பாபா பிளாக் ஷீப் திரைப்பட விமர்சனம் : பாபா பிளாக் ஷீப் பள்ளி பருவத்தின் இனிய வசந்த கால நினைவலைகள் | ரேட்டிங்: 2.5/5

0
437

பாபா பிளாக் ஷீப் திரைப்பட விமர்சனம் : பாபா பிளாக் ஷீப் பள்ளி பருவத்தின் இனிய வசந்த கால நினைவலைகள் | ரேட்டிங்: 2.5/5

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், ராகுல் தயாரித்து புட் சட்னி ராஜ்மோகன்  ஆறுமுகம் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பாபா பிளாக் ஷீப்’.

இதில் அயாஸ்,நரேந்திர பிரசாத்,அம்மு அபிராமி,‘விருமாண்டி’ அபிராமி,சுது விக்னேஷ்காந்த்,சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன்,சேட்டை ஷெரீப், மதுரை முத்து,கேபிஒய் பழனி,ஓஏகே சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்:- ஒளிப்பதிவு –  சுதர்சன் சீனிவாசன், இசை சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி, கலை இயக்கம் – மாதவன், ஸ்டண்ட் –  ‘உறியடி’ விக்கி, நடன அமைப்பு – அஸார், லீலாவதி குமார், விளம்பர வடிவமைப்புகள் –  கோபி பிரசன்னா, பாடல் வரிகள் – யுகபாரதி, ராஜா, விக்னேஷ்காந்த், ஸ்டில்ஸ் – வேலு, மக்கள் தொடர்பு – சதீஷ் – சிவா (ஏய்ம்)

சேலத்தில், இரண்டு மேல்நிலைப் பள்ளிகளை அதாவது ஆண்கள் படிக்கும் பள்ளி மற்றொன்று இருபாலர் பள்ளி ஆகியவற்றை கல்வியாளர் ரங்கராஜன் (சுரேஷ் சக்ரவர்த்தி) ஒரே வளாகத்தில் நடத்தி வருகிறார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மகன்கள் ராஜா (சுப்பு பஞ்சு) மற்றும் ரவி (மலர் கண்ணன்) ஆகியோர் தங்கள் கருத்து வேறுபாடுகள் தீர்த்து பள்ளிகளை ஒரே நிறுவனமாக ஒருங்கிணைக்கிறார்கள். இதனால், இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றாக வகுப்புகளுக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த எதிரும் புதிருமாக இருந்த இரண்டு குழுக்களுக்கு இடையே கடைசி பெஞ்சுக்காக சண்டை நடக்கிறது. ஒரு குழுவிற்கு அயாஸ் தலைமையும்;, மற்றொரு குழுவிற்கு என்.பி. மற்றும் நிலா (அம்மு அபிராமி) தலைமையுடன் மோதல் இருந்து கொண்டே இருக்கிறது. இவர்களின் மோதலை பார்த்த நிர்வாகம், பள்ளி தேர்தல், பரீட்சை, கல்சுரல்ஸ் நடத்தி அவர்களை பிசியாக வைப்பதால் தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் ஒரு நாள் தீவிரமடைந்து, ஒரு பெரிய மோதலாக மாற சண்டையில் ஈடுபட்டுள்ள குழுக்களில் ஒன்றின் தலைவரான அயாஸை வெளியேற்ற பள்ளி நிர்வாகம் முடிவெடுக்க, சக மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிக்கத் நிர்வாகம் அவர்களை எச்சரித்து விடுவிக்கிறது. அதன் பின்னர் நெருக்கமாக பழகும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பகையை மறந்து நண்பர்களாகின்றனர். இதனிடையே மாணவர்கள் வளாகத்தை சுத்தம் செய்யத் தொடங்கும் போது, அவர்களின் சக மாணவர் ஒருவர் விரைவில் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக எழுதிய கடிதத்தை கண்டெடுக்கிறார்கள். பிரச்சனையில் இருக்கும் மாணவனை கண்டுபிடித்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அனைவரும் அந்த கடிதத்தின் கையெழுத்தை வைத்து வகுப்பறையில் தேடுகின்றனர். கடிதம் எழுதிய வகுப்பு மாணவனை இறுதியில் கண்டுபிடித்தார்களா? அந்த மாணவனின் பிரச்சனையை தீர்;த்தார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் அம்மு அபிராமி, ஆர் ஜே விக்னேஷ்காந்த், அதிர்ச்சி அருண், விவேக் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களாக படம் முழுவதும் ஆக்ரமித்துள்ளனர். இவர்களின் கேலி, கிண்டல், சேட்டைகள் அனைத்தும் ஏற்கனவே அறிந்தவையாக இருந்தாலும் ஒரளவு முதல் பாதியில் சிரிக்க வைத்துள்ளனர்.

இவர்களுடன் விருமாண்டி அபிராமி, சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன், சேட்டை ஷெரீப், மதுரை முத்து,கேபிஒய் பழனி,ஓஏகே சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கியத்துவம் இல்லாமல் வந்து போகின்றனர்.

பள்ளியைச் சுற்றி கதைக்களம் நகர்வதால் அசத்தலான தன் காட்சிக் கோணங்களால் சிறப்பாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீPனிவாசன்.

சந்தோஷ் தயாநிதியின் பாடல்கள், பின்னணி இசை பரவாயில்லை.

2 கே கிட்ஸ் ஜெனரேஷனின் அட்ராசிடிகளை சொல்லும் படமாக எடுத்துள்ளார் ராஜ்மோகன்  ஆறுமுகம். இந்த திரைக்கதையில் மாணவர்களை மட்டுமே பிரதானமாக காட்டி பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் ஆகியோரை பார்வையாளர்களாகவே இருக்கும்படி கொடுத்திருக்கின்றனர். முதல் பாதி நகைச்சுவை, கிண்டல் என்று ஜாலியாக செல்ல, இரண்டாம் பாதி முற்றிலும் மாறுபட்டு தற்கொலை, செண்டிமெண்ட் என்று நம்பமுடியாத காரணங்களையும், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர் ராஜ்மோகன் ஆறுமுகம். மன உளைச்சலால் தற்கொலை எண்ணம் வரும் மாணவர்களுக்கு, உடன் படிக்கும் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனமாக கண்காணித்து தக்க சமயத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கண்டிப்பை அளவாக காட்டி அன்பாக பழக வேண்டும் என்று மெசேஜ் சொல்லியிருப்பவர்கள், மாணவர்கள் பள்ளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பெற்றோர்களிடம் எப்படி பழக வேண்டும் என்ற மெசேஜ் படத்தில் கொடுக்க தவறிவிட்டனர். இந்த காலத்து 2கே கிட்ஸ் என்று காட்டிய விதம் 90ஸ் கிட்ஸ் போல் தான் இருந்தது வித்தியாசம் தெரியவில்லை.

மொத்தத்தில் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், ராகுல் தயாரித்தியிருக்கும் ‘பாபா பிளாக் ஷீப்’ பள்ளி பருவத்தின் இனிய வசந்த கால நினைவலைகள்.