குண்டான் சட்டி விமர்சனம் : சட்டி திரையரங்குகளில் குழந்தைகளை அழைத்து சென்று குடும்பத்துடன் குதூகலமாக ரசித்து மகிழக்கூடிய அனிமேஷன் படம் | ரேட்டிங்: 2.5/5

0
269

குண்டான் சட்டி விமர்சனம் : சட்டி திரையரங்குகளில் குழந்தைகளை அழைத்து சென்று குடும்பத்துடன் குதூகலமாக ரசித்து மகிழக்கூடிய அனிமேஷன் படம் | ரேட்டிங்: 2.5/5

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர்.எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் குண்டான்;சட்டி என்ற குழந்தைகள் ரசிக்கக்கூடிய 2டி அனிமேஷன் தொழில்நுட்பத்தை கையாண்டு திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் 12 வயது மாணவி பி.கே.அகஸ்தி.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை வசனம் பாடல்கள்- அரங்கன் சின்னத்தம்பி, இசை- எம்.எஸ்.அமர்கீத், எடிட்டிங்- பி.எஸ். வாசு, மக்கள் தொடர்பு-வெங்கட்

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் இருவரும் நண்பர்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் முடிந்து ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கிறது. இருவரும் தங்கள் மகன்களுக்கு குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் வைக்கிறார்கள். அவர்கள் தோற்றத்தையும் பெயரையும் வைத்து பள்ளியில் கேலி செய்ய, வருத்தப்படும் அவர்களுக்கு நன்றாக படித்து நல்ல பெயர் எடுத்தால் தானாக சரியாகிவிடும் என்று தாயார் அறிவுரை கூற அதன்படி படிக்கிறார்கள். அவர்களது கிராமத்தில் இருக்கும் கோவில் அர்ச்சகர் கோவில் நிலத்தை குத்தகை விட்டு எந்த வருவாயும் வரவில்லை அதனால் கஷ்டப்படுவதாக தெய்வத்திடம் புலம்புவதை ஒட்டு கேட்கும் குண்டானும், சட்டியும் அதற்காக ஒரு திட்டம் போடுகின்றனர். கோவில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரையும் புத்திசாலிதனமாக ஏமாற்றி அத்தனையையும் எடுத்து வந்து கோயில் அர்;ச்சகரிடம் ஒப்படைக்கின்றனர். இதனால் கோபமடையும் பண்ணையார் குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரியபடுத்தி எச்சரிக்கிறார்.இருவரும் செய்யும் சேட்டைகள் குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவருகிறது. அதே சமயம் குப்பனும், சுப்பனும் மூங்கில்களை வெட்ட அதனை உதவி செய்வதாக நினைத்து குண்டானும், சட்டியும் ஆற்றில் போட்டு விட, அத்தனை மூங்கில்களும் தண்ணீரில் அடித்து செல்ல, இருவரின் தந்தைகளுக்கும் வேலை பறி போகிறது.இதனால் கோபமடையும் குப்பனும் சுப்பனும் பள்ளி விடுமுறையின் போது குண்டானையும், சட்டியையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விடுகிறார்கள். ஆற்றில் அடித்துச் செல்லும் இருவரும் வழியில்  வாழைத்தோப்புக்காரர் காப்பாற்ற அங்கேயும் வழைப்பழங்களை சாப்பிட்டுவிட்டு தோப்பையையே காலி செய்ய, அங்கிருந்து செல்லும் இருவரும் சலவை தொழிலாளியிடம் கழுதையையும் துணியையும் எடுத்து வந்து விட, அந்த துணிகளை மரத்தில் காயப்பட்டு அதிசய மரம் என்று வணிகனிடம் குதிரையுடன் பத்தாயிரம் காசுகளையும் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் அதிசய கழுதை என்று  பேராசை கிராமத்து மக்களை ஏமாற்றி ஒரு லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வழியில் இத்தனை பேரையும் புத்திசாலித்தனத்தால் ஏமாற்றி பணத்துடன் குதிரையில் ஏறி தங்கள் ஊருக்கு குண்டானும் சட்டியும் வந்து சேர்கிறார்கள். குண்டானும், சட்டியும் மீண்டும் ஊருக்குள் வர பெற்றோர்களுக்கு மகன்கள் திரும்பி வந்த சந்தோஷம் ஒரு புறம் இருக்க, அவர்கள் கையில் பணம் இருப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டு விசாரிக்க, நடந்தவைகளை கூறும் இருவருக்கும் அறிவுரை கூறி பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு அந்த பணத்தை கொடுத்து குப்பனும், சுப்பனும் உதவி செய்கின்றனர்.  இவர்களால் பாதிக்கப்பட்ட பண்ணையார், சேட்டு, வியாபாரி மூவரும் இவர்கள் இருவரும் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து அடியாட்களை அனுப்பி தூக்கி வரச் சொல்ல, அடியாட்கள் அவர்களை அழைத்து செல்வதைப் பார்த்த அணில் கோயில் அர்ச்சகளையும் மற்றும் வாத்தியார் பெற்றோருக்கு தெரியப்படுத்த குண்டானும், சட்டியும் காப்பாற்றப்பட்டார்களா? குண்டான் மற்றும் சட்டியின் நல்ல குணத்தை மக்கள் அறிந்தார்களா? பெற்றோர்கள் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை கண்டு வியந்தார்களா? என்பதே குண்டான் சட்டியின் கதை.

அரங்கன் சின்னத்தம்பியின் பாடல்களான சிட்டுக்குருவி போல வட்டம் அடிப்போம்,ஓட ஓட விரட்டிப் பிடிப்போம், குண்டான் சட்டி ஆகிய மூன்று பாடல்களை ஸ்ரீராம், வித்யூத் ஸ்ரீனிவாஸ் குழந்தைகளின் மனதில் பதியும் அளவிற்கு அழுத்தமான பதிவாக கணீர் குரலில் பாடியதை எம்.எஸ்.அமர்கீத் சிறப்பாக இசையமைத்துள்ளார்.

எடிட்டிங்- பி.எஸ் படத்திற்கு பலம், அதுமட்டுமில்லாமல் படத்தின் 2டி அனிமேஷன் வேலைகளை தத்ரூபமான நுணுக்கமான காட்சிகளை கண்களுக்கு விருந்து படைத்து படத்திற்கு உயிர் கொடுத்துள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டுக்கள்.

சிறு வயதிலேயே கதை எழுதும் திறனுடன் குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் அதை படைத்திருக்கும் 5ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி பி.கே.அகஸ்தி இயக்கிய படம்”குண்டான் சட்டி”. மகளின் சிந்தனையில் உருவான கதை எழுதும் திறனை பார்த்து வியந்து அதனை தயாரித்திருக்கிறார் தந்தையும் தயாரிப்பாளருமான டாக்டர்.எஸ்.ஏ கார்த்திகேயன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களின் வாழ்க்கையில் குறும்புத்தனங்களால் நடக்கும் சம்பவங்கள், அதனால் ஏற்படும் அசம்பாவிதங்கள், புத்திசாலித்தனத்துடன் அவர்கள் செய்யும் சுவாரசியமான விஷயங்கள் மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும், எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், அனைவருக்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்று விஷயங்களையும், பெற்றோர்கள் குழந்தைகள் தவறு செய்தால் பொறுமையாக அறிவுரை கூற வேண்டும் தண்டனை கொடுப்பது தீர்வாகாது என்பதை குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் இயல்பாகவும் நேர்த்தியாகவும் கதையை எழுதி சொல்லியிருக்கிறார் மாணவி பி.கே.அகஸ்தி. மாணவர்களிடம் வாழ்வியலை கற்பிக்கும் ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்பதை சொல்லும் படம்.

மொத்தத்தில் செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர்.எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் குண்டான் சட்டி திரையரங்குகளில் குழந்தைகளை அழைத்து சென்று குடும்பத்துடன் குதூகலமாக ரசித்து மகிழக்கூடிய அனிமேஷன் படம்.