சார்லஸ் எண்டர்பிரைசஸ் சினிமா விமர்சனம் : சார்லஸ் எண்டர்பிரைசஸ் கடவுள் மனிதனாக வந்து பலவிதங்களில் உதவியும், நன்மையையும் எந்த ரூபத்திலும் செய்யலாம் என்பதைச் சொல்லும் படம் | ரேட்டிங்: 2.5/5

0
366

சார்லஸ் எண்டர்பிரைசஸ் சினிமா விமர்சனம் : சார்லஸ் எண்டர்பிரைசஸ் கடவுள் மனிதனாக வந்து பலவிதங்களில் உதவியும், நன்மையையும் எந்த ரூபத்திலும் செய்யலாம் என்பதைச் சொல்லும் படம் | ரேட்டிங்: 2.5/5

சார்லஸ் எண்டர்பிரைசஸ் சினிமா விமர்சனம் :

ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.அஜித் ஜாய் தயாரித்திருக்கும் சார்லஸ் எண்டர்பிரைசஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுபாஷ் லலிதா சுப்ரமணியன்.

இதில் ஊர்வசி – கோமதி, கலையரசன் – சார்லஸ், பாலு வர்கீஸ் – ரவி குமாரசாமி, குருசோமசுந்தரம் – குமாரசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஓளிப்பதிவு- ஸ்வரூப் பிலிப், இசை – சுப்ரமணியன் கே.வி, எடிட்டர் -அச்சு விஜயன், வெளியீடு – யுஎஃப்போ மூவிஸ், மக்கள் தொடர்பு – யுவராஜ்

பெற்றோர்கள் கோமதி (ஊர்வசி) மற்றும் தந்தை குமாரசாமி (குரு சோமசுந்தரம்) பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களின்  பிரபல காபி  ஹோட்டலில் பணிபுரியும் மகன் ரவி (பாலு வர்கீஸ்), இரவில் மங்களான பார்வை குறைபாடு கொண்டவர்.கோமதி (ஊர்வசி) மூதாதையர் கோவிலில் இருந்து மீட்கப்பட்டு, ஒரு பழங்கால விநாயகர் சிலையை பொக்கிஷமாக வைத்து தினசரி சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்து வருகிறார். இதற்கிடையில், இரண்டு தமிழர்கள் – பர்வதம் (அபிஜா சிவகலா) மற்றும் அவரது உதவியாளர் (மணிகண்ட ராஜன்) – பழங்கால சிலையை வாங்குவதற்கு ஒரு இலாபகரமான சலுகையுடன் ரவியை அணுகுகின்றனர். ஆரம்பத்தில் தயங்கிய ரவி சொந்தமாக தொழில் தொடங்கவும், கண் சிகிச்சை பெறவும் பணத்தின் ஆசைக்கு அடிபணிந்து, இதன் விளைவாக, அவர் தனது சொந்த வீட்டிலிருந்து சிலையைத் திருடுகிறார். ஆனால் விரைவில் அதை பர்வதத்திற்கு விற்க முடியாமல் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதற்கு நடுவே, கொச்சியில் பிறந்து வளர்ந்த தமிழரான திருட்டு தொழில் செய்யும் சார்லஸ{டன் (கலையரசன்) நட்பாக பழகுகிறார், இருவரும் சேர்ந்து சிலையை விற்று தங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க நினைக்கின்றனர். அந்தச் சிலையை நல்ல விலைக்கு விற்க பல இடங்களில் மறைமுகமாக பலரிடம் அணுகுகிறார்கள். இறுதியில் அந்த விநாயகர் சிலையை யாரிடம் விற்றார்கள்? கோமதி திருடு போன விநாயகர் சிலையை மீட்டாரா? ரவியும் சார்லஸ{ம் நினைத்ததை சாதித்தார்களா? சார்லஸின் உண்மையான முகம் என்ன? ரவி நண்பனுக்காக என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

பாலு வர்கீஸ் பார்வை குறைபாடுகளை தன் நேர்த்தியான நடிப்பின் மூலமும், பெற்றோர்களின் பிரிவு, வேலையில் பிரச்சனை, புதிய தொழில் தொடங்க சிக்கல் என்ற மனக்குழப்பத்தின் வெளிப்பாட்டை இயலாமையை கச்சிதமான கொடுத்து, சொந்த வீட்டிலேயே திருடிவிட்டு பயப்படும் சாமன்ய இளைஞனின் மனநிலையை அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

ஊர்வசி, குருசோமசுந்தரம் பெற்றோர்களாக வந்தாலும், போதிய நடிப்பை சிறப்பாக கொடுத்திருந்தாலும் அவர்களின் கதாபாத்திரப் படைப்பு பலவீனமானதாக தெளிவாக புரியாத வண்ணம் சித்தரிக்கப்பட்டிருப்பதால் எதிர்பார்த்த நடிப்பை வழங்க முடியவில்லை.

கதையின் டைட்டில் ரோலில் வரும் சார்லஸாக கலையரசன் தன் இயல்பான நடிப்பால் கவனிக்க வைத்துள்ளார். கூடுதலாக, அபிஜா சிவகலா பர்வதமாக குறிப்பிடத்தக்க நடிப்பிற்காக பாராட்டப்பட வேண்டியவர்.

ஓளிப்பதிவு- ஸ்வரூப் பிலிப், இசை – சுப்ரமணியன் கே.வி இருவரின் பங்களிப்பு படத்தின் இயல்பான காட்சிகளுக்கு உத்தரவாதத்தை தருகிறது.

எடிட்டர் -அச்சு விஜயன் மெதுவாக செல்லும் காட்சிகளை விறுவிறுப்பாக்கியிருக்கலாம்.

முதலில் விநாயகர் சிலை வந்த காரணத்தை வரைபடத்தின் மூலமும், பாட்டின் மூலமும் அழகாக சொல்லி தொடங்கும் படம்.அதன் பின் எர்ணாகுளத்தை மையமாக வைத்து, விநாயகப் பெருமானின் பக்தையான சீடருமான கோமதி மற்றும் அவரது மகன் ரவி (பாலு வர்கீஸ்) ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி நகரும் கதைக்களத்தை நட்பு, சிலை கடத்தல் என்று முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் மெதுவாக செல்லும் கதைக்களத்தால் சார்லஸ் எண்டர்பிரைசஸ் திருப்திகரமாக கொடுக்க தவறிவிட்டார் இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன்.

மொத்தத்தில் ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.அஜித் ஜாய் தயாரித்திருக்கும் சார்லஸ் எண்டர்பிரைசஸ் கடவுள் மனிதனாக வந்து பலவிதங்களில் உதவியும், நன்மையையும் எந்த ரூபத்திலும் செய்யலாம் என்பதைச் சொல்லும் படம்.