கேப்டன் திரைவிமர்சனம்: கேப்டன் விசித்திரமான உலகை காட்ட முயற்சிசெய்துள்ளது | ரேட்டிங்: 2.5/5

0
393

கேப்டன் திரைவிமர்சனம்: கேப்டன் விசித்திரமான உலகை காட்ட முயற்சிசெய்துள்ளது | ரேட்டிங்: 2.5/5

Think Studios நிறுவனம் நடிகர் ஆர்யாவின்  The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கேப்டன் திரைப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.

இதில் ஆர்யாஇ ஐஸ்வர்யா லெக்ஷ்மிஇ சிம்ரன்இ காவ்யா ஷெட்டிஇ ஹரிஷ் உத்தமன்இ மாளவிகா அவினாஷ்இ சுரேஷ் மேனன்இ அம்புலி கோகுல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-  இசை-டி.இமான், ஒளிப்பதிவு -எஸ்.யுவா, எடிட்டிங்- பிரதீப் – ராகவ், பிஆர்ஒ-சுரேஷ்சந்திரா.

செக்டார் 42 தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் பல வருடங்களாக யாரும் நுழைய முடியாதபடி உள்ளது. அங்கே செல்பவர்கள் மர்மமான முறையில் இறப்பதால், இதை கண்டறியும் வேலையை ராணுவ அதிகாரி ஆர்யாவிடம் ஒப்படைக்கப்படுகிறது.தன் குழுவுடன் செல்லும் போது விசித்திரமான உயிரினங்களால் தாக்கப்படுகின்றனர். இதில் ஆர்யாவின் நண்பர் ஹரிஷ் உத்தமன் இறக்க, அங்கு மினோட்டர்கள் (விசித்திரமான உயிரினங்கள்) இருப்பதையும்இ அதன் காரணமாக அங்கு செல்பவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்பதையும் ஆர்யா உணர்கிறார். விஞ்ஞானி சிம்ரன்இ ராணுவ வீரர்களின் மரணத்தின் பின்னணியில் மறைந்துள்ள காரணத்தைக் கண்டறிய ஆர்யாவிடம் உதவி கேட்கிறார். இஇருவரும் அவரது குழுவுடன் சேர்ந்துஇ  மினோட்டர்இ அதன் வரலாறு மற்றும் உயிரினங்களைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழியைக் கண்டறியும் திட்டத்தை உருவாக்குகிறார்கள். ஆர்யா தனது உயிரை பணயம் வைத்து மினோட்டர்களை எப்படி எதிர்கொண்டார்? அந்த விசித்திரமான உயிரினங்களின் தலைமை யார்? ராணுவ அதிகாரிகள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்ள மினோடார்ஸ் என்ன செய்கிறார்கள்? விஞ்ஞானி சிம்ரன் செய்த ஆராய்ச்சி என்ன? என்பதே க்மைமேக்ஸ்.

ஆர்யா ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்க கடுமையாக  பயிற்சி செய்திருப்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது. அவரது உழைப்பும், கடின முயற்சியும் ஆகஷன் காட்சிகளில் புலப்படுகிறது. இந்தப் படத்தில் அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக செய்துள்ளார்.

ஆர்யாவின் காதலியாக ஐஸ்வர்யா லட்சுமி சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார்.

சிம்ரன் குறைவான காட்சிகளில் தோன்றினாலும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார்.

மற்றும் ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, பரத் ராஜ் மற்றும் கோகுல் ஆகியோர் படத்திற்கு முக்கிய பங்களிப்பை தந்து அழுத்தமாக மனதில் பதிகின்றனர். டி. இமான் பின்னணி இசையில் அதிர வைத்துள்ளார். எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை.

ஹாலிவுட் பட பாணியில் மனிதர்களுக்கும் விசித்திர உயிரினங்களுக்கும் நடுவே நடக்கும் சண்டையை மையமாக வைத்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர் ராஜன். ஆறிவியல் கலந்த கற்பனை கதையை உருவாக்க நவீன தொழில்நுட்பம் மிக அவசியம்.இல்லையென்றால் அவை காட்சிப்படுத்தலில் சறுக்கல்கள் ஏற்படும். காட்சிகளில் விறுவிறுப்பு, பிரம்மாண்டம், வித்தியாசம் எல்லாம் இன்னும் சிறப்பாக செய்திருந்தால் அழுத்தமான கதையாக மனதில் பதிந்திருக்கும். இருந்தாலும் எடுத்திருக்கும் முயற்சிக்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில்  Think Studios மற்றும் The Show People  இணைந்து தயாரித்துள்ள கேப்டன் விசித்திரமான உலகை காட்ட முயற்சிசெய்துள்ளது.