கட்சிக்காரன் விமர்சனம்: கட்சிக்காரன் வெகுண்டெழும் தொண்டனின் மனக்குமறல்கள் | ரேட்டிங்: 2.5/5
பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் பு@ஹில்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் கட்சிக்காரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ப.ஐயப்பன்.
இதில் அப்புக்குட்டி, விஜித் சரவணன்,இயக்குநர் மருதுபாண்டியன், ஸ்வேதா டாரதி, சிவசேனாதிபதி, தெனாலி, ஜவகர், விஜய் கௌதம், சி.எம்.பிரபாகரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு,மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு- மதன்குமார், எடிட்டிங் – கார்த்திகேயன்,இசை-ரோஷன் ஜோசப், பின்னணி இசை-மகேந்திரா,பாடல்கள் நா. ராசா, பாடகர்கள் ஹரிச்சரண், பிஆர்ஒ- சக்தி சரவணன்.
மக்கள் கட்சித் தலைவர் சிவசேனாதிபதி, அவரின் கொள்கைப்பிடிப்பில்; மாறாத பற்று கொண்டவன் விஜித் சரவணன். தலைவரின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யும் உண்மையான தொண்டன். ஸ்வேதா டாரதியை திருமணம் செய்ய தன் கட்சியில் அவர்கள் குடும்பத்தினர் சேர்ந்தால் போதும் வேறு எதுவும் வரதட்சணை வேண்டாம் என்று சொல்லி திருமணம் செய்து கொள்கிறான். தேர்தலில் கட்சி ஜெயிப்பதற்காக கூட்டங்களை நடத்த தன் மனைவியின் தாலியை விற்று செலவு செய்கிறான். இவனின் அயராத உழைப்பால் மக்கள் கட்சி அமோகமாக வெற்றி பெறுகிறது. விஜித்தை பாராட்டி கட்சி மேலிடத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தப் பதவியை கட்சி தாவிய ஒருவருக்கு கொடுத்து விட மனம் உடைகிறான் விஜித். அதன் பின் மக்கள் கட்சிக்காக உழைத்தாரா? தலைவரை எதிர்த்து என்ன முடிவு செய்தார்? நியாயம் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.
உண்மைத் தொண்டான விஜித் சரவணன் தன்னுடைய அரசியல் தலைவருக்காக எதையும் செய்ய துணிந்து, அதன் பின் ஏமாற்றப்பட்டு, வருந்தும் காட்சிகள், எடுக்கும் முடிவுகள், உறுதியாக நின்று போராடும் குணம் என்று அச்சு அசலாக வாழ்ந்துள்ளார்.
அரசியல்வாதியின் பிஏவாக அப்புக்குட்டி, இயக்குநர் மருதுபாண்டியன், கணவனுக்கு உறுதுணையான மனைவியாக ஸ்வேதா டாரதி, அரசியல்வாதியாக சிவசேனாதிபதி, ஜவகர், நண்பனாக தெனாலி, விஜய் கௌதம், சி.எம்.பிரபாகரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர்.
ராசாவின் பாடல்கள் ரோஷன் ஜோசப்பின் இசையும், மகேந்திராவின் பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு சிறப்பு செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களை தன் காட்சிக்கோணங்களால் அழகாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மதன்குமார். கார்த்தியேனின் படத்தொகுப்பு பரவாயில்லை.
அரசியல்வாதிகளின் உண்மையான நிலைப்பாட்டை கண்முன் நிறுத்தி நிகழ்கால அரசியல் வரை நடந்த சம்பவங்களை வசனங்கள் மூலம் தெளிவு படுத்து, ஏமாற்றப்படும் தொண்டனைப்பற்றிய கதையை நம்பகத்தன்மையோடு இயக்கியிருக்கிறார் ஐயப்பன். இப்படத்தில் தெனாலி மூலம் பேசும் வசனங்கள் அதிகமாக இருக்க, பேச்சு நடையிலேயே படம் முடிந்தது போல் இருக்கிறது. பேசும் வசனங்கள் நன்றாக இருந்தாலும் காட்சிகளில் கொடுத்திருந்தால் கூடுதல் சிறப்பு பெற்றிருக்கும்.
மொத்தத்தில் பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் புஹில்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் கட்சிக்காரன் வெகுண்டெழும் தொண்டனின் மனக்குமறல்கள்.