ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம் : தீபாவளி சரவெடியாக வெற்றியில் வசூல் வேட்டை | ரேட்டிங்: 4/5
ஸ்டோன் பென்ஞ் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். கதிரேசன் எழுதி தயாரித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இதில் ராகவா லாரன்ஸ் – அல்லியஸ் சீசர், எஸ்.ஜே. சூர்யா – கிருபாய் (அ) ரே தாஸ், நிமிஷா சஜயன் – மலையரசி, இளவரசு – கார்மேகம்,நவீன் சந்திரா – ரத்னா, சத்யன் – துரை பாண்டி, சஞ்சனா நடராஜன் – பைங்கிலி, ஷைன் டாம் சாகோ – ஜெயக்கொடி, அரவிந்த் ஆகாஷ் – சின்னா, அஷ்ரப் மல்லிசேரி – காரியன், வித்து – சேட்டானி ,கபில வேணு – சிந்தாமணி, தமிழ் – ஜோதி, தேனி முருகன் – சங்கையன், பாவா செல்லதுரை – எஸ்.பி.சந்தர்,ஷீலா ராஜ்குமார் – லூர்து, விஷ்ணு கோவிந்த் – முருகன், ஆதித்யா பாஸ்கர் – கோவிந்தன், சுஜாதா – லக்ஷ்மி, ரவி மாஸ்டர் – கதர், மனோஜ் – காளையன், ரத்தினம் – பெரியவர், முத்துப்பாண்டி – மாரி, ஸ்ரீPனி – மதன், பழனி – ரவி, ஜெய்குமார் – சோமு, அசோக் நவீன் – கதிர், யமுனா – ரதி, ராதாகிருஷ்ணன் – முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் : எஸ் திருநாவுக்கரசு, எடிட்டர்: ஷபீக் முகமது அலி, தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி சந்தானம், சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன், கலை இயக்குனர்கள்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன், நடனம்: ஷெரிப் எம், பாபா பாஸ்கர், ஒலி வடிவமைப்பாளர்: குணால் ராஜன், ஒலி கலவை: சுரேன் ஜி, ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா, ஒப்பனை: வினோத் எஸ், உடை-சுபியர், பாடல் வரிகள்: விவேக், முத்தமிழ் ஆர் எம் எஸ், ஸ்டில்ஸ்: எம் தினேஷ், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: எச் மோனேஷ், நிர்வாகத் தயாரிப்பாளர் : அசோக் நாராயணன் எம்,இணை தயாரிப்பாளர்: பவன் நரேந்திரன்,இணை தயாரிப்பாளர்கள் கல் ராமன், எஸ் சோமசேகர், கல்யாண் சுப்ரமணியன், அலங்கார பாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார், பிஆர்ஒ-நிகில் முருகன்.
1970களில் பிரபல ஹீரோ வலம் வரும் ஜெயக்கொடி (ஷைன் டாம் சாகோ) ஆளும் கட்சியில் சேர்ந்து தன் செல்வாக்கின் மூலம் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார். அதே சமயம் அந்த கட்சியில் மூத்த அரசியல்வாதியாக இருக்கும் கார்மேகம்(இளவரசு) தனக்கு போட்டியாக இருப்பதை அறிந்து ஒழித்து கட்டஜெயக்கொடி நினைக்கிறார். அதற்காக தன் தம்பி ரத்னா(நவீன் சந்திரா) மூலம் திட்டம் தீட்டுகிறார். கார்மேகத்திற்கு பக்கபலமாக இருக்கும் ரௌடி அல்லியஸ் சீசரை( ராகவா லாரன்ஸ்) மற்றும் மூன்று பேரை போட்டுத் தள்ளிவிட்டால்; அரசியலுக்கு வருவது சுலபம் என்று நினைக்கிறார்;. அதற்காக இன்ஸ்பெக்டர் தம்பி ரத்னா குற்ற பின்னணி உள்ள நான்கு பேரை தேர்ந்;தெடுத்து கார்மேகத்திற்கு உதவியாக இருக்கும் நான்கு பேரை போட்டுத்தள்ள அனுப்புகிறார். அதில் ஒருவர் தான் இன்ஸ்பெக்டராக ஆசைப்பட்டு கொலை வழக்கில் சிக்கி ஜெயில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் அப்பாவி கிருபாய்(எஸ்.ஜே.சூர்யா) அவர் ரௌடி அல்லியஸ் சீசரை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பப்படுகிறார்.அல்லியஸ் சீசர் தன்னை கிளிண்ட் ஈஸ்ட்வுட்டாக பாவித்து அவரைப் போல் படமெடுக்க இயக்குனரை தேடுவதாக அறிந்து அவரைச் சந்தித்து அல்லியஸ் சீசரின் வாழ்க்கையையே படமெடுப்பதாக கூறி அவரை நம்பவைத்து கிருபாய் – ரே தாஸ் என்று பெயர் மாற்றம் செய்து சேர்ந்து கொள்கிறார். அல்லியஸ் சீசரை முடிக்க எவ்வளவு முயற்சித்தாலும் முடியாத காரியமாக இருக்க, வேறு வழியில்லாமல் காட்டில் யானைகளை வேட்டையாடும் கொடிய வேட்டைக்காரன் சேட்டானியிடம்(வித்து) சண்டையிட்டு ஜெயித்தால் பெரிய மாவீரானாக காட்டி மக்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வரலாம் என்று ரே தாஸ் சொல்வதை நம்பி காட்டிற்கு செல்கிறார் அல்லீயஸ்; சீசர். சேட்டானி யார்? எதற்காக காட்டில் யானைகளை கொள்கிறான்?அவனின் பின்பலம் யார்? அல்லீயஸ் சீசரால் சேட்டானியை கொல்ல முடிந்ததா? அல்லீயஸ் சீசர் என்ன ஆனார்? அவரின் சுயசரிதை படத்தை ரே தாஸ் வெளியிட்டாரா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே கதைக்கரு.
அல்லியஸ் சீசராக ராகவா லாரன்ஸ் பெரிய ரௌடியாக மாஸ் காட்டி அதிர வைக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். கிளிண்ட் ஈஸ்ட்வும் ரசிகராக வலம் வந்து எதிரிகளுக்கு வினோதமாக தண்டனை கொடுக்கும் ஸ்டைல், அனைவரையும் பயமுறுத்தும் இவர் முதல் கருப்பு ஹீரோவாக மாற எடுக்கும் மெனக்கெடல்கள், கேமிராவைப் பார்த்தவுடன் பம்புவது, தன்னைத்தானே பெருமையாக காட்டிக் கொள்வது,நிறைமாத கர்ப்பிணி மனைவியிடம் செல்லமாக சண்டையிடுவது, ஆட்டிப் படைக்கும் எஸ்.ஜே.சூர்யா சொல்வதை நம்புவது என்று முதல் பாதி ஆக்ஷன் களத்துடன், பிற்பகுதியில் மலைவாழ் மக்களுக்காக தன்னுயிரை துச்சமென நினைப்பது என்று அதகளம் பண்ணியிருக்கிறார். நடனம், சண்டை, ஆக்ரோஷம், பாசம் என்று கலந்து கட்டி அசத்தியுள்ளார்.
கிருபாய் (அ) ரே தாஸாக எஸ்.ஜே. சூர்யா ரத்தத்தை பார்த்தவுடன் பயத்தில் மயங்கினாலும் இன்ஸ்பெக்டராக தான் வேலை செய்ய வேண்டும் என்ற லட்சிய நோக்குடன் பயணிக்க, எதிர்பாராத திருப்பம் கொலை தண்டனை அனுபவித்து வாழ்க்கையை புரட்டி போட அதை தனக்கு சாதமாக பயன்படுத்தி தந்திரமாக காயை நகர்த்தி ராகவா லாரன்சை இயக்குனராக இருந்து ஆட்டிப் படைக்கும் வாய்ப்பு கிடைத்ததை சரியாக பயன்படுத்தி வித்தியாசமான முயற்சியில் கதையின் திருப்பங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.இறுதிக்காட்சியில் நச்சென்று மனதில் பதிந்து விட்டார்.
மலையரசியாக ராகவா லாரன்ஸின் கர்ப்பிணி மனைவியாக நிமிஷா சஜயன் படத்தில் ஆங்கங்கே தோன்றினாலும், இறுதியில் வலுவான முடிவுக்கு அடித்தளம் கொடுத்துள்ளார்.
அரசியல்வாதி கார்மேகமாக இளவரசு, கஞ்சா அடித்துக் கொண்டே அதட்டல், வீராப்புடன் வரும் இன்ஸ்பெக்டர் ரத்னாவாக நவீன் சந்திரா , எஸ்.ஜே. சூர்யாவின் நண்பன் துரைபாண்டியாக சத்யன் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களாக வலம் வந்துள்ளனர்.
சேட்டானியாக வித்து ஒரு கண்ணை அரைகுறையாக மூடிக் கொண்டு சேற்றை அள்ளிப் பூசி யானைகளை வேட்டையாடும் இடங்களில் மிரட்டலாக வந்து, மலைமக்களை ஒழிக்க நினைப்பதும், அவருக்கு பின்பலமாக வரும் அரசியல்வாதிகளின் அழுத்தமும் படத்திற்கு ப்ளஸ்.
இவர்களுடன் சஞ்சனா நடராஜன் – பைங்கிலி, ஷைன் டாம் சாகோ – ஜெயக்கொடி, அரவிந்த் ஆகாஷ் – சின்னா, அஷ்ரப் மல்லிசேரி – காரியன், வித்து – சேட்டானி ,கபில வேணு – சிந்தாமணி, தமிழ் – ஜோதி, தேனி முருகன் – சங்கையன், பாவா செல்லதுரை – எஸ்.பி.சந்தர்,ஷீலா ராஜ்குமார் – லூர்து, விஷ்ணு கோவிந்த் – முருகன், ஆதித்யா பாஸ்கர் – கோவிந்தன், சுஜாதா – லக்ஷ்மி, ரவி மாஸ்டர் – கதர், மனோஜ் – காளையன், ரத்தினம் – பெரியவர், முத்துப்பாண்டி – மாரி, ஸ்ரீPனி – மதன், பழனி – ரவி, ஜெய்குமார் – சோமு, அசோக் நவீன் – கதிர், யமுனா – ரதி, ராதாகிருஷ்ணன் – முரளி என்று ஏகப்பட்ட நட்சித்திர பட்டாளங்கள் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.
மதுரையின் துடிப்பான தெருக்களும், கோம்பை சம்பாலாவின் பசுமையான காடுகளும் – இரண்டு மாறுபட்ட உலகங்களை ஒன்றோடொன்று இணைக்கும் கேங்க்ஸ்டர்கள் மற்றும் சினிமா உலகத்தை பின்னிப்பிணைத்த ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான திரைப்படமாகும், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசுவின் ரெட்ரோ பாணியில் சிறப்பான பணி மற்றும் சந்தோஷ் நாராயணனின் அற்புதமான இசையமைப்பால் டபுள் எக்ஸ் காட்சிக்கு பிரமிக்க வைக்கும் படம். கால அமைப்பு படத்தில் நிறைய குறிப்புகளை காட்ட இருப்பினும், இது ஒருபோதும் பெரியதாக உணரமுடியாதவாறு கலை இயக்கம் குழுவினர் சிறப்பாக பணியாற்றி காட்சிப்படுத்தியுள்ளனர்.காட்சிகள் மற்றும் ஒலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வனப்பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள திரைப்படத்தை முற்றிலும் மாறுபட்ட கோணத்தை காட்டியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’ ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு, அசல் படத்துடன் தொடர்புடைய ஒரு சதி கலந்த அரசியல் மசாலா வெஸ்டர்ன் ஸ்டைலுடன் வந்துள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் ஸ்கோர், கார்த்திக்கின் எழுத்து மற்றும் ஷபீக் முகமது அலியின் எடிட்டிங் இந்த மாற்றங்கள் தடையின்றி இருப்பதை உறுதி செய்கிறது. இது சினிமா, அரசியல் மற்றும் குற்றங்களுக்கு இடையிலான புனிதமற்ற தொடர்பைப் பற்றியும் தமிழ்நாட்டின் அப்போதைய அரசியல் சூழ்நிலையையும் இந்தப் படம் பேசுகிறது. இப்படம் இயற்கை பாதுகாப்பு மற்றும் பழங்குடியினரின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பறை சாற்றுகிறது. முதல் பாதியும் இரண்டாம் பாதியும் வேறு களத்தில் பயணிக்கிறது என்றாலும் அதிலும் ஒரு திருப்பத்தை கொடுத்து அதிரடியாக இயக்கி வெற்றி பெற்றுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
மொத்தத்தில் ஸ்டோன் பென்ஞ் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். கதிரேசன் எழுதி தயாரித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மேற்கத்திய கவ்பாய் திரைப்பட பாணியில் துப்பாக்கிவை விட வலுவான ஆயுதம் சினிமா என்பதை சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், தேர்ந்த நடிகர்கள், அழுத்தமான திரைக்கதை, அதிரடியான திருப்பங்கள் கொடுத்து தீபாவளி சரவெடியாக வெற்றியில் வசூல் வேட்டை செய்துள்ளனர்.