தமிழ்க் குடிமகன் திரைப்பட விமர்சனம் : தமிழ் குடிமகன் குலத்தொழிலை மாற்ற நினைக்கும் இளைஞனின் போராட்டம் | ரேட்டிங்: 3.5/5

0
334

தமிழ்க் குடிமகன் திரைப்பட விமர்சனம் : தமிழ் குடிமகன் குலத்தொழிலை மாற்ற நினைக்கும் இளைஞனின் போராட்டம் | ரேட்டிங்: 3.5/5

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தமிழ் குடிமகன் படத்தை தயாரித்து , எழுதி இயக்கியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

இதில் சேரன் – சின்னசாமி, லால் – சுடலையாண்டி,ஸ்ரீபிரியங்கா – பார்வதி, வேல ராமமூர்த்தி – காந்தி பெரியார், எஸ்.ஏ.சந்திரசேகர் – சுப்பையா, அருள்தாஸ் – இசக்கி, ரவிமரியா – வழக்கறிஞர், ராஜேஷ் – நீதிபதி, மயில்சாமி – வழக்கறிஞர், துருவ – கிட்டு, தீப்ஷிகா – வள்ளி, சுரேஷ் காமாட்சி – அந்தோணிசாமி, மு.ராமசாமி – பேச்சிமுத்து ஆகிய

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை – சாம் சி.எஸ், எடிட்டர் – ஆர்.சுதர்சன், ஸ்டண்ட் – சக்தி சரவணன், நடனம் – தினேஷ், கலை – வீர சமர், அணிகலன்கள் – ரங்கசாமி, பாடல் வரிகள் – விவேகா, சாம் சி.எஸ்., ஏக்நாத், வடிவமைப்பு – தினேஷ் அசோக், ஒலி வடிவமைப்பாளர் – லட்சுமிநாராயணன் ஏ.எஸ்., பிஆர்ஓ – நிகில் முருகன்.

இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் குலத்தொழிலை செய்யும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சின்னசாமி (சேரன்), ஒரு சிறிய கிராமத்தில் அம்மா,தங்கை, மனைவி, மகனுடன் வசிக்கிறார். சேரனுக்கு தனது குலத்தொழிலைச் செய்ய துளியும் விருப்பமில்லை. ஆதிக்கச்சாதியினர் நிரம்பியிருக்கும் கிராமத்தில் இவர் அரசு வேலையில் சேர வேண்டும் என்று முயற்சி செய்ய அவரை தேர்வு எழுத விடாமல் தடுக்கின்றனர். இதனிடையே சின்னசாமியின் தங்கை பண்ணையார் சுடலையின் (லால்) மகனை காதலிக்கிறார். அதிலிருந்து சிக்கல் தொடங்குகிறது, கிராமத்தில் சாதிவெறி திமிர் பிடித்த பண்ணையார் சுடலையும் அவரது மருமகன் எசக்கி (அருள்தாஸ்) சின்னசாமியின் சகோதரியை கடுமையாக தாக்கி அவர்கள் குடும்பத்தை அவமானப்படுத்தி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர்.  அந்தக் காதலில் சில பிரச்சினைகள் எழ மேலும் சுடலையின்அப்பாவும் இறந்து போக இறுதிக் காரியங்கள் செய்ய சேரன் அழைக்கப்படுகிறார். ஆனால், சேரன் இனிஇறுதி காரியம் செய்யும் தொழிலைச் செய்வதில்லை எனச் சொல்லுகிறார். இதனால் பிரச்சனை ஏற்பட கிராம மக்கள் பல தொல்லைகளும் தருகின்றனர். இறுதியில் சேரன் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு குலத் தொழிலை மீண்டும் தொடங்கினாரா? இல்லையா? சிக்கல்களை சமாளித்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சேரன் சின்னசாமியாக ஒடுக்கப்பட்ட இளைஞன் கதாபாத்திரத்தில் ஜாதி அடக்குமறைக்கு எதிராக களமிறங்கி சாதிக்க துடித்திடும் இடங்களில் உயிர்போடு நடித்துள்ளார். லால் சுடலையாண்டியாக வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.ஸ்ரீபிரியங்கா – பார்வதி, வேல ராமமூர்த்தி – காந்தி பெரியார், எஸ்.ஏ.சந்திரசேகர் – சுப்பையா, அருள்தாஸ் – இசக்கி, ரவிமரியா – வழக்கறிஞர், ராஜேஷ் – நீதிபதி, மயில்சாமி – வழக்கறிஞர், துருவ – கிட்டு, தீப்ஷிகா – வள்ளி, சுரேஷ் காமாட்சி – அந்தோணிசாமி, மு.ராமசாமி – பேச்சிமுத்து அகிய சிலர் படத்தில் தெரியாத முகங்கள் என்றாலும் நடிப்பில் அறிந்த முகங்களாக முன்னிறுத்தி  நடிக்க செய்துள்ளனர்.

இசை – சாம் சி.எஸ், எடிட்டர் – ஆர்.சுதர்சன், ஸ்டண்ட் – சக்தி சரவணன், நடனம் – தினேஷ், கலை – வீர சமர் ஆகியோர் படத்திற்கேற்ற பங்களிப்பை முடிந்தவரை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.

குலத்தொழிலை மாற்ற விரும்பும் இளைஞனின் கதையை மற்ற சமூகத்தினர் மாற்ற விடாமல் என்ன சிக்கல்கள் தருகின்றனர், சாதி இழிவு, அடக்குமறையை எவ்வாறு சமாளித்தார்? என்பதையே திரைக்கதையாக அமைத்து இயக்கியுள்ளார் இசக்கி கார்வண்ணன்.சிறந்த நடிகர்களை தேர்வு செய்திருக்கும் இயக்குனர் திரைக்கதையை இன்னும் கவனம் செலுத்தி அழுத்தமாக பதிவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தமிழ் குடிமகன் குலத்தொழிலை மாற்ற நினைக்கும் இளைஞனின் போராட்டம்.