த சூர்யாவை பழி வாங்க எம்.எல்.ஏ சம்பத்தின் மனைவி வரலட்சுமி போலீசார் உதவியுடன் அந்த சீர்திருத்தப் பள்ளியில் ரௌடியாக வலம் வரும் குணாவை அனுப்புகிறார். ஆனால் சூர்யா கொலை சம்பவத்திலிருந்து தப்பித்து ரௌடி குணாவையும் அவனது ஆட்களையும் அடித்து நொறுக்கிவிடுகிறான். இதனால் பல மாவட்டத்திலிருந்து ரௌடிகளை இறக்கினாலும் சூர்யாவை கொல்ல முடியாமல் போகிறது. இதனால் கோபமடையும் வரலட்சுமியின் மகன் பெரியளவில் கூட்டத்தை கூட்டி சூர்யாவை கொல்ல திட்டம் தீட்டி தானே இந்த முறை களத்தில் இறங்கி சீர்திருத்த பள்ளிக்குள் செல்கிறான். இந்த தாக்குதலை முன்னரே அறிந்து கொள்ளும் சூர்யா தன் சக கூட்டாளிகளின் துணையோடு எதிர்கொள்கிறான். இறுதியில் சூர்யா சதித்திட்டத்தை முறியடித்து உயிருடன் வந்தானா? ஏன் சூர்யா எம்எல்ஏவை கொன்றான்? காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.ஆக்ஷன் ஹீரோவாக முதல் படத்தில் கலமிறங்கியிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. தீர்க்கமான கோப பார்வை, எம்எம்ஏ விளையாட்டு வீரருக்கான உடலமைப்பு, அதிரடி ஆக்ஷன் என்று முதல் பாதி வசனம் குறைவாகவும் சண்டைக் காட்சிகள் அதிகமாகவும் இருக்க, இரண்டாம் பாதியில் ஃபிளாஸ்பேக்கில் விரியும் கதைக்களத்திற்கு தன் அண்ணனின் சாவிற்கு பழி தீர்க்கும் தம்பியாக களமிறங்கி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சூர்யாவின் அண்ணனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ்,அம்மாவாக தேவதர்ஷினி இருவரின் நடிப்பு மிகையில்லாமல் யதார்த்தமாக செய்துள்ளனர்.எம்எல்ஏ மனைவியாக வில்லத்தனமாக மிரட்டியிருக்கிறார் வரலக்ஷ்மி சரத்குமார்.

மற்றும் சம்பத் ராஜ், முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணார் ரமேஷ், அபி நக்ஷத்ரா, வர்ஷா விஸ்வநாத், நவீன், ரோகித், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், மது வசந்த், கிஷோர், ரிஹான், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ், ஆடுகளம் நரேன், ஸ்ரீஜித் ரவி மற்றும் துணை கதாபாத்திரங்களில் வரும் ரௌடி ஆட்கள் என்று படம் முழுவதும் ரத்தம் தெறிக்க விடுகின்றனர்.

படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் தொடர் காட்சிகளின் தொகுப்பை அழகாக கொடுத்துள்ளார்.

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ். பின்னணி இசை ,‘அனல்’ அரசின் சண்டை காட்சிகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிக்கும் சண்டை காட்சிகளுக்கு கூடுதல் பொறுப்புடன் கைகோர்த்து வெற்றி கூட்டணியாக ஜொலிக்கின்றனர்.

விளையாட்டு போட்டியில் ஜெயித்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஏழைக் குடும்பத்தை சிதைக்கும் அரசியல் அதிகாரம் அதற்காக அரசியல்வாதியை பழி வாங்கும் ஒரு 17 வயது சிறுவனுக்கு ஏற்படும் கொலை மிரட்டல்கள், தாக்குதல்களை சமாளித்து மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் உயிர்தெழும் திரைக்கதையில் காதல், குடும்ப பாசம், நட்பு கலந்து ஆரம்பம் முதல் இறுதி வரை மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை அமைத்து சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் அனல் அரசு.

மொத்தத்தில் ராஜலட்சுமி ‘அனல்’ அரசு தயாரித்துள்ள பீனிக்ஸ் – விறுவிறுப்புடன் ஆக்ரோஷம் நிறைந்த பழி வாங்கும் ஆக்ஷன் அதிரடியில் ஈர்க்கும்.