செஞ்சி விமர்சனம்செஞ்சி விமர்சனம் : செஞ்சி மர்ம தேசத்தில் புதையல் தேடும் சதுரங்க வேட்டை | ரேட்டிங்: 2.5/5

0
238

செஞ்சி விமர்சனம் : செஞ்சி மர்ம தேசத்தில் புதையல் தேடும் சதுரங்க வேட்டை | ரேட்டிங்: 2.5/5

ஏலியன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்கிரீன் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து செஞ்சி படத்தை தயாரித்துள்ளது.
இதில் கணேஷ் சந்திரசேகர், மாஸ்கோவைச் சேர்ந்த மாடல் கெசன்யா,மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன், மாஸ்டர் தர்சன் குமார், மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா, ஸ்ரீ ரம்யா, யோகிராம், சைஜு கள்ளரா ஆகியோர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். ஹரீஷ் ஜிண்டே ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.வி. முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார். ஆனந்த் மற்றும் உன்னி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளனர். மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்.

மூன்று கோணத்தில் கதை பயணிக்கிறது. முதலாவதாக பிரெஞ்சு கர்னல் சேவியரின் பேத்தி, சோபியா, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு தனது மூதாதையர் வீட்டை வந்தடைகிறாள். அதன் பின் அந்த வீட்டில் எதிர்பாராதவிதமாக ஒரு ரகசிய அறையை பார்க்கிறாள். அந்த அறைக்குள் நிறைய பழங்கால கலைப்பொருட்கள் எல்லாம் இருக்கின்றன. சோபியா அவற்றை ரசித்துப் பார்த்து கொண்டிருக்கும் போது அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. அங்கே ஓலைச் சுவடி சோபியா கையில் கிடைக்கின்றது. அந்த ஓலைச்சுவடியில் ஏதோ ரகசியம் இருப்பதாக தோன்றவே அதை தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை (கணேஷ் சந்திரசேகர்) சந்தித்து இதுபற்றி விவரிக்கிறாள். அவர் பண்டைய வீட்டில் அறியப்படாத புதையலுக்கு வழிவகுக்கும் ரகசிய பனை ஒலைச்சுவடிகளைக் படித்து அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதும் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதை கண்டுபிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அந்த புதையல் இருக்கக்கூடிய இடத்துக்கு போவதற்கான ஒரு வரைபடம் கிடைக்கிறது. அந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின்படி பெண் உதவியாளர் மற்றும் சோபியாவுடன் இணைந்து ஐந்து இடங்களை தேட ஆரம்பிக்கிறார்.  இரண்டாவதாக தீவிரவாதி கும்பல் அடர்ந்த காட்டிற்குள் இருக்க அவர்களை பிடிக்க கமெண்டோ படை அதிரடியாக தேடலை ஆரம்பிக்கிறது. மூன்றாவதாக ஐந்து சிறுவர்கள்  சேட்டைகளை கண்டிக்கும் பெற்றோர்களிடமிருந்து கோபித்துக் கொண்டு காட்டிற்குள் வழி தவறி செல்கின்றனர். இதற்கிடையே அந்த மேப்பை வைத்து, புதையலை தேடும் நபர்கள் எந்;த இடத்திற்கெல்லாம்  சென்றார்கள்? அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தார்கள்? ஜாக்கி, சோபியா அந்த புதையல் இருக்கக்கூடிய இடத்தை கண்டுபிடித்தார்களா இல்லையா? புதையலின் சாவியை கண்டுபிடித்தாலும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் தான் அந்த புதையலை அடைய முடியும் என்பதால் யார் உதவினார்கள்? சிறுவர்கள் மீட்கப்பட்டார்களா? தீவிரவாதியை பிடித்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிகதை.

மாஸ்கோவைச் சேர்ந்த மாடல் கெசன்யா அழுத்தமான கதாபாத்திரத்தில் முக்கிய புள்ளியாக இருக்க,மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன், மாஸ்டர் தர்சன் குமார், மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா ஆகியோர் இணைக்கும் புள்ளிகளாக களமிறங்க அவர்களுடன் ரம்யா, யோகிராம், சைஜு கள்ளரா ஆகியோர் படத்திற்கு மையப்புள்ளியாக இருந்து கதையை நகர்த்தியுள்ளனர்.

எல்.வி.முத்து கணேஷின் இசை மற்றும் பின்னணி இசை, எடிட்டர்ஸ் ஆனந்த் ஜெரால்டு, கிருஷ்ணன் உன்னி, ஒளிப்பதிவாளர் ஹரிஷ் ஜிண்டே ஆகியோர் தங்களது பங்களிப்பை முடிந்தவரை விறுவிறுப்பாக படம் நகர உதவி செய்துள்ளனர்.

இந்தப் படத்தை கணேஷ் சந்திரசேகர் தயாரித்து கதையை எழுதி இயக்கி நடித்திருக்கிறார். மூன்று வித கிளைக் கதைகளாக படம் நகர்ந்து இறுதியில் ஒரே புள்ளியில் இணைத்து படத்தை முடித்திருக்கிறார் கணேஷ் சந்திரசேகர். புதையலைத் தேடி செல்லும் இடம், செஞ்சியின் ரகசிய இடங்கள் இயற்கை வளங்கள், வரலாற்று அதிசியங்கள் என்று தேடித் தேடி படத்தை இயக்கியிருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள். காமிக்ஸ் கதை போல் புதையலை தேடும் ஆராய்ச்சியாளர், எதிர்பாராமல் சிக்கிக்கொள்ளும் சிறுவர்கள், இவர்களை பிணைய கைதிகளாக வைக்கும் தீவிரவாதி என்று மர்மமும், சுவாரஸ்யம் ஆமானுஷ்யம் கலந்த குழந்தைகள் கதைக்களமாக தன்னால் முடிந்த வரை இயக்கியிருந்தாலும் திரைக்கதையில் இன்னும் அழுத்தமாக செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான குறியீடுடன் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரசேகர்.

மொத்தத்தில் செஞ்சி மர்ம தேசத்தில் புதையல் தேடும் சதுரங்க வேட்டை.