கன்னி விமர்சனம் : கன்னி மூலிகையின் மகத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்ய தவறிவிட்டது | ரேட்டிங்: 2/5

0
229

கன்னி விமர்சனம் : கன்னி மூலிகையின் மகத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்ய தவறிவிட்டது | ரேட்டிங்: 2/5

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கியிருக்கும் படம் கன்னி.

இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் : ஒளிப்பதிவு ராஜ்குமார், படத்தொகுப்பு சாம், இசை செபாஸ்டியன் சதீஷ், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு, உடைகள் அருண், ஒப்பனை எஸ். ரத்தினகுமார், கலரிஸ்ட் சி. சுருளி ராஜன், தயாரிப்பு நிர்வாகம் ஹென்றி குமார், மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.

தன் தாத்தா வசிக்கும் நடமாட்டம் இல்லாத அடர்ந்த ஜவ்வாது மலைப்பகுதிக்கு செம்பி தன் அண்ணன் மகள்களை அழைத்துக் கொண்டு தன்னந்தனியாக அவசரமாக ஒத்தையடி பாதையில் செல்கிறாள். தாத்தா வீட்டில் இல்லாததால் இரவில் கோயிலில் தங்கும் செம்பி பின்னர் தன் தாத்தாவைப் பார்த்து குடும்பத்தில் நடந்த கொடுமையை விவரிக்கிறாள். மூலிகையில் கைதேர்ந்த தாய், அண்ணன், அண்ணி, குழந்தைகள் என்று அன்பாக ஒற்றுமையாக வாழந்து வரும் வேளையில் நோயின் அதிக தாக்கத்தால் சிகிச்சைக்காக வரும் பணக்காரர் ஒருவர் குணமாக, அவருடன் வரும் ஒரு சிலர் இந்த மூலிகை வைத்தியத்தை வணிகமயமாக்கி பணம் சம்பாதிக்க பார்க்கின்றனர். இதற்கு உடன்படாத தாயைiயும், அண்ணன், அண்ணியையும் கொன்று விட, அங்கிருந்து தப்பி குழந்தைகளுடன் வந்து விட்டதாக தாத்தாவிடம் தெரிவிக்கிறாள் செம்பி. அங்கே வசிக்கும் செம்பியை தேடி வரும் கும்பல் இவர்களை கண்டுபிடித்தார்களா? தாத்தாவையும், ஊர் மக்களையும் என்ன செய்தனர்? மூலிகை மருந்துகளையும் மாந்திரீக ரகசியங்களையும் அவர்களிடமிருந்து காப்பாற்றினாரா செம்பி? இறுதியில் என்ன நடந்தது? என்பதே கன்னியின் க்ளைமேக்ஸ்.

படத்தில் சேம்பியாக அஷ்வினி சந்திரசேகர் தைரியம், போராட்ட குணம், ஆக்ரோஷம் நிறைந்து வசனம், நடை, உடை, பாவனை என்று மலை கிராமத்து பெண்ணாக அச்சு அசலாக வாழ்ந்துள்ளார்.

மற்றும் இவருடன் மணிமாறன், தாரா கிரிஷ், வில்லன் ராம் பரதன் ஆகியோர் நடிப்பு கச்சிதம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே புள்ளஹள்ளி மற்றும் ஜவ்வாது மலைப்பகுதியில் காடு, பாறைகள் நிறைந்த கரடுமுரடான இடங்களில் இயற்கை வெளிச்சத்தில் காட்சிக் கோணங்களை திறம்பட ஒளிப்பதிவு செய்துள்ளார் ராஜ்குமார்.

உமாதேவியின் பாடல் வரிகளில் செபாஸ்டியன் சதீஷ் இசையும்,பின்னணி இசையும் ஒகே ரகம்.

படத்தில் சித்த மருத்துவத்தின் மகிமை, மூலிகை வைத்தியம், கார்ப்பரேட் நிறுவனத்தின் தலையீடு, அதனால் பாழாகும் மலைக்கிராமம், அதை காப்பாற்ற போராடும் மலை கிராமத்து பெண் என்று சொல்ல முயற்சி செய்திருப்பதில் தடுமாற்றத்துடன் விறுவிறுப்பில்லாமல் தோய்வு ஏற்படும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் மாயோன் சிவா தொரப்பாடி.

மொத்தத்தில் சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் கன்னி மூலிகையின் மகத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்ய தவறிவிட்டது.