கிங் ஆஃப் கொத்தா திரைப்பட விமர்சனம் : கிங் ஆஃப் கொத்தா டான்களின் ராஜ்ஜியத்தில் நட்புடன் மாஸ் கலந்து இடைவிடாமல் கொடுக்கும் ஆக்ஷன் விருந்து | ரேட்டிங்: 3/5

0
355

கிங் ஆஃப் கொத்தா திரைப்பட விமர்சனம் : கிங் ஆஃப் கொத்தா டான்களின் ராஜ்ஜியத்தில் நட்புடன் மாஸ் கலந்து இடைவிடாமல் கொடுக்கும் ஆக்ஷன் விருந்து | ரேட்டிங்: 3/5

வேஃபேரர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள  கிங் ஆஃப் கொத்தா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபிலாஷ் ஜோஷி.

மலையாள நடிகர் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர் கல்லரக்கல்;, பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா, ஷம்மி திலகன் ஆகியோர் நடித்துள்ளார்.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்.

கொத்தா நகரத்தில் புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹசன் (பிரசன்னா) அங்கே போதைப்பொருள விற்பது, ரவுடிகளின் அராஜகம் ஆகிய குற்ற பின்னணிகளுடன் இருப்பதை பார்க்கிறார். இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ராஜு (துல்கர் சல்மான்) மற்றும் கண்ணன் (சபீர் கல்லரக்கல்)என்பதை தெரிந்து கொள்கிறார். ராஜு போதைப்பொருள் விற்பதை எதிர்ப்பவன் என்பதால் அதைத் தவிர்த்து தன் நண்பர்களுடன் சேர்ந்து கொத்தா நகரத்தையே தன் கைக்குள் வைத்துக் கொண்டு ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருகிறார். ராஜு காதலிக்கும் தாரா (ஐஸ்வர்யா லக்ஷ்மி)  காதலை நிராகரிக்க அதனால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. குடிக்கு அடிமையாகும் ராஜுவை விட்டு விட்டு கண்ணன் போதைப்பொருள் விற்பதை மறைமுகமாக செய்கிறார்.காதலில் தோல்வி, நண்பனின் துரோகம் ராஜுவை பாதிக்க கொத்தாவை விட்டு வெளியேறுகிறார். அதன் பின் கண்ணன் பாய் கோத்தா நகரத்தில் ஒரு போதைப்பொருள் வியாபாரியாக பெரிய கேங்ஸ்டராக மாறி அட்டூழியம் செய்கிறார். இவர்களின் பின்னணியை தெரிந்தவுடன் கண்ணனின் அராஜகங்களை பொறுக்க முடியாத இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹசன் (பிரசன்னா) உ.பி.யில் இருக்கும் ராஜுவை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கொத்தாவுக்கு வர வைக்;கிறார். ராஜு கண்ணனை பழி வாங்கினாரா? பிரிந்த நண்பர்களின் பகை என்னவானது? மீண்டும் இணைந்தார்களா? கொத்தா யார் கைக்கு போனது? இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹசன் போட்ட திட்டம் வெற்றியா? என்பதே ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் நிறைந்த மையக்கதை.

துல்கர் சல்மான் ஒரு திறமையான நடிகராக காதல், ஆக்ஷன் களத்தில் உணர்ச்சிர காட்சிகளில் பல விஷயங்களை வெளிப்படுத்துகிறார். இருந்தாலும் அவ்வளவு பெரிய கேங்ஸ்டர் காதல் தோல்விக்காக ஊரை விட்டே வெளியேறுவது என்பது காரணமாக சொல்லியிருப்பது படத்தின் மைனஸ். இரண்டாம் பாதியில் நட்புக்காக இறுதி வரை போராடும் குணத்தால் தனித்து நிற்கிறார்.

கண்ணன் பாயாக ஷபீர் கல்லரக்கல் பிரமாதமாகத் தொடங்கினாலும் பயனற்ற பக்கவாத்தியமாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளார். ராஜுவின் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியப் பாத்திரம் வகித்தாலும், மனைவிக்காக நண்பனுக்கு துரோகம் செய்யும் காட்சியால் பின்னடைவு ஏற்பட்டு ஆழமான தொடர்பைப் பதிவுசெய்யும் வகையில் அவரது பாத்திரம் உருவாகவில்லை.

இரண்டு போலீஸ்காரர்களாக பிரசன்னா மற்றும் கோகுல் சுரேஷ், நான்-லீனியர் கதைக்களத்தை எளிதாக வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர், அதற்கு மேல் ஒன்றும் இல்லை. தாராவாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ராஜுவின் காதலியாக மட்டுமே வந்து விட்டு போகிறார். ராஜுவின் தந்தை கோத்தா ரவியாக ஷம்மி திலகன் தனது சிறிய பாத்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

மூன்று மணி நேர, தொழில்நுட்ப ரீதியாக ஈர்க்கக்கூடிய கேங்க்ஸ்டர் திரைப்படம் வெடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு, ஜேக்ஸ் பிஜோயின் உந்துவிக்கும் பின்னணி ஸ்கோரால் நிரம்பியுள்ளது மட்டுமில்லாமல் நிமிஷ் ரவி ஒளிப்பதிவு 1980களில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதை என்பதால் அதற்கேற்ற காலகட்டத்திற்கேற்ற வண்ணத்தில் படத்தை கொடுத்து காட்சிக்கோணங்களில் அசத்தி உள்ளார். மேலும் கடந்த காலத்தை மீண்டும் உருவாக்குவதில் கலை இயக்கம் குழு ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளது. படத்தின் நீளத்தை குறைத்து விறுவிறுப்பாக எடிட்டிங் செய்திருக்கலாம்.

அபிலாஷ் ஜோஷி இயக்கிய இந்தத் திரைப்படம், கொத்தாவின் அரியணைக்காக போராடும் இரண்டு நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையை விட பெரிய போர்கள், தனிப்பட்ட போராட்டங்கள் மற்றும் அதிகாரத்திற்கான அசைக்க முடியாத நாட்டம் ஆகியவற்றை ஒருவரை ஒருவர் சமாளிக்கும் பந்தயத்தில் இடைவிடாத ஆக்ஷன் கலந்து கொடுத்துள்ளார். படம் முடியாமல் நீண்டு கொண்டே போகின்றதால் ஒருஅளவுக்கு மேல் பொறுமை இழந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை.

மொத்தத்தில் வேஃபேரர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள கிங் ஆஃப் கொத்தா டான்களின் ராஜ்ஜியத்தில் நட்புடன் மாஸ் கலந்து இடைவிடாமல் கொடுக்கும் ஆக்ஷன் விருந்து.