ஜீவி 2 விமர்சனம் : ஜீவி 2 த்ரில்லிங்கான அனுபவத்தை தரும் த்ரில்லர் படம்! | ரேட்டிங்: 3/5
வெற்றி (சரவணா), கருணாகரன்- (மணி), ரோகிணி (லட்சுமி), மைம் கோபி –(கதிர்), அஸ்வினி – (பார்வையற்ற சரவணன் மனைவி கவிதா), முபாஷிர் – (ஹரி), ஜவஹர் – (ஆதில் முகமது).
ஒளிப்பதிவாளர் – பிரவீன் குமார்.டி.
இசையமைப்பாளர் – சுந்தரமூர்த்தி.கே.எஸ்.
எடிட்டர் – பிரவீன்.கே.எல்.
கலை இயக்குனர் – உமேஷ் ஜே குமார்.
நடன இயக்குனர்-அப்சர்.
ஸ்டண்ட் இயக்குனர் – சுதீஷ்
தயாரிப்பு நிறுவனம் – வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் – சுரேஷ் காமாட்சி
கதை – இயக்கம் – வி.ஜே.கோபிநாத்
மக்கள் தொடர்பு : ஏ.ஜான்.
வெளியீடு: ஆஹாபடத்தில் வரும் கதாநாயகன் ஸ்டார் ஹீரோவாக இல்லாமல் இருக்கலாம். படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படாமல் இருக்கலாம். பிரபல நடிகர்களை திரையில் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் முழுக்க முழுக்க சுவாரஸ்யமான கதையும், திரைக்கதையும் இருந்தால்தான் பார்வையாளர்கள் கவர முடியும். இந்தப் பட்டியலில் ‘ஜீவி’ 2019ல் வித்தியாசமான கதையுடன் வெளியாகி அனைவரையும் கவனிக்க வைத்தது. நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மூணு வருசத்துக்கு அப்புறம் பார்ட் டூ வந்திருக்கு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக ‘மாநாடு’ படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் இந்தப் படத்தோட புரட்யூஸர். ஃபர்ஸ்ட் பார்ட் பார்க்காமல் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ஜீவி-2 படத்தின் கதைக்குள் ஸ்ட்ரெயிட்டா உள்ள வர்றவங்க குழம்பிடக் கூடாது என்பதற்காக, டைட்டில் போடும் போதே ‘வாய்ஸ் ஓவரில்’ முன் கதை சுருக்கம் சொல்லி ஜீவி முடிஞ்ச இடத்துல இருந்து ஜீவி 2 படத்தோட கதை தொடருது.

கொண்டு அவனது திருமண வாழ்க்கையை (வெற்றி) சரவணனுக்கு இருந்த முக்கோண விதி பிரச்னை முடிந்து விடும் என்று நினைத்து கவிதாவை திருமணம் செய்து ஆரம்பிக்கிறார். பேச்சிலர் வாழ்க்கையில் எப்படி வேணாலும் இருக்கலாம்… கல்யாணத்துக்கு அப்புறம், அப்படி இருக்கமுடியுமா.!? ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். அப்படி தொடங்கிய சந்தோஷமான வாழ்க்கைக்குள் திடீரென்று சரவணனின் அக்கா மகளுக்கு இவரின் மனைவியை போலவே கண் தெரியாமல் போகிறது, முடிந்து போன முக்கோண விதி மீண்டும் இவரின் வாழ்க்கைக்குள் தொடருகிறது. மனைவியின் மருத்துவச் செலவைச் சமாளிக்க கார் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கு பெரும் பணம் தேவைப்பட, அப்போது பார்த்து அவரது கார் பழுதாக, மனைவியின் சொத்து கடனில் முழுக, அக்கா மகள் நோயில் விழுவது என பிரச்சினை மேல் பிரச்சினை. மனைவிக்கு கண் ஆபரேஷன், மாமனாருக்கு மருந்து செலவு, மளிகை வாங்க பணம்னு பணத் தேவைகள் கழுத்தை நெருக்குது. மீண்டும் திருட முடிவு செய்து நண்பன் மணியுடன் (கருணாகரன்) சேர்ந்து அப்போதுதான் புதிதாக அறிமுகமான பணக்காரர் முபஷ்ஷிர் வீட்டில் திட்டமிட்டு திருடுகிறார் சரவணன். கொள்ளை நடந்த அடுத்த நாள் முபாஷிர் கொலையாகிக் கிடக்கிறார். அங்கிருந்து தொடர்பியல் ‘விதி’ துரத்த ஆரம்பிக்கிறது. முக்கோண விதி எந்த அளவிற்கு உச்சத்திற்கு சென்றது? இதனை சரவணன் சமாளித்தார? என்பதை தெரிந்து கொள்ள படம் பார்க்க வேண்டும்!
சரவணன் (வெற்றி) கதாபாத்திரத்திற்குள் ஐக்கியம் ஆனாலும் அவரது உடல்மொழி அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தர வில்லை.
கருணாகரன், அஷ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, முபாஷிர், ஜவஹர், அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அத்தனை பேரும் கதைக்கு நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் ஆக்ஷன் (சுதீஷ்), கலை இயக்குனர் (உமேஷ் ஜே குமார்), நடன இயக்குனர் (அப்சர்), எடிட்டிங் (பிரவீன் கே.எல்), ஒளிப்பதிவு (பிரவீன் குமார்) மற்றும் இசை (சுந்தரமூர்த்தி கே.எஸ்) ஆகியோர் பங்களிப்பு சுவாரஸ்யத்தை கூட்டி கூடுதல் பலம் சேர்க்கிறது.
பொருத்தமான கதைக் களத்துடன் ஜீவி 2 இரண்டாம் பாகத்தை மிக விறுவிறுப்பாகவும், க்ளைமாக்ஸ் நெருங்குகையில் மூன்றாம் பாகத்தின் சாத்தியக்கூறுகள் தெளிவாகக் காட்டி இயக்கியுள்ளார் இயக்குனர் கோபிநாத்.
மொத்தத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் ஜீவி 2 த்ரில்லிங்கான அனுபவத்தை தரும் த்ரில்லர் படம்!