தி ஸ்மைல்மேன் சினிமா விமர்சனம் : தி ஸ்மைல்மேன்; சஸ்பென்ஸ் த்ரில்லர் இந்த சீரியல் கில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
329

தி ஸ்மைல்மேன் சினிமா விமர்சனம் : தி ஸ்மைல்மேன்; சஸ்பென்ஸ் த்ரில்லர் இந்த சீரியல் கில்லர் | ரேட்டிங்: 2.5/5

சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி தயாரித்திருக்கும் தி ஸ்மைல்மேன் படத்தை எழுதி இயக்கியிருக்கின்றனர் சியாம்-பிரவீன்.

இதில் சரத்குமார்- சிதம்பரம் நெடுமாறன், சிஜாரோஸ் – கீர்த்தனா,இனியா- சித்ரா, ஸ்ரீகுமார்- அரவிந்த், சுரேஷ்மேனன் – வெங்கடேஷ, நடராஜன்- பாலமுருகன், ராஜ்குமார்- பிச்சுமணி, மலைராஜன்- ஜோசப், பேபி ஆழியா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்​:- இசை: கவாஸ்கர் அவினாஷ், கதை: கமலா அல்கெமிஸ், ஒளிப்பதிவு: விக்ரம் மோகன், எடிட்டர்: சான் லோகேஷ், நிர்வாகதயாரிப்பாளர் : முகேஷ் சர்மா, ஆடைவடிவமைப்பாளர் : எம் முகமது சுபைர், ஸ்டண்ட்: பிசி ஸ்டண்ட்ஸ், கே கணேஷ் குமார், ;ஒலிவடிவமைப்பு : சதீஷ் குமார், சவுண்ட்மிக்ஸிங் : ஹரிஷ், விஎஃப்எக்ஸ்: ஃபயர் ஃபாக்ஸ், ஒப்பனை: வினோத் சுகுமாரன், வண்ணக்கலைஞர்: லிஜு பிரபாகர், டிஐ :ராங் ரேஸ் மீடியாவொர்க்ஸ், ஸ்டில்ஸ்: வேலு, பப்ளிசிட்டி டிசைன்ஸ் : ரிஷி, வசனங்கள்: பிரதீப் கே விஜயன், மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (ஏய்ம்)

ஓய்வு பெற்ற சிபிசிஐடி அதிகாரியான சிதம்பரம் நெடுமாறன் (சரத்குமார்) ஒரு விபத்தில் ஏற்பட்ட காயத்தால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு ஆண்டிற்குள் அனைத்து நினைவுகளும் மறைந்து போய்விடும் என்ற நிலைக்கு வந்து விட்டதை மருத்துவர் மூலம் தெரிந்து கொள்கிறார். ஞாபக மறதியுடன் அவர் தனது புதிய வாழ்க்கை முறைக்கு மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் போது, ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த வழக்கான ஸ்மைல் மேன் என்ற சீரியல் கில்லர் மீண்டும் அதே பாணியில் தற்போது கைவரிசை காட்டி கொலை செய்வதை பார்க்கிறார். இதே போன்ற கொலைகள் தொடர்கின்றன, சிதம்பரம் வழக்கை மீண்டும் திறக்க வேண்டிய கட்டாயம்; காரணமாக மீண்டும் பணியில் இணைகிறார். அவராலும் அவருடைய குழுவினராலும் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர முடிந்ததா? ஸ்மைல்மேன் யார்? ஏன் இந்த கொலைகள்? ஸ்மைல் மேனுக்கும் சிதம்பரத்திற்கும் என்ன தொடர்பு? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

சரத்குமாரின் 150வது படமான தி ஸ்மைல் மேன் படத்தில் சிபிசிஐடி ஆபிசராக ஒய்வு பெற்ற பின்னும் தன்னால் முடிந்த அளவிற்கு வழக்கிற்கு உறுதுணையாக இருந்து முக்கிய குறிப்புக்களை தந்து கொலையாளியை கண்டு பிடிக்க உதவினாலும், குற்றவாளியை நெருங்கும் நேரத்தில் தன் உடல நல பாதிப்பால் சரிவர நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் இடங்களிலும் சரியாக இயல்பாக நிதானத்தை கடைபிடித்து செய்துள்ளார். ஏதோ யோசனையில் மூழ்கியிருக்கும்படி சரத்குமார் நடிக்கும் விதம் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து படத்தின் அச்சாரமாக திகழ்கிறார்.

காவல் அதிகாரி கீர்த்தனாவாக சிஜாரோஸ் , ஃபளாஷ்பேக் காட்சியில் செவிலியர் சித்ராவாக இனியா, உதவி போலீஸ் சிபிசிஐடி ஆபிசர் அரவிந்தாக ஸ்ரீPகுமார்,சிபிசிஐடி மேலதிகாரி வெங்கடேஷாக சுரேஷ்மேனன், நடராஜன்;, ராஜ்குமார், மலைராஜன், பேபி ஆழியா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளனர். முக்கியமான கதைக்களத்தின் வில்லனாக கலையரசன் அமைதியான மிரட்டலை வெளிப்படுத்தியுள்ளார்.

த்ரில்லர் கதைக்களத்திற்கேற்றவாறு இசை, பின்னணி இசையில் மிரள வைத்துள்ளார் இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ்.

இரவு நேரத்தில் செல்லும் வெள்ளை வேன், அதில் கைகள் கட்டப்பட்ட நிலையில் செல்லும் உடல், கொலையாளி தப்பிக்க எற்படுத்தும் புகை மண்டலம், இறந்த பின் வாயை சிதைத்து சிரித்தபடி இருக்க செய்யும் கொடூரம், போலீசாரின் விசாரணை வளையம், சண்டை, துரத்தல் காட்சிகள் என்று பரபரப்புடன் தன் கேமிரா கோணங்களில் படம் பிடித்துள்ளார் விக்ரம் மோகன்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதியை விறுவிறுப்புடன் கொடுத்துள்ளார் எடிட்டர் ஷான் லோகேஷ்.

வித்தியாசமான கொலைகளை செய்யும் சீரியல் கில்லரை பிடிக்க வியூகம் அமைக்கும் ஒய்வு பெற்ற சிபிசிஐடி ஆபிசர் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை இரட்டை இயக்குனர்களான சியாம்-பிரவீன் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் கவனிக்கதக்க வகையில் கொடுக்க முயற்சித்துள்ளனர்.

மொத்தத்தில் சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி தயாரித்திருக்கும் தி ஸ்மைல்மேன்; சஸ்பென்ஸ் த்ரில்லர் இந்த சீரியல் கில்லர்.