குலுகுலு விமர்சனம்: உணர்ச்சிகளும், நகைச்சுவையும் சமஅளவில் கொடுக்க முயற்சிக்கும் கடத்தல் பயணத்தில் குலுகுலுவென்று செல்கிறது | ரேட்டிங்: 3/5
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரத்னகுமார்.
இதல் சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தோழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், இசை – சந்தோஷ் நாராயணன், எடிட்டிங்: பிலோமின் ராஜ், பிஆர்ஒ : யுவராஜ்.
அமேசான் காட்டுப் பகுதி பழங்குடி மக்களை சிலர் துன்புறுத்தி அழைத்துச் செல்ல சிறு வயது சந்தானம் அதிலிருந்து தப்புகிறார். நாடு நாடாக சுற்ற,p போகும் இடத்தில் அந்தந்த மொழிகளை கற்றுக்கொண்டு வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரிந்து கடைசியாக சென்னையில் வந்து வசிக்கிறார்.கூகுள் என அழைக்கப்படும் சந்தானம் யார் உதவி கேட்டாலும் ஒடோடி வந்து செய்பவர். 13 மொழிகளைப் பேசும் திறமை கொண்ட சந்தானத்திற்கு தமிழும், தமிழகமும் பிடித்துப் போவதால் இங்கேயே தங்கி பலருக்கு உதவிகள் செய்து பாராட்டும் உபத்திரவம் என்று திட்டும் வாங்கி தன் மனம் போன போக்கில் வாழ்கிறார். இந்நிலையில் நண்பனை யாரோ கடத்திவிட்டதாக மூன்று இளைஞர்கள் வந்து சந்தானத்திடம் உதவி கேட்க நால்வரும் இணைந்து காணாமல் போனவரைத் தேட அந்தப் பயணத்தில் காணாமல் போனவரின் காதலியும் இணைகிறார். இது ஒருபுறமிருக்க இறந்து போகும் கோடீஸ்வர அப்பாவிற்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவியின் மகள் பிரான்சிலிருந்து இவரின் இறுதிச் சடங்கிற்கு வர, சொத்தில் பங்கு கேட்டு வந்து விடுவாளோ என்கிற பயத்தில் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிடும் இரு அண்ணன்கள். இந்த சம்பவதிற்குள் சந்தானம் எப்படி வந்தார்? என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? அந்த பெண்ணை காப்பாற்றினாரா? காணாமல் போனவரை சந்தானம் கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதே மீதக்கதை.
சந்தானம் கூகுள் மாரியோவாக பழங்குடி இனத்தின் பிம்பமாக தன்னுடைய அடையாளம், மொழியை தொலைத்து பலவித நாடுகளில் பயணித்து இறுதியாக தமிழகத்திற்கு வந்து உதவிகள் செய்யும் நல்ல உள்ளன்பு கொண்ட யாருமே இந்த கெட்டப்பில் வந்திராத வித்தியாசமான கதாபாத்திரம். புடபடவென்று பேசி கவுன்டர் கொடுக்காமல் அமைதி, அதிர்ந்து பேசாத வசனங்கள் குறைவு என்றாலும் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்.
இவருடன் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, பிபின், ஹரிஷ், கவி ஜெ.சுந்திரம், மௌரிஷ், யுவராஜ், டி எஸ்ஆர், முருககனி, தர்ஷன், சேசு, மகாநதி சங்கர், லொல்லு சபா மாறன் ஆகியோர் படத்தின் இன்றியமையாத பயணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
தி பாடகியின் ஒரு பாடல் அசத்துவதுடன், சந்தோஷ் நாராயணனின் இசையும் கவனிக்கும்படி செய்துள்ளார்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் படஓட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
காணாமல் போன நண்பனை தேடுதல், தங்கையை கொலை செய்ய துரத்தும் அண்ணன்கள், கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் தனித்துவத்தைக் கொண்டுள்ளது, தனிக்கதையாக கிளைக்கதைகளோடு பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை கதையோடு பயணிப்பதால் சில இடங்களில் சுவாரஸ்யமாகவும், சில இடங்களில் தேவையற்றவையாகவும் உள்ளது. படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் கலவையாக புதுவித அனுபவத்தை கொடுக்கும் விதமாக இயக்கியிருக்கும் ரத்னகுமார் அவையெல்லாவற்றையும் இணைக்கும் பாலத்தை இன்னும் சுவாரஸ்யமும், திரைக்கதையை விரிவாக சொல்லியிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் உணர்ச்சிகளும், நகைச்சுவையும் சமஅளவில் கொடுக்க முயற்சிக்கும் கடத்தல் பயணத்தில் குலுகுலுவென்று செல்கிறது.