கூகுள் குட்டப்பா விமர்சனம்: கூகுள் குட்டப்பா குழந்தைகளோடு குடும்பத்துடன் சென்று பார்க்கலாம், ரசிக்கலாம் | ரேட்டிங் – 2.5/5

0
187

கூகுள் குட்டப்பா விமர்சனம்: கூகுள் குட்டப்பா குழந்தைகளோடு குடும்பத்துடன் சென்று பார்க்கலாம், ரசிக்கலாம் | ரேட்டிங் – 2.5/5

ஆர்.கே.செல்லூலாயிட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்திருக்கும் கூகுள் குட்டப்பா படத்தில் யோகிபாபு, தர்ஷன், லாஸ்லியா, பவித்ரா லோகேஷ், சுரேஷ் மேனன், மனோபாலா, மாரிமுத்து, சி.ரங்கநாதன், பிராங்ஸ்டர் ராகுல், பூவையார், சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சபரி மற்றும் சரவணன் ஆகிய இருவர் இயக்கியுள்ளனர். ஜிப்ரான் இசையில், அர்வி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பை பிரவின்ஆண்டனி கவனித்துள்ளார். கலை இயக்குனர்-சிவக்குமார், தலைமை தயாரிப்பு மேற்பார்வை-பி.செந்தில்குமார், ஒலி வடிவமைப்பு-கிருஷ்ணன் சுப்ரமணியன், பாடல்கள்-விவேகா, மதன்கார்க்கி, அறிவு, பாடகர்கள்:-ஜி.வி.பிரகாஷ்குமார், அறிவு, ஷிவாங்கி கிருஷ்ணகுமார், கோல்டு தேவராஜ், அரவிந்த் சீனிவாஸ், தீப்தி சுரேஷ், நடனம்- சேண்டி, விஜி, சண்டை-ரமேஷ், ஆடை வடிவமைப்பு -கவிதா, மூர்த்தி, மேக்கப்-கோதண்டபாணி, ரோபோ வடிவமைப்பு-பர்ஷன் பாசு, மக்கள் n;தாடர்பு-யுவராஜ்.

கோயம்பத்தூரில் வசிக்கும் கே.எஸ்.ரவிக்குமார் ரோபோடிக் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ள தன் மகன் தர்ஷனை விட்டு பிரிய மனமில்லாமல் வெளிநாடு சென்று வேலை செய்யவும் தடை போடுகிறார். தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மனி செல்லும் தர்ஷன், அங்கே தன் தந்தைக்கு உதவியாக ரோபோ ஒன்றை கம்பெனி சார்பில் அனுப்புகிறார். முதலில் எதிர்ப்பு தெரிவிக்கும் கே.எஸ்.ரவிக்குமார், வேறு வழியில்லாமல் அதனுடன் நாட்களை கடத்த, பின்னர் ரோபோவின் செயல்களை கண்டு மனம் மாறி கூகுள் குட்டப்பா என்று பெயர் சூட்டி மகன் போல் பாச மழை பொழிந்து பார்த்துக் கொள்கிறார். ஜெர்மன் கம்பெனி ரோபோவின் செயல்பாடுகள் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து தர்ஷனை இந்தியாவிற்கு அனுப்பி கூகுள் குட்டப்பா ரோபோவை திரும்ப எடுத்துவர சொல்கின்றனர். இந்தியாவிற்கு திரும்பும் தர்ஷன் தன் தந்தை கூகுள் குட்டப்பாவின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதையும், அதை விட்டு பிரிய மறுப்பதையும் அறிந்து அதிர்ச்சியாகிறார். இறுதியில் ரோபோ கூகுள் குட்டப்பாவை ஜெர்மனிக்கு எடுத்துச் சென்றாரா? தந்தையின் மனதை மாற்றினாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

கே.எஸ்.ரவிக்குமார் வயதான தோற்றத்தில், நடை, உடை, பாவனையில் அச்சு அசலாக உருமாறி தனிமையின் கொடுமையை மகனுக்கு எடுத்துரைத்து, பின்னர் மகனின் ஆசையை நிறைவேற்றி, ரோபோவிடம் மகன் பாசத்தை காட்டும் காட்சிகளிலும், முதுமையில் முடிந்த போக காதலை வெளிப்படுத்தும் விதத்திலும் தத்ரூபமாக நடித்து கை தட்டல் பெறுகிறார்.

இவருடன் யோகிபாபு, தர்ஷன், லாஸ்லியா, பவித்ரா லோகேஷ், சுரேஷ் மேனன், மனோபாலா, மாரிமுத்து, சி.ரங்கநாதன், பிராங்ஸ்டர் ராகுல், பூவையார், சுஷ்மிதா ஆகியோர் நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இசை-ஜிப்ரான், ஒளிப்பதிவு-அர்வி, படத்தொகுப்பு-பிரவின்ஆண்டனி, கலை இயக்குனர்-சிவக்குமார் ஆகியோர் படத்தின் விறுவிறுப்பை குறையாமல் பார்த்துக்கொள்கின்றனர்.

2019ல் வெளியான மலையாள படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 என்ற படத்தின் ரீமேக்; தான்; கூகுள் குட்டப்பா. தனிமையில் வாடும் வயதானவர் எவ்வாறு தன்னுடைய ஆதாங்கங்களை வெளிப்படுத்தி நடந்து கொள்ளும் விதத்திலும், அதற்கு மாற்றாக வரும் ரோபோவை தன் மகனாக கருதும் மனப்பான்மை, அதுவே வாழ்க்கையாக வாடிக்கையாக்க முடியாது அது வெறும் இயக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தை சார்ந்த இயந்திர செயலிதான் என்பதை உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கும் கதையில் சமரசம் இல்லாமல் மலையாள படத்தை போன்றே இயக்கியுள்ளனர் சபரி மற்றும் சரவணன் ஆகிய இருவர்.

மொத்த்தில் ஆர்.கே.செல்லூலாயிட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கும் கூகுள் குட்டப்பா குழந்தைகளோடு குடும்பத்துடன் சென்று பார்க்கலாம், ரசிக்கலாம்.