பிடி சார் விமர்சனம் : பிடி சார் சமூக சிந்தனையோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்காக களமிறங்கி குரல் கொடுத்து துணிந்து போராடி வெற்றி வாகை சூடும் விளையாட்டு மாஸ்டர் | ரேட்டிங்: 3.5/5

0
848

பிடி சார் விமர்சனம் : பிடி சார் சமூக சிந்தனையோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்காக களமிறங்கி குரல் கொடுத்து துணிந்து போராடி வெற்றி வாகை சூடும் விளையாட்டு மாஸ்டர் | ரேட்டிங்: 3.5/5

வேல்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் பிடி சார் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் வேணுகோபாலன்.

இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி – கனகவேல் , காஷ்மீரா பர்தேஷி – வானதி, தியாகராஜன் – குரு புருஷோத்தமன்,  கே.பாக்யராஜ் –  தர்மதுரை, இளையதிலகம் பிரபு – மாணிக்கவேல், ஆர்.பாண்டியராஜன் – கே.செல்வராஜ், இளவரசு – ரத்தினம், முனிஷ்காந்த் -மாரிமுத்து, பட்டிமன்றம் ராஜா – ராஜன், அனிக்கா சுரேந்திரன் – நந்தினி, தேவதர்ஷினி – மகேஸ்வரி, வினோதினி வைத்தியநாதன்- காவேரி, ஓய்.ஜி மதுவந்தி – ஆதிரை அருணாச்சலம், ஆர்ஜே விக்கி – விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த் – காட்சன்நியானராஜ், பிரசன்னா பாலச்சந்தர்- ரகுநாதன், அபிநக்ஷத்ரா – மித்ரா, ப்ரனிக்கா – சாருப்ரீத்தா, திரிஷ்வ்சாய் – ராகுல் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை -ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – மாதேஷ் மாணிக்கம், கலை – ஏ.அமரன், படத்தொகுப்பு – பிரசன்னா ஜி.கே., சண்டை பயிற்சி – மகேஷ் மேத்திவ், நடன இயக்குனர் – சந்தோஷ், ஆடை வடிவமைப்பு – ஸ்வப்னா ரெட்டி, ஒலிக்கலவை – தபஸ் நாயக், ஒலி வடிவமைப்பு – ஸ்ரீகாந்த் சுந்தர், சுகுமார், விஎஃக்ஸ்- ப்ரவீன்.டி, லைன் புரொடியுசர் – என்.விக்கி, புரொடக்ஷன் எக்சிகியூடிவ் – எம்.கே. அருணாச்சலம், ஸ்டில்ஸ் – அமீர், கலரிஸ்ட் – கே.அருண் சங்கமேஸ்வரர், கோர்டினேடிங் புரொடியுசர் – பிரதிப் ராயன், கிரியேட்டிவ் புரொடியுசர் – கே.ஆர். பிரபு, எக்சிகியூட்டிவ் புரொடியுசர் – அஷ்வின்குமார், பிஆர் ஓ- யுவராஜ்.கனகவேல் (ஹிப்ஹாப் ஆதி) உடற்கல்வி பயிற்சியாளர் பிடி வாத்தியாராக பிரபல கல்வி நிறுவனத் தலைவர் குரு புருஷோத்தமன் நடத்தும் பள்ளியில் வேலை செய்கிறார். பள்ளியில் குழந்தைகளின் பிடித்த ஆசிரியராக இருப்பதோடு, பள்ளி வளாகத்தின் மொட்டை மாடியில் உள்ள சுவரில் மேஜிக் வால் என்று எழுதி அதில் மாணவர்கள் தங்கள் எண்ணங்களை எழுதினால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார். கனகவேலின் எதிர் வீட்டில் வசிக்கும் ரத்தினம்(இளவரசு)மகள் நந்தினி (அனிக்கா சுரேந்திரன்)  குரு புருஷோத்தமன் நடத்தும் கல்லூரியில் படிக்கிறார். பஸ் ஸ்டாப்பில் சில இளைஞர்களால் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் நந்தினி, தந்தையிடம் கூற பிரச்சனை வேண்டாம் என்று பெற்றோரின் வற்புறுத்தலால் அமைதியாகிறார். இதனால் சில சமயங்களில் கனகவேல் நந்தினியை கல்லூரியில் விட்டு விட்டு பள்ளிக்கு செல்வார். கனகவேலின் ஜாதகத்தில் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வார் என்று இருக்க அதிலிருந்து தாய் மகேஷ்வரி (தேவதர்ஷினி) யாரிடமும் அதிர்ந்து பேசாத, சண்டை சச்சரவிற்கும் போகாத வண்ணம் மகன் கனகவேலை வளர்கிறார். கனகவேல் அந்த பள்ளியின் ஆங்கில ஆசிரியை வானதியை(காஷ்மிரா பர்தேஷி) காதலிக்கிறார். வானதியின் தந்தை பிரபல கிரிமினல் வக்கீல் மாணிக்கவேல்( பிரபு) சம்மதம் வாங்கி நிச்சயதார்த்தம் செய்ய தேதி குறிப்பிடப்படுகிறது. அந்த நாளில் எதிர் வீட்டு நந்தினி காணாமல் போகிறார். இதனால் கனகவேல் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ளாமல் நந்தினியை தேடிச் செல்கிறார். பின்னர் நந்தினி பிணமாக மீட்கப்பட அதற்கான காரணத்தை கண்டறிய முற்படும் போது அதிர்ச்சியான உண்மைகளை கண்டு பிடிக்கிறார். இறுதியில் நந்தினி ஏன் விபரீத முடிவு எடுத்தார் ? பணபலம் அதிகாரம் நிறைந்த இடத்தில் தன்னுடைய புத்தி சாமர்த்தியத்தால் எப்படி குற்றவாளியை சிக்க வைக்கிறார்? கனகவேல் அதை எப்படி நிரூபிக்கிறார்? என்பதே நீதிமன்றத்தில் முடியும் படத்தின் க்ளைமேக்ஸ்.ஹிப்ஹாப் தமிழா ஆதி பிடி ஆசிரியர் கனகவேலாக ஆர்ப்பாட்டத்துடன் விளையாட்டை சொல்லி கொடுப்பதும், மற்ற நேரங்களில் பயந்த சுபாவமாக தாயின் சொல்லை தட்டாத பிள்ளையாக இருப்பதும், பின்னர் நந்தினிக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலுக்கும், மிரட்டலுக்கும் பதிலடி கொடுத்து மறைமுக வேலை செய்து சிக்க வைக்கும் இடத்திலும் தனித்து நின்று ஸ்கோர் செய்கிறார். ஆடல், பாடல், காதல், சமூக அக்கறை, மோதல் என்று அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக செய்து அசத்தியுள்ளார்.

காஷ்மீரா பர்தேஷி  ஆங்கில ஆசிரியை காதலி வானதியாக அழகு பதுமையாக பாடலுக்கு மட்டுமே பங்களிப்பு கொடுத்து வந்து போகிறார்.

பிரபல கல்வித்தந்தை செல்வாக்கு மிகுந்த குரு புருஷோத்;தமனாக தியாகராஜன் உட்கார்ந்தபடியே வில்லத்தனத்தை தன் முகபாவங்களில் காட்டி விட்டுச் செல்கிறார்.

நீதிபதி தர்மதுரையாக கே.பாக்யராஜ் வக்கீல்களை விட அதிக வசனம் பேசிவிட்டுச்செல்கிறார்.

வக்கீல் மாணிக்கவேலாக இளையதிலகம் பிரபு மருமகனுக்காக வாதிட்டு பல அண்டர்க்ரொவுண்ட் வேலைகளை செய்வதில் முக்கிய பங்களிப்பு கொடுத்துள்ளார்.

பள்ளியின் பிரின்ஸ்ப்பால் N;க.செல்வராஜாக ஆர்.பாண்டியராஜன், நந்தினியின் தந்தை ரத்தினமாக அமைதியான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் இளவரசு, மாரிமுத்துவாக முனிஷ்காந்த் , கனகவேலின் தந்தை ராஜனாக மைக் டைசன் ரசிகனாக சில காட்சிகளில் ரிலாக்ஸ் செய்ய வைத்துள்ளார் பட்டிமன்றம் ராஜா , படத்தில் முக்கிய திருப்புமனை ஏற்படுத்தும் கதாபாத்திரம் நந்தினியாக அழுத்தமான கதாபாத்திரம் இயல்பான நடிப்பில் அனிக்கா சுரேந்திரன்.

தாய் மகேஸ்வரியாக தேவதர்ஷினி மகன் மீது இருக்கும் பாசம், வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று பதறும் போதும், மகனிடம் நந்தினி பிரச்சனையில் தலையிடக் கூடாது என்று பிடிவாதம் பிடித்து பேசும் நீண்ட வசனமும், பின்னர் தன் பிடிவாதத்தை விட்டுவிடும் இடங்களில் கை தட்டல் பெறுகிறார்.

வினோதினி வைத்தியநாதன்- காவேரி, ஓய்.ஜி மதுவந்தி – ஆதிரை அருணாச்சலம், ஆர்ஜே விக்கி – விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த் – காட்சன்நியானராஜ், பிரசன்னா பாலச்சந்தர்- ரகுநாதன், அபிநக்ஷத்ரா – மித்ரா, ப்ரனிக்கா – சாருப்ரீத்தா, திரிஷ்வ்சாய் – ராகுல் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா தன் 25வது படத்திற்கு இசையமைத்து நடித்திருப்பது படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்புடன் இசையிலும், பின்னணி இசையிலும் வலுவாக கொடுத்து தடம் பதித்துள்ளார்.

லாங் ஷாட்டில் பள்ளி வளாகம்,  கல்லூரி ஆகியவற்றின் காட்சிகள், ஹிப் ஹாப் ஆதி வசிக்கும் வீடு, தெரு, கல்லூரி தளாளரின் அலுவலகம், ஆதியின் வீட்டில் நடக்கும் சம்பவங்கள், நீதிமன்ற காட்சிகள் என்று  ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் கச்சிதமாக செதுக்கியுள்ளார்.

கலை – ஏ.அமரன், படத்தொகுப்பு – பிரசன்னா ஜி.கே., சண்டை பயிற்சி – மகேஷ் மேத்திவ், நடன இயக்குனர் – சந்தோஷ் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் விறுவிறுப்பை தக்க வைத்துள்ளது.

பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் பற்றி பல படங்களில் பார்த்த கதையம்சங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட கதைக்களத்துடன் இயக்கியுள்ளார் கார்த்திக் வேணுகோபாலன். தவறு செய்யாமல் இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் நிலை சொந்த குடும்பத்தாலும், உற்றார் உறவினர்கள் மற்றும் சமூகத்தாலும் ஏளனமாக கேலியும் கிண்டலும் பேசி மனஉளைச்சல் ஏற்படுத்தி எதிர்த்து நின்று வாழ தைரியம் கொடுக்காமல் தற்கொலைக்கு வழிவகுத்திடும் செயல்களை மேற்கோள்காட்டி பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு தைரியத்துடன் துணிந்து நடந்து கொள்ள வேண்டும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறார் கார்த்திக் வேணுகோபாலன். இத்தகைய பாலியல் துன்புறுத்தல்கள் சம்பவங்கள் நடைபெற்றால் அந்த தவறுக்கு பெண்கள் பொறுப்பு இல்லை என்பதை உணர்ந்து தைரியமாக நின்று எதிர் கொண்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லி கமர்ஷியல் மசாலாக்களை கலந்து இயக்கியிருக்கிறார் கார்த்திக் வேணுகோபாலன். வெல்டன்.

மொத்தத்தில் வேல்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் பிடி சார் சமூக சிந்தனையோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்காக களமிறங்கி குரல் கொடுத்து துணிந்து போராடி வெற்றி வாகை சூடும் விளையாட்டு மாஸ்டர்.