ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் சினிமா விமர்சனம் : ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் தேர்ந்த நடிகர்கள், சிறப்பான தொழில்நுட்பம், விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லிங் அனுபவம் | ரேட்டிங்: 3.5/5
ஃப்ரைடே பிலிம் ஃபாக்டரி சார்பில் பிஆர்ஒ கேப்டன் எம்பி ஆனந்த் தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரசாத் முருகன்.
இதில் பரத் – ராஜா, அபிராமி – சாவித்திரி , தலைவாசல் விஜய் – நாதன் , ராஜாஜி – அருள் ஜோதி, கனிகா – கௌசி, ஷான் – கதிர், கல்கி – இஸ்மாயில், பவித்ரா லக்ஷ்மி – அனிதா, அஞ்சலி நாயர் – மதி, பிஜிஎஸ்- மூர்த்தி, அரோல் டி சங்கர் – சுப்ரமணி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பு – ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பிஜி.சரவணன், ஒளிப்பதிவு – கே.எஸ். காளிதாஸ், கண்ணாஆர், இசை – ஜோஸ் பிராங்க்ளின், படத்தொகுப்பு – ஷான் லோகேஷ், கலை இயக்குநர் – வி.கே. நடராஜன், வசனம்- பாடல்கள் – எம். ஜெகன் கவிராஜ், சண்டை பயிற்சி – சுகன், நடனம் – ஷாம், மக்கள் தொடர்பு – கே.எஸ்.கே. செல்வகுமார், மணிமதன்
சென்னையின் கூவம் ஆற்றின் அருகே ராணுவ குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மாமரத்தை குறி வைக்கும் எதிரே குடிசையில் வசிக்கும் ஏழைச் சிறுவனின் செயலை பார்த்து ஆத்திரமடைந்து துப்பாக்கியில் சுடுகிறார். அதன் பின் அந்த துப்பாக்கியை கூவம் ஆற்றில் ராணுவ அதிகாரி வீசுகிறார். அந்த துப்பாக்கி துப்புரவுத் தொழிலாளியான சாவித்ரியிடம்(அபிராமி) கிடைக்கிறது. கொலை ஆயுதமான கைத்துப்பாக்கியை கரையில் ஒதுங்கியதைக் கண்டுபிடித்த பிறகு இப்படம் நான்கு வேறுபட்ட மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கதைகளை திரையில் பிரதிபலிக்கிறது.
புதுமணப்பெண் மதி (அஞ்சலி நாயர்) பல கனவுகளுடன் புகுந்த வீட்டில் நுழைய எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கின்றன. தன் கணவன் மற்றும் மாமியார் செய்யும் பெரிய துரோகத்தைக் கண்டுபிடிக்கும் போது அதிர்ச்சியாகிறார். அதன் பின் வேலைக்கு செல்ல முடிவு எடுக்கும் மதி தன் வாழ்க்கையை மனம் போல் வாழ எடுக்கும் முடிவும் அதற்கு புகுந்த வீட்டில் தனக்கு ஏற்பட்ட துரோகத்திற்கு அவர்களை எப்படி பழி வாங்கினார்? என்பதே முதல் கதை.
துப்புறவு தொழிலாளியான சாவித்ரி (அபிராமி) தனது திருநங்கை மகள் கார்த்தியை (கீச்சா) மருத்துவம் படிக்க வைக்க கடன் வாங்குகிறார். கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவிக்கும் சாவித்ரிக்கு கந்து வட்டிக்காரன் மூர்த்தியால் (பிஜிஎஸ்) மிரட்டப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் மகள் கார்த்தி மூர்த்தியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக அதிலிருந்து தன் மகளை காப்பாற்ற போராடும் போது தான் ராணுவ அதிகாரியின் துப்பாக்கி கையில் கிடைக்கிறது. அதன் பின் மகளை பாதுகாக்க சாவித்ரி எடுத்த முடிவு என்ன? துப்பாக்கியை விற்று கடனை அடைத்தாரா? வேறு என்ன செய்தார்? என்பதே இரண்டாம் கதை.
காதலித்து திருமணம் செய்து கொண்டு வருமானத்திற்காக ஆட்டோ ஒட்டும் பரத் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட மனைவியின் மருத்துவ செலவிற்காக பல லட்சங்கள் தேவைப்படுகிறது. பணத்தை புரட்ட முடியாமலும், பணத்திற்காக மாமனார் வீட்டில் அவமானப்பட விரக்தியில் மூழ்கிய ராஜா (பரத்), ஒரு பெண் சமூக ஆர்வலரை படுகொலை செய்யும் வேலையை ஏற்றுக் கொள்கிறார். அதன் பின் அவர் அந்த கொலையை செய்தாரா? போதிய பணம் கிடைத்ததா? மனைவியை காப்பாற்ற முடிந்ததா? இல்லையா? என்பதே படத்;தின் மூன்றாம் கதை.
இதற்கிடையில், ஒரு ஜாதி வெறி கொண்ட தந்தை நாதன் (தலைவாசல் விஜய்) மகள் அனிதாவின் (பவித்ரா லட்சுமி) காதலை எதிர்க்கிறார். மகள் தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வர, அதற்காக விரைந்து செல்லும் வழியில் ஒரு இளைஞன் உதவி கேட்க, வேறு வழியின்றி அழைத்துச்செல்கிறார். இருவரும் உரையாடும் போது நாதன் அந்த இளைஞன் தன் மகளின் காதலன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார். உண்மையில் யார் அந்த இளைஞர்? நாதன் எடுத்த அவசர முடிவால் என்ன சிக்கலில் மாட்டிக் கொண்டார்? என்பதே நான்காம் கதை.
இந்த நான்கு கதைகளும் தனித்தனியாக காட்சிப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக செல்ல பின்னர் ஒரு கோணத்தில் இந்த நான்கு கதைகளுக்கும் முக்கிய புள்ளியாக துப்பாக்கி இணைய அது எப்படி என்பதே ழுnஉந ரிழn ய வுiஅந in ஆயனசயள படத்தின் திருப்புமுனையாக முடிகிறது.
பரத் காதல் மனைவியை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் தவிப்பு, அதற்காக எடுக்கும் முயற்சிகள் பணத்தேவைக்காக எதையும் செய்ய துணியும் செயல், கொலை செய்த பிறகு அந்தப் பெண் யார் என்பதை அறியும் போது வெளிப்படுத்தும் அதிர்ச்சி கலந்த பதற்றம் மற்றும் சோகமான விரக்தியான காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் அபிராமி துப்புறவு தொழிலாளியாக அச்சு அசலாக வசன உச்சரிப்பு, மகளிடம் காட்டும் பாசம்,கடினமான சூழலிலும் மகளுக்கு ஊக்கத்தை கொடுத்து படிக்க வைக்க போராடும் போதும் உணர்ச்சிகரமான நடிப்பை தைரியமான பெண்மணியாக நேர்த்தியுடன் நம்பகத்தன்மையுடன் செய்துள்ளார்.
அஞ்சலி நாயர் முதலில் குழப்பத்துடன் குடும்ப சூழலை அனுசரித்து செல்லும் போதும், பின்னர் தன் கணவனின் ஏமாற்று செயல், மாமியாரின் துரொகம், தனக்கு நேர்ந்த கொடுமையை கிரகிக்க முடியாமல் எடுக்கும் முடிவு என்று துணிச்சலான பாத்திரத்தில் மிளிர்கிறார்.
தலைவாசல் விஜய் தனது ஜாதிக்கொள்கையை வலுவாக நிலை நிறுத்தும் கதாபாத்திரத்தில் அழுத்தமாக செய்திருக்கிறார்.தவறுதலாக செய்யும் ஒரு காரியத்தால் நிலை தடுமாறும் இடத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜாஜி – அருள் ஜோதி, கனிகா – கௌசி, ஷான் – கதிர், கல்கி – இஸ்மாயில், பிஜிஎஸ்- மூர்த்தி, அரோல் டி சங்கர் – சுப்ரமணி மற்றும் பலர் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் நான்கு கதைகளுக்கு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.எஸ். காளிதாஸ், கண்ணாஆர், இசை – ஜோஸ் பிராங்க்ளின், படத்தொகுப்பு – ஷான் லோகேஷ், கலை இயக்குநர் – வி.கே. நடராஜன் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்;களின் பணி அளப்பறியது படத்தின் காட்சிகளுக்கு தத்ரூபமான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இவர்களுடன் வசனம் மற்றும் பாடல்களை எழுதியிருக்கும் பத்திரிகையாளர் எம். ஜெகன் கவிராஜ் அழமான, அர்த்தமுள்ள, சிந்திக்ககூடிய வசனங்களை கொடுத்து கை தட்டல் பெறுகிறார். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
இரண்டு மணி நேரத்தில், சில உண்மை சம்பவங்களை தழுவி நான்கு இறுக்கமாக புனையப்பட்ட கதைக்களம் ஒரு விறுவிறுப்பான வேகத்தை உறுதி செய்வதில் பெரும் பங்காற்றியிருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகன். வன்முறையை விட வன்முறையின் உந்துதல்கள், அதன் பின்விளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே திரைப்படத்தை தனித்துவமாக்குகிறது. கதை திறமையாக கையாண்டு சாதாரண நபர்களை அசாதாரண சூழ்நிலைகளில் நன்கு வடிவமைக்கப்பட்ட திருப்பங்கள் மூலம் சஸ்பென்ஸை பராமரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. நான்கு கதைகளின் தற்செயலான தருணங்களை சதித்திட்டத்தில் இணைத்து துப்பாக்கியை மையப்பொருளாக்கி க்ளைமேக்சில் வன்முறையின் தொடர் விளைவுகளுடன் முடித்த விதம் அருமை. வேல்டன்.
மொத்தத்தில் ஃப்ரைடே பிலிம் ஃபாக்டரி சார்பில் பிஆர்ஒ கேப்டன் எம்பி ஆனந்த் தயாரித்திருக்கும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் தேர்ந்த நடிகர்கள், சிறப்பான தொழில்நுட்பம், விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லிங் அனுபவம்.