குருமூர்த்தி விமர்சனம் : குருமூர்த்தி நேர்மையான கடமையே கண்ணான போலீஸ் அதிகாரியின் தேடுதல் பயண வேட்டை | ரேட்டிங்: 2.5|5

0
227

குருமூர்த்தி விமர்சனம் : குருமூர்த்தி நேர்மையான கடமையே கண்ணான போலீஸ் அதிகாரியின் தேடுதல் பயண வேட்டை | ரேட்டிங்: 2.5|5

பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரித்துள்ள இந்தப் படத்தை கே.பி. தனசேகர் இயக்கியுள்ளார்.
இதில் நட்டி, பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ், பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா,யோகிராம்,சஞ்சனா சிங், அஸ்மிதாமற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-தேவராஜ்,இசை-சத்யதேவ் உதயசங்கர், படத்தொகுப்பு-எஸ்.என்.பாசில், பிஆர்ஒ-சக்தி சரவணன்.

மலை பிரதேசத்தில் வீடு வாங்க ராம்கி 5 கோடி கருப்பு பணத்தை எடுத்துச் செல்லும் போது காணாமல் போகிறது.  அந்தப் பணத்தை மூன்று பேர் திருடிச் சென்று விடுகின்றனர். இந்தப் பணத்தை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி,  ஏட்டு மனோபாலா, டிரைவர் ரவிமரியா ஆகியோர் திருடர்களை கண்டுபிடிக்க செல்கினறனர். போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் பணத்தை திருடர்களால் ஒரே இடத்தில் மறைத்து வைக்க முடியாமல் போக, பணப்பை பல பேரிடம் கை மாறுகிறது. இறுதியில் நட்டி திருடியவர்களை கைது செய்தாரா? யாரிடம் பணம் இருந்தது? ராம்கி கையில் பணம் ஒப்படைக்கப்பட்டதா? நட்டி மனைவியின் பிரசவத்திற்கு செல்ல முடிந்ததா? என்பதே மீதிக்கதை.

இன்ஸ்பெக்டர் குரூமூர்த்தியாக நட்டி, விரைப்பு,முறைப்பு, கண்டிப்புடன் அழுத்தமான பொருத்தமான கதாபாத்திரத்தில் உருட்டல் மிரட்டலுடன் மிகையில்லா நடிப்பை கொடுத்து நியாயம் செய்திருக்கிறார்.

மனைவி தமிழரசியாக பூனம் பாஜ்வா ஆடல், பாடல், காதல் என்று நெருக்கம் காட்டி அதன் பின் பிரசவத்தில் தன் கணவனை எதிர்பார்த்து வலியோடு துன்பப்படும் பெண்ணாக சிறிய பங்களிப்பை கொடுத்துள்ளார்.

ராம்கி பணத்தை பறி கொடுக்கும் பணக்காரராக படத்தின் நடுவே தோன்றி தோன்றி மறைந்தாலும், அதற்கான காரணம் இறுதிக் காட்சியில் கொடுத்து புரிய வைத்திருக்கிறார் இயக்குனர். மற்றும் ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா பணத்தை கைப்பற்ற குணம் மாறும் மனிதர்களாகவும் மற்றும் குடுகுடுப்பைக்காரராக ஜார்ஜ் ஆகியோர் படத்தில் வலம் வந்துள்ளனர்.

ஒளிப்பதிவு-தேவராஜ், இசை-சத்யதேவ் உதயசங்கர், படத்தொகுப்பு-எஸ்.என்.பாசில் ஆகியோர் பட்ஜெட்டிற்குகேற்ற ரம்யமான காட்சிகளையும், பாடல்களையும் கொடுத்து நியாயம் செய்துள்ளனர்.

காணாமல் போன பணத்தை கைப்பற்ற நினைக்கும் நபர்களிடமிருந்து பணத்தை மீட்கும் போலீஸ்காரர் கதையில் கொஞ்சம் குடும்ப சென்டிமெண்ட், கமர்ஷியல் கலந்து வரி செலுத்தும் பொதுநலனையும் உள்ளே நுழைத்து கலகலப்பாக இயக்க நினைத்திருக்கிறார் கே.பி. தனசேகர்.

மொத்தத்தில் பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரித்துள்ள குருமூர்த்தி நேர்மையான கடமையே கண்ணான போலீஸ் அதிகாரியின் தேடுதல் பயண வேட்டை.