பிஸ்தா விமர்சனம்: பிஸ்தா காதலர்களை சேர்த்து வைக்கும் தோஸ்த் | ரேட்டிங்: 2.5/5

0
238

பிஸ்தா விமர்சனம்: பிஸ்தா காதலர்களை சேர்த்து வைக்கும் தோஸ்த் | ரேட்டிங்: 2.5/5

ஒன் மேன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிஸ்தா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ் பாரதி.
இதில் மெட்ரோ சிரிஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சதீஷ், யோகி பாபு, ஞானசம்பந்தன், தாட்சாயினி, லொள்ளு சபா சுவாமிநாதன், செந்தில், நமோ நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தருண்குமார் இசையமைக்க, எம்.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விரும்பாத கட்டாய திருமணத்தை ஏற்கும் காதலிகளை திருமணத்தன்று தூக்கி வந்து காதனுடன் சேர்த்து வைக்கும் கல்யாணத்தை நிறுத்தும் தொழில் செய்கிறார் சிரிஷ்;. இதனால் பல திருமணங்கள் தடைபட, ஊர்மக்கள் சிரிஷ் மீது கோபத்துடன் இருக்கின்றனர்.இதனிடையே சிரிஷ் மிருதுளா முரளியை காதலிக்க தொடங்க, அவரோ இந்த தொழிலை விட்டு விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார். இதற்கு சம்மதிக்கும் சிரிஷ் எதிர்பாராத விதமாக ஒரு திருமணத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட, இதைப் பற்றி தெரிய வரும் மிருதுளா முரளி சிரிஷை வெறுத்து ஒதுக்குகிறார். அதே சமயம் சிரிஷின் ஜாதகத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் குடும்பத்திற்கு ஆபத்து என்பதை அறிந்து சிரிஷின் பெற்றோர் மும்முரமாக பெண் தேடுகின்றனர். ஆனால் பெண் கொடுக்க ஊர் மக்கள் பல காரணங்களை சொல்லி மறுக்கின்றனர். சிரிஷின் நண்பர்கள் திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று மண்டபம், பத்திரிகை, பேனர், சமையல் என்று அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஏற்பாடு செய்கின்றனர். நாள் நெருங்க நெருங்க பெண் கிடைக்காமல் அலைகின்றனர். இறுதியில் சிரிஷிற்கு குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடந்ததா? திருமணத்தை நிறுத்த வில்லன் எடுக்கும் முயற்சிகள் கை கூடியதா? சிரிஷ் யாரை திருமணம் செய்து கொண்டார்? என்பதே க்ளைமேக்ஸ்.

மெட்ரோ சிரிஷ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து காதல், நட்பு, செண்டிமென்ட், நடனம் என்று அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார். மிருதுளா முரளி முதலில் நாயகியாக வந்து பின்னர் நயமாக விலகும் காதலி, திருப்புமுனையான அழகான கதாபாத்திரம் அருந்ததி நாயர், சிரிக்க வைக்க சதீஷ், யோகி பாபு முடிந்த வரை முயற்சி  செய்கிறார்கள். ஞானசம்பந்தன், தாட்சாயினி, லொள்ளு சபா சுவாமிநாதன், செந்தில், நமோ நாராயணன் ஆகியோர் பக்கமேளங்கள்.

தருண்குமார் இசை மற்றும் பின்னணி இசையோடு, எம்.விஜய் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருந்து உயிர் கொடுத்துள்ளனர்.

நாயகனின் தொழிலே அவருடைய திருமணத்திற்கு தடையாக இருக்க, காதலும் கைகூடாமல் போக, வில்லன்களும் சதி செய்ய, திட்டமிட்டபடி திருமண நிச்சயித்த நாளில் பெண் கிடைத்ததா? என்பதை திரைக்கதையாக முழு நீள நகைச்சுவை கலந்து கொடுக்க நினைத்த இயக்குனருக்கு காமெடியே தடையாக இருக்க, முடிந்தவரை போராடி க்ளைமேக்சில் ஒரு திருப்பத்தை கொடுத்து திருப்திகரமாக முடித்துள்ளார் இயக்குனர் ரமேஷ் பாராதி. பிஸ்தா என்ற வெற்றி பட டைட்டிலை வைத்துக் கொண்டு மெட்ரோ சிரிஷை வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் இறுதிக்காட்சியைத் தவிர மற்ற காட்சிகளில் ஏற்படும் தோய்வை சரி செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ஒன் மேன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிஸ்தா காதலர்களை சேர்த்து வைக்கும் தோஸ்த்.