ஐமா திரைப்பட விமர்சனம் : ஐமா மருத்துவ ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பில் சிக்கிக் கொள்ளும் இருவர் உயிர் பிழைத்து தப்பிக்க முயற்சிக்கும் ஆடு புலி ஆட்டம். | ரேட்டிங்: 2.5/5
தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரித்திருக்கும் ஐமா படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராகுல் ஆர்.கிருஷ்ணா.
இதில் யூனுஸ், எவ்லின் ஜூலியட், அகில் பிரபாகரன், சிசிரா, மேக மாலு மனோகரன் மற்றும் ஷாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:-இசை: கே ஆர்.ராகுல், ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன், கலை : ஜீமன், எடிட்டிங் : அருண் ராகவ்,ஸ்டண்ட் : அஷ்ரஃப் குருக்கள், இயக்கம் : மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்
விபத்தில் இறந்த சகோதரனின் துக்கத்தை தாங்க முடியாமல் மரியா (எல்வின் ஜூலியட்) தற்கொலைக்கு முயல்கிறார். அவரை மருத்துவர்கள் காப்பாற்றி வீட்டிற்கு அனுப்புகின்றனர். அதே சமயத்தில் தன் தாயின் உடல்நிலை பாதிக்கப்பட ஆதாம் (யூனுஸ்) மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்திராதவர்கள். ஆனால் மர்ம கும்பல் ஒன்று இவர்களை கடத்தி கைகளையும், கால்களையும் கட்டி, முகத்தை மூடி தனித்தனியாக பாழடைந்த பங்களாவில் வௌ;வேறு அறைகளில் அடைக்கின்றனர். மரியா தன் அறையில் சாமர்த்தியமாக கட்டுக்களை அவிழ்த்து அந்த அறையிலிருந்து வெளியேற அதே போல் ஆதாமும் தப்பித்து வெளியே வருகிறார். இருவரும் தங்கள் நிலைமையை புரிந்து கொண்டு ஒன்றாக இணைந்து அந்த பங்களாவிலிருந்து தப்பிக்க வழி தேடுகின்றனர். அந்த சமயத்தில் ஒரு குரல் அவர்களுக்கு கேட்கிறது. அவர்கள் உடம்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு விஷம் ஏற்றப்பட்டிருப்பதாகவும், அந்த விஷத்தை முறிக்கும் மருந்திருக்கும் அறையை கண்டுபிடித்தால் உயிரோடு இருக்க முடியும் என்ற கெடு வைக்க, அதற்கு அறையிலிருக்கும் ஒரு க்@வை வைத்து புதிரை கண்டுபிடித்து வருமாறு கூறுகிறது. இருவரும் ஒவ்வொரு அறையாக இவ்வாறு விடை கண்டுபிடித்து வர, இறுதியாக ஒரு அறையில் இறந்து கிடக்கும் மனிதரை பார்க்கின்றனர். அந்த மர்ம மனிதர் யார்? அதன் பின்னர் என்ன நடந்தது? இருவரும் அங்கிருந்து உயிரோடு தப்பித்தார்களா?இருவரையும் கடத்தி சிறைபிடிக்க காரணம் என்ன? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
ஆதமாக யூனுஸ், மரியாவாக எவ்லின் ஜூலியட் இருவரும் அறையிலிருந்து தப்பிக்கும் காட்சிகளில் தனித்திறமையோடு நடித்துள்ளனர். யூனுஸ் படத்தில் பேச்சில் குறும்பும், இயலாமையையும் ஒரு சேர வெளிப்படுத்தி இயல்போடு நடித்துள்ளார். மரியா புத்திசாலியாகவும், சாதுர்யமாகவும் நடந்து கொள்ளும் கதாபாத்திரத்தில் கொஞ்சம் ஆக்ஷனும் கலந்து சுறுசுறுப்புடன் அழகாகவும் நடித்துள்ளார்.
இவர்களுடன் அகில் பிரபாகரன், சிசிரா, மேக மாலு மனோகரன் மற்றும் ஷாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி வில்லனாக கண்களிலேயே உருட்டல் மிரட்டல் விடுத்து வித்தியாசமான இரண்டு கெட்டப்களில் வந்து மர்மத்தை தெளிய வைக்கிறார்.
இசை: கே ஆர்.ராகுல், ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன் இருவரும் குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் கதைக்களத்திற்குகேற்றவாறு இசையாலும், ஒளிப்பதிவாலும் காட்சிகளை சலிப்படையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
பழைய பங்களா, அறைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார் கலை இயக்குனர் ஜீமன்.
அருண் ராகவ் எடிட்டிங் சில இடங்களில் கத்திரி போட்டிருக்கலாம், படம் முடிந்து விட்டது என்று எண்ணும் போது நாயகன் நாயகி காட்சிகள் நீண்டு கொண்டே போகிறது.
ஐமா என்றால் இரத்தம் மற்றும் கடவுளின் சக்தி என்று பொருளாம். இரத்த பரிசோதனையை மையமாக வைத்து அறிவியல் மருத்துவம் கலந்த ஆராய்ச்சியில் புதிய மனித குலத்தை படைத்து உலகத்தை ஆள வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் களமிறங்கும் வில்லனை எவ்வாறு நாயகன், நாயகியும் பழி வாங்குகிறார்கள் என்ற திரைக்கதையை அமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் ராகுல் ஆர்.கிருஷ்ணா.இரண்டாம் பாகத்திற்கான அறிகுறியுடன் படத்தை முடித்திருக்கும் இயக்குனர் திரைக்கதையில் இன்னும் அழுத்தமாக காட்சிகளை பதிவு செய்திருந்தால் சிறப்பாக பேசப்பட்டிருக்கும்.
தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரித்திருக்கும் ஐமா மருத்துவ ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பில் சிக்கிக் கொள்ளும் இருவர் உயிர் பிழைத்து தப்பிக்க முயற்சிக்கும் ஆடு புலி ஆட்டம்.