தி வாரியர் விமர்சனம்: தி வாரியர் உயிர் காக்கும் மருத்துவர் போலீஸ் அதிகாரியாக மாறி அதிகாரத்தால் உயிரை வாங்கும் ரவுடியை அடக்கும் ஆக்ஷன் களம் |மதிப்பீடு: 2.5/5
ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீPனிவாஸ் சித்தூரி தயாரித்திருக்கும் தி வாரியர் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் என்.லிங்குசாமி.
இதில் ராம் பொதினேனி, ஆதி பினிஷெட்டி, கீர்த்தி ஷெட்டி, நதியா, அக்ஷரா கவுடா,ஜெயபிரகாஷ், பிருந்தா சாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை: தேவிஸ்ரீ பிரசாத், ,ஒளிப்பதிவு: சுஜீத் வாசுதேவ், கலை : டி ஒய் சத்தியநாராயணா, சண்டை காட்சி : விஜய் மாஸ்டர் அன்பு அறிவு, மக்கள் தொடர்பு: சுரேஷ்சந்திரா, ரேகா.
மதுரை அரசு மருத்துவமனையில் பணி புர்pயும் ராம் பொதினேனி, ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரை காப்பாற்றுகிறார். ஆனால் அந்த ரவுடி கும்பல் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து தாக்கப்பட்டவரை கொன்று விட்டு செல்கின்றனர். இதை தட்டிக் கேட்கத் துடிக்கும் மருத்துவர் ராமை அனைவரும் அமைதிப்படுத்தி ரவுடி குருவைப் பற்றி சொல்கின்றனர். மதுரையையே மிரட்டிக் கொண்டிருக்கும் ரவுடி குருவை எதிர்த்து போராடும் ராம் அவரால் அடித்து நடு வீதியில் கம்பியில் தொங்க விடப்படுகிறார். ராமை காப்பாற்றி விடுகிறார் மருத்துவமனை டீன் ஜெயபிரகாஷ். இரண்டு வருடங்களுக்கு பிறகு போலீஸ் உயர் அதிகாரியாக மதுரைக்கு திரும்பி வருகிறார் ராம். அதன் பின் ரவுடி குருவின் அட்டகாசத்தை அடக்கினாரா? கலவர பூமியாக இருக்கும் மதுரையை அமைதி பூமியாக மாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
தமிழுக்கு அறிமுகமாக வந்திருக்கும் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிப்பு, நடனம், சண்டை என்று பாஸ் மார்க்கில் தேறி விடுகிறார்.
வில்லன் ரவுடி ஆதியாக ஆதி பினிஷெட்டி மிரட்டல் உருட்டல் நடிப்பில் தனித்து நிற்கிறார்.
கீர்த்தி ஷெட்டி அழகான தேவதையாக விசிலிலும், நடனத்திலும் அசத்தி விட்டு போகிறார்.
அம்மாவாக நதியா, அக்ஷரா கவுடா,ஜெயபிரகாஷ், பிருந்தா சாரதி மற்றும் பலர் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் இரண்டு பாடல்களை தாளம் போட வைத்துள்ளார்.
சுஜீத் வாசுதேவ் ஒளிப்பதிவு, டி.ஒய்.சத்தியநாராயணாவின் கலை இயக்கம், விஜய்-அன்பறிவு சண்டை காட்சிகள் படத்திற்கு பக்கபலமாக இருந்து சிறப்பாக செய்துள்ளனர்.
வில்லனை வதம் செய்யும் டாக்டர் போலீஸ் கதையில் கொஞ்சம் காதல், சண்டை கலந்து கலகலப்புடன் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் என்.லிங்குசாமி. பார்த்த காட்சிகள், யூகிக்கக்கூடிய சம்பவங்கள், பழைய ஃபார்மூலாவில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இயக்கியுள்ளார் இயக்குனர் என்.லிங்குசாமி.
மொத்தத்தில் ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாஸ் சித்தூரி தயாரித்திருக்கும் தி வாரியர் உயிர் காக்கும் மருத்துவர் போலீஸ் அதிகாரியாக மாறி அதிகாரத்தால் உயிரை வாங்கும் ரவுடியை அடக்கும் ஆக்ஷன் களம்.