டிரைவர் ஜமுனா விமர்சனம் : அசர வைக்கும் திருப்பங்கள் நிறைந்த சாலையோர த்ரில் கலந்த அனுபவ பயணத்தை சாதகமாக பயன்படுத்தி சாதிக்கும் சாதனைபெண் | ரேட்டிங்: 3.5/5

0
713

டிரைவர் ஜமுனா விமர்சனம் : அசர வைக்கும் திருப்பங்கள் நிறைந்த சாலையோர த்ரில் கலந்த அனுபவ பயணத்தை சாதகமாக பயன்படுத்தி சாதிக்கும் சாதனைபெண் | ரேட்டிங்: 3.5/5

18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில் டிரைவர் ஜமுனா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கின்ஸ்லின்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், அபிஷேக், மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கோகுல் பெனாய், இசை-ஜிப்ரான், எடிட்டர்-ராமர், ஸ்டண்ட்-அனல் அரசு, மக்கள் தொடர்பு-யுவராஜ்.

கால் டாக்சி டிரைவரான தந்தை கொல்லப்பட, அவரின் இழப்பும் குடும்ப சூழ்நிலையும் சேர்ந்து கொள்ள கால் டாக்சி டிரைவராகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நோயாளியான அம்மா, வீட்டை விட்டு ஒடிப்போன தம்பி இந்த சூழ்நிலையில் காரில் வரும் வருமானம் உதவியாக இருக்கிறது. அரசியல் தலைவரான ஆடுகளம் நரேனை கொல்ல கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் கால் டாக்சியில் ஏறுகின்றனர். அதே சமயம் அவர்களை பிடிக்க போலீஸ் கார் செல்லும் இடத்தை கண்டறிந்து துரத்திக் கொண்டு வருகின்றனர். போலீசிடமிருந்து தப்பிக்க கூலிப்டையினர் ஐஸ்வர்யா ராஜேஷை பிணய கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டி காரை வேகமாக ஒட்டச் செய்கின்றனர். இவர்கள் பிடியிலிருந்து ஐஸ்வர்யா தப்பித்தாரா? அரசியல்வாதியை கூலிப்படையினர் கொன்றார்களா? போலீஸ்; இவர்களை பிடித்ததா? ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட மாஸ்டர் பிளான் என்ன? ஐஸ்வர்யா தந்தை எப்படி இறந்தார்? என்பதே க்ளைமேக்ஸ் சொல்லும் கதைக்களம்.

கதையின் நாயகியாக டிரைவர் ஜமுனாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை படம் முழுவதும் வரும் பெண் கார் டிரைவராக யாரும் ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் அதற்கு நூறு சதவீத நடிப்பை கொடுத்து உழைத்திருக்கிறார். இறுக்கமான முகம், சோகமும், மிரட்சியும், பயமும் கலந்த பார்வை, அமைதியாக ஆனால் ஆக்ரோஷமாக, சாமர்த்தியத்துடன் திட்டம் தீட்டி இறுதியில் வில்லன்களை  பழி தீர்த்து சாதிக்கும் காட்சிகளில் கை தட்டல் பெறுகிறார்.

அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன், காமெடிக்கு அபிஷேக், மணிகண்டன் மற்றும் பலர் படத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
காருக்குள்ளேயே நடக்கும் காட்சிகள் அனைத்தையும் தன் கேமிரா கோணங்களால் திறம்பட அமைத்து, ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் பாராட்டுக்குரியவர்.

ஜிப்ரானின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. எடிட்டர் ராமர் பக்குவத்துடன் எதிர்பார்த்த காட்சிகளை அளவுடன் கொடுத்திருக்கிறார். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள் அசர வைத்துள்ளது.

ஆட்டோவை மையமாக வைத்து வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லின் இப்பொழுது காரை மையமாக வைத்து டிரைவர் ஜமுனா படத்தை கொடுத்துள்ளார். எப்பொழுதுமே இறுதிக் காட்சியில் பரபரப்பாக இயக்கும் இவர், இந்தப் படத்திலும் க்ளைமேக்ஸ் காட்சியில் திருப்பங்கள் கொடுத்து முடித்திருப்பது சிறப்பு.  அரசியல் கலந்து தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை பழி தீர்க்கும் மகளின் சூழ்ச்சியை இணைத்து சஸ்பென்சாக வைத்து இறுதிக்காட்சிக்கு வலு சேர்த்துள்ளார் இயக்குனர் கின்ஸ்லின்.

மொத்தத்தில் 18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில் டிரைவர் ஜமுனா  அசர வைக்கும் திருப்பங்கள் நிறைந்த சாலையோர த்ரில் கலந்த அனுபவ பயணத்தை சாதகமாக பயன்படுத்தி சாதிக்கும் சாதனைபெண்.