நதி விமர்சனம்: நதி அரசியல் சாயம் கலந்த தெளிந்த நீரோடை |மதிப்பீடு: 2.5/5

0
259

நதி விமர்சனம்: நதி அரசியல் சாயம் கலந்த தெளிந்த நீரோடை |மதிப்பீடு: 2.5/5

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் தயாரித்திருக்கும் நதி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மு.தாமரைசெல்வன்.
இதில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, வேல ராமமூர்த்தி, ஏ,வெங்கடேஷ், கரு பழனியப்பன், முனிஷ்காந்த், பிரவீன்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு, இசையமைப்பாளர்: திபு நினன் தாமஸ், எடிட்டர்: ஆர்.சுதர்ஷன், வசனங்கள்: லக்ஷ்மி சரவணகுமார்,கலை இயக்குனர்: விஜய் தென்னரசு,நடன இயக்குனர்: தினேஷ், விஜயா ராணி,மக்கள் தொடர்பு : சதீஷ் ஏய்ம்.

மதுரையில் ஆட்டோ ஓட்டும் முனீஸ்காந்த் அவருடைய மகன் தமிழ்(சாம் ஜோன்ஸ்) கல்லூரியிலும் மகள் பள்ளியிலும்  படிக்கின்றனர். கல்லூரியில் ஒன்றாக படிக்கும் பாரதி(கயல் ஆனந்தி) பேட்மிண்டன் வீரரான தமிழுடன் நன்றாக நட்புடன் பழகுகிறார். இவர்களின் நட்பு பாரதியின் சாதி வெறி பிடித்த அரசியல்வாதி பெரியப்பா வேலராமூர்த்தி, அப்பா வெங்கடேஷிற்கு தெரிய வருகிறது. ஏற்கனவே பாரதியின் தாய் மாமன் கரு.பழனியப்பன் அசியல்வாதி வேலராமமூர்த்தியுடன் ஒரே கட்சியில் இருந்தாலும் பெரிய பதவி கிடைக்காத ஆத்திரத்தில் பகையுடன் இருக்கிறார். இவர்களின் நட்பை காதல் என்று தவறாக நினைத்து வேலராமூர்த்தி வேறு ஒரு கொலையை செய்து தமிழை சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்புகிறார். இதை சற்றும் எதிர்பாராத தமிழ் தன் விளையாட்டு, எதிர்காலம், தன் குடும்ப சூழ்நிலை நினைத்து நிலை குலைந்து போகிறார். இதைக் கேள்விப்படும் பாரதி, தமிழை காப்பாற்ற மாமா கருபழனியப்பனிடம் முறையிட்டு தழிழை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார்.அதன் பின் பாரதிக்கும் தமிழுக்கும் நட்பு காதலாக மாறுகிறது.  இருந்தும் பாரதி தமிழை வேலராமூர்த்தி எப்படியும் பழி வாங்குவார் என்று பயப்படுகிறார். வேலராமமூர்த்தியிடமிருந்து தமிழை காப்பாற்ற என்ன முடிவு செய்கிறார்? கரு.பழனியப்பன் பதவிக்காக என்ன சூழ்ச்சி செய்கிறார்? இறுதியில் காதலர்கள் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

கல்லூரி மாணவராக தமிழ் பேட்மிண்டன் விளையாட்டில் கை தேர்ந்தவராகவும், கூச்ச சுபாவத்தால் எளிதாக பழகும் தன்மை இல்லாத கதாபாத்திரத்தில் திறம்பட நடித்துள்ளார். அதன் பின் பாரதியுடன் ஏற்படும் நட்பு அனைத்தையும் மாற்ற எதிர்பாராத சம்பவம் தன் வாழ்க்கையையே புரட்டி போட தைரியத்துடன்,துணிச்சலாக எதிர் கொள்ளும் திறனுடன் களமிறங்கி தன்னுடைய கதாபாத்திரத்திற்கேற்ற உழைப்பை ஆக்ஷனுடன் கொடுத்தள்ளார்.

பாரதியாக கயல் ஆனந்தி தைரியமிக்க பெண்ணாக, வீட்டில் இருக்கும் எதிர்ப்பையும் மீறி வைராக்கியம் கொண்ட பெண்ணாக அசாத்திய துணிச்சலுடன் எடுக்கும் முடிவு இறுதியில் அதிர்ச்சியளிக்கிறது. இவரின் நடிப்பு இப்படத்திற்கு ப்ளஸ்பாயிண்ட்.

வேல ராமமூர்த்தி, ஏ,வெங்கடேஷ், கரு பழனியப்பன் ஆகிய மூவரும்அரசியல் சூழ்ச்சி வில்லன்கள். இவர்களுடன் பாசக்கார தந்தையாக முனிஷ்காந்த் தனித்து நிற்கிறார்.

எம்.எஸ்.பி;ரபுவின் ஒளிப்பதிவு கல்லூரி வளாகம், மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளையும், அரசியல் களம், சிறைச்சாலை ஆகியவற்றை மும்முரமாக கச்சிதமாக படத்திற்கு கேற்ற காட்சிக்கோணங்களை கொடுத்துள்ளார்.

இசை: திபு நினன் தாமஸ், எடிட்டர்: ஆர்.சுதர்ஷன், வசனங்கள்: லக்ஷ்மி சரவணகுமார், கலை இயக்குனர்: விஜய் தென்னரசு ஆகியோரின் திறன்கள் சிறப்பாக படத்தில் வெளிவந்துள்ளது.

மதுரையின் கதைக்களத்தில் யதார்த்தமான சூழ்நிலையோடு விளையாட்டு,  நட்பு. காதல், துரோகம், அரசியல், சாதி, குடும்ப செண்டிமெண்ட் அடிதடி கலந்து திறம்பட திரைக்கதையில் கொடுத்து இறுதியில் எதிர்பாராத முடிவை தந்திருக்கிறார் தாமரைச் செல்வன்.

மொத்தத்தில் மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரித்திருக்கும் நதி அரசியல் சாயம் கலந்த தெளிந்த நீரோடை.