கனெக்ட் விமர்சனம் : கனெக்ட் ஆன்மாவைப் பெற்றிருந்தாலும், திரைப்படப் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை | ரேட்டிங்: 2.5/5

0
303

கனெக்ட் விமர்சனம் : கனெக்ட் ஆன்மாவைப் பெற்றிருந்தாலும், திரைப்படப் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை | ரேட்டிங்: 2.5/5

நடிப்பு: நயன்தாரா, அனுபம் கெர், சத்யராஜ், வினய், நஃபிசா ஹனியா
இசையமைப்பாளர்: பிருத்வி சந்திரசேகர்
ஒளிப்பதிவு: மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
இயக்குனர்: அஸ்வின் சரவணன்;
மக்கள் தொடர்பு : டி ஒன் சுரேஷ் சந்திரா, ரேகா

கனெக்ட் படம் எதைப் பற்றியது?
ஜோசப் மற்றும் சூசன், திருமணமான தம்பதிகள், சூசனின் அப்பா ஆர்தர் (சத்யராஜ்) மற்றும் சூசனின் மகள் அன்னாவைச் சுற்றி வருகிறது. டாக்டர் ஜோசப் (வினய் ராய்) கடற்கரையில் குடும்பமாக உல்லாசப் பயணம் மேற்கொண்டிருக்கும் போது, ஒரு அவசர அழைப்பு வருகிறது. நகரத்தில் புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக தொலைபேசி அழைப்பு வருவதால், செல்லும் அவர் பல வாரங்களாக  வீட்டுக்கு வரவில்லை, பின் துரதிர்ஷ்டவசமாக ஜோசப் கொரோனா வைரஸ் நோய் தாக்கி இறந்துவிடுகிறார். அவரது மகள், அன்னா (ஹனியா நஃபிஸ்) தனது தந்தையுடன் கடைசியாக ஒருமுறை பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறாள், தனது தந்தையுடன் மிகவும் இணைந்திருப்பதால், அன்னா ஜோசப்பின் ஆவியுடன் எப்படியாவது பேசுவதற்கு ஆன்லைனில் ஒரு மந்திரவாதியின் மூலம் பேச முயற்சி செய்கிறாள். ஆனால் அதன் விளைவு ஆபத்தில் முடிகிறது. அவளையும் அவளுடைய அம்மா சூசனையும் (நயன்தாரா) எதிர்பாராத சிக்கலில் சிக்க வைக்கிறது. இந்த சூழ்நிலையை சூசன் எப்படி எதிர்கொள்வார்? எப்படி சூசன் அன்னாவைக் காப்பாற்றுகிறார்? அவளுக்கு யார் உதவினார்கள்? இதுவே கனெக்ட் திரைப்படத்தின் அடிப்படைக் கதையை உருவாக்குகிறது.

நயன்தாராவுக்கு தன் திறமையை வெளிக்காட்ட அதிக வாய்ப்புகள் இல்லை ஆனால், நயன்தாராவால் தான் படம் பார்க்க முடிகிறது. அவர் ஒரு தாயாக முழுமையாக திகழ்கிறார், அவர் ஒவ்வொரு காட்சியிலும் சூசன் கதாபாத்திரத்தில் வாழ்கிறார்.

அன்னாவாக ஹனியா நஃபிஸ் தனது தந்தையை மோசமாக மிஸ் செய்யும் டீனேஜ் பெண்ணின் கேரக்டரில் அறிமுகமாகிறார். மேலும் அவர் சிறப்பான நடிப்பை தந்து அவரது பாத்திரத்தை மிகவும் அழகாக எடுத்துச் செல்கிறார்.

நயன்தாராவின் அப்பா ஆர்தராக வரும் சத்யராஜும் கவலைப்படும் தந்தையாக சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் வினய் ராய் டாக்டராகவும் அப்பாவாகவும் கண்ணியமாக கேமியோ ரோலில் காணப்படுகிறார்.

அனுபம் கெர் தனது நடிப்பால் படத்திற்கு ஆழத்தை கொண்டு வருகிறார்.

படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது, காட்சிகளை நன்றாக உயர்த்தி இருக்கிறது. எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

கனெக்ட் என்பது பேய் பிடித்த ஒரு பெண்ணைப் பற்றியது மற்றும் அவளுடைய உடலில் இருந்து பேய் எப்படி வெளியேற்றப்படுகிறது என்பதைப் பற்றியது. லாக்டவுன் காரணமாக, பேய் விரட்டும் நிகழ்ச்சி ஆன்லைனில் செய்யப்படுகிறது. இது ஒரு வழக்கமான பேய் படக் கதை. மற்றபடி, இயக்குனர் கதையை கொரோனாவுடன் இணைத்ததால், கதையை ஆன்லைனில் இயக்கியுள்ளார். கனெக்ட் படத்தில் இந்த ஒரு புள்ளி மட்டுமே புதிது. இயக்குனர் அஸ்வின் சரவணனின் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்தால் கனெக்ட் மிகவும் வாடிக்கையாக இருந்ததால் பார்வையாளர்களுடன் அதிகம் கனெக்ட் செய்ய முடியவில்லை.

மொத்தத்தில், ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள கனெக்ட் ஆன்மாவைப் பெற்றிருந்தாலும், திரைப்படப் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.