சூரகன் விமர்சனம் : சூரகன் துணிச்சலானவன்
தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் சூரகன் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சதீஷ் கீதா குமார்
இதில் கார்த்திகேயன் – ஈகை வேந்தன், சுபிக்ஷா கிருஷ்ணன் – இலக்கியா, சுரேஷ் மேனன் – தேவராஜ், பாண்டியராஜன் – சிதம்பரம், ரேஷ்மா பசுப்புலேடி – லக்ஷ்மி அக்கா, வின்சென்ட் அசோகன் – சேது, மன்சூர் அலிகான் - மாமாமியா, வினோதினி – சித்திரைச் செல்வி, நிழல்கள் ரவி – வரதராஜன், மிப்புசாமி – பிரபா என்று அனைவரும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:- கூடுதல் திரைக்கதை – கார்த்திகேயன், ஒளிப்பதிவு- சதீஷ் கீதா குமார் மற்றும் ஜேசன் வில்லியம்ஸ் , இசை – அச்சு ராஜாமணி, பின்னணி இசை – யனமந்திர ராகவ் , பாடல் வரிகள் – கு.கார்த்திக், திரவ் , எடிட்டர்: ராம் சுதர்ஷன், கலை இயக்குனர் : தினேஷ் மோகன், நடன இயக்கம் :கலைமாமணி ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பாளர் : கீர்த்திவாசன், ஆக்ஷன்-டேஞ்சர் மணி, பிஆர்ஒ- ஏய்ம் சதீஷ்.
இளம் போலீஸ் அதிகாரி ஈகன் (கார்த்திகேயன்) ஒரு விபத்தால் பார்வை குறைபாடு ஏற்பட்டு தலைகீழாக தெரிய ஆரம்பிக்க, அதனால் பணியின் போது தவறுதலாக குற்றவாளியை சுடாமல் ஒரு அப்பாவி பெண்ணை சுட்டு விடுகிறார். இதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தன் அக்கா குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு பெண் அடிபட்டு கிடப்பதை அறிந்து அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். ஆனால் அந்தப்பெண் இறந்து விடுகிறார். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முயலும் போது இறந்த பெண் பணக்காரர் வரதராஜனின்(நிழல்கள் ரவி) பேத்தி என்பதை அறிந்து தகவல்களை சேகரிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்தப்பெண்ணுடன் இருந்த மற்ற இரு பெண்களும் கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணம் யார்? யார் இந்த கொலைகளை செய்தார்கள்? அவர்களை ஈகன் கண்டுபிடித்தாரா? மீண்டும் பணியில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஈகை வேந்தனாக கார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக, துடிப்புடன் இயங்குவதும், குறைபாடு ஏற்பட்டவுடன் துவண்டு விடாமல் துப்பறிவாளராக களமிறங்கி கொலைகாரர்களை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் என்று பரபரவென்று படத்தை நகர்த்த உதவுகிறார்.
இலக்கியாவாக சுபிக்ஷா கிருஷ்ணன் காதலியாக திடீர் திடீரென்று தோன்றுகிறார் காட்சிகள் குறைவு.
சுரேஷ் மேனன் – தேவராஜ், பாண்டியராஜன் – சிதம்பரம், ரேஷ்மா பசுப்புலேடி – லக்ஷ்மி அக்கா, வின்சென்ட் அசோகன் – சேது, மன்சூர் அலிகான் – மாமாமியா, வினோதினி – சித்திரைச் செல்வி, நிழல்கள் ரவி – வரதராஜன், மிப்புசாமி – பிரபா என்று தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுக்குகேற்றவாறு படத்தில் வந்து போகிறார்கள்.
கு.கார்த்திக், திரவ் பாடல் வரிகளுக்கு அச்சு ராஜாமணி இசையும், யனமந்திர ராகவ் பின்னணி இசையும் படத்திற்கேற்ற பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
காட்சிகள் காண்பித்த விதம் கோர்வையாக இல்லாமல் இருப்பதை கூடுதல் கவனம் செலுத்தி சரி செய்திருக்கலாம் எடிட்டர் ராம் சுதர்ஷன்.
தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ஒரு கொலையை துப்பறிய செல்லும் இடத்தில் எதிர்படும் சிக்கல்களை சமாளித்து ஜெயிப்பதை அரசியல் நெடியுடன் அதிரடி ஆக்ஷன் கலந்து இயக்கியுள்ளார் இயக்குனர் சதீஷ் கீதா குமார். கதாநாயகனின் குறைப்பாட்டை முக்கியத்துவம் கொடுக்காமல் முதல் காட்சியிலும், கடைசி காட்சியிலும் மட்டுமே சம்பந்தப்படுத்தி எடுத்துள்ளார். தலைகீழாக தெரியும் காட்சிகளில் ஜேசன் வில்லியம்சுடன் சேர்ந்து ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்துள்ளார். படத்தில் சம்பவங்களை தொடர்ச்சியாக காட்டாமல் துண்டு துண்டாக கதைக்களம் செல்வது போல் இருப்பதை கவனித்து அழுத்தமாக திரைக்கதையை கொடுத்திருக்கலாம் இயக்குனர் சதீஷ் கீதா குமார்.
மொத்தத்தில் தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் சூரகன் துணிச்சலானவன்.