பரிவர்த்தனை திரைப்பட விமர்சனம்:  பரிவர்த்தனை நவீன தடம் மாறும் கலியுக திருமண காதல் | ரேட்டிங்: 2/5

0
318

பரிவர்த்தனை திரைப்பட விமர்சனம்:  பரிவர்த்தனை நவீன தடம் மாறும் கலியுக திருமண காதல் | ரேட்டிங்: 2/5

எம்.எஸ்.வி. புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் பொரி.செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம், ‘பரிவர்த்தனை’.

இதில் சுர்ஜித் – நவீன், சுவாதி – பவித்ரா, ராஜேஸ்வரி – நந்தினி, மோஹித் – சிறு வயது நவீன், ஸ்மேகா – சிறு வயது நந்தினி, பாரதிமோகன் – பண்ணையார், திவ்யஸ்ரீPதர் – பண்ணையார் மனைவி, ரயில் கார்த்தி – முருகேசன் (நவீன் தந்தை) ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :திரைக்கதை, இயக்கம் : எஸ்.மணிபாரதி, ஒளிப்பதிவு : கே.கோகுல், இசை: ரிஷாந்த் அர்வின், எடிட்டிங்: ரோலக்ஸ்,இணை இயக்குனர்: இளமாறன், பாடல் வரிகள்: ஏதி ரகுபதி, நடனம்: தினா,மக்கள் தொடர்பு : மணவை புவன்.

பவித்ரா டாக்டர் நவீனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கணவன் நவீன் ஏன் தன்னிடம் வெறுப்பாக நடந்து கொள்கிறார் என்பது புரியாமல் தவிக்கும் பவித்ரா மனமாற்றத்திற்காக தன் பள்ளி தோழி நந்தினி வீட்டிற்கு செல்கிறார். அங்கே நந்தினி திருமணம் செய்து கொள்ளாமல் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை பார்க்கிறார். அதுமட்டுமில்லாமல் நந்தினி பெற்றோரிடம் பேசாமல் இருப்பதையும் கவனிக்கிறார். பவித்ரா தன் தோழி ஏன் இப்படி வாழ்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார். சிறு வயதிலிருந்தே நந்தினி பள்ளியில் படிக்கும் மாணவனிடம் நட்பாக பழக, அது காதலாக மலர்கிறது. இதை கேள்விப்படும் நந்தினியின் வசதியான பெற்றோர், ஏழை மாணவனுக்கு திருட்டு பட்டம் கட்ட, குடும்பத்துடன் ஊரை விட்டே அந்த மாணவன் சென்று விடுகிறான். இதை கேள்விப்படும் நந்தினி அன்று முதல் திருமணம் செய்து கொள்ளாமல் அந்த மாணவனை நினைத்து வாழ்வதாக கூறுகிறார். இதனிடையே பவித்ரா நந்தினியின் வீட்டில் என் என்று பொறிக்கப்பட்ட பரிசை பார்க்கிறார். அதே பரிசு தன் கணவன் வீட்டிலும் இருப்பதை உணர்கிறார். நவீன், நந்தினி இருவரின் மனநிலையை சரியாக கணிக்கும் பவித்ரா அடுத்து என்ன முடிவு செய்கிறார்? அதற்காக நந்தினியிடம் என்ன சொல்கிறார்? கணவனுக்கும், தோழிக்கும்; நிர்பந்திக்கும் கோரிக்கை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

டாக்டர் நவீனாக சுர்ஜித் மனைவியை தவிர்க்க முடியாமல், காதலியை மறக்க முடியாமல் தவிக்கும் தவிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி, மனைவியின் வற்புறுத்தலை ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற குழப்ப நிலையில் தடுமாறும் இடத்தில் கச்சிதமாக செய்துள்ளார்.

மனைவி பவித்ராவாக சுவாதி கணவனின் அன்பு கிடைக்காமல் பரிதவிப்பது, பின்னர் தோழியின் நிலையறிந்து தடுமாறுவது, இறுதிக் காட்சியில் எதிர்பாராத தீர்க்கமான முடிவு எடுத்து விட்டு வீட்டை விட்டு செல்வது என்று படம் முழுவதும் இவரின் ஆதிக்க நடிப்பு படத்திற்கு பலமாக உள்ளது.

தோழி நந்தினியாக ராஜேஸ்வரி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிகையில்லாமல் நடித்துள்ளார்.

இவர்களுடன் மோஹித் – சிறு வயது நவீன், ஸ்மேகா – சிறு வயது நந்தினி, பாரதிமோகன் – பண்ணையார், திவ்யஸ்ரீதர் – பண்ணையார் மனைவி, ரயில் கார்த்தி – முருகேசன் (நவீன் தந்தை) ஆகியோர் படத்திற்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

கே.கோகுலின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், எழில் கொஞ்சும் இயற்கையையும், நகரத்து வாழ்க்கையையும் தன் காட்சிக் கோணங்களில் உயிர் கொடுத்தள்ளார்.

ர்ஷாந்த் அர்விந்தின் இசை பரவாயில்லை. மற்றும் ரோலக்ஸ் எடிட்டிங் ஒகே ரகம்.

சிதைந்த கணவனின் காதலை மீண்டும் சேர்த்து வைக்கும் மனைவியின் தியாகத்தை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.மணிபாரதி. பொருத்தமான படத்தின் டைட்டிலுடன் மனக்கசப்புடன் வாழ்வதை விட மனதார வாழ்த்திவிட்டு செல்வதை நடைமுறைக்கு சாத்தியமேயில்லாத கதையை தேர்ந்தெடுத்திருந்தாலும், புதிய கோணத்தில் சிந்தித்து முடிந்த வரை முயற்சி செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.மணிபாரதி.

மொத்தத்தில் எம்.எஸ்.வி. புரொடக்‌ஷன்ஸ்; சார்பில் பொரி.செந்திவேல் தயாரித்திருக்கும் பரிவர்த்தனை நவீன தடம் மாறும் கலியுக திருமண காதல்