ஐங்கரன் விமர்சனம்: அறிவியல் கண்டுபிடிப்புகளோடு களமிறங்கி புத்திசாலித்தனமான படைப்பில் அசத்தும் ஐங்கரன் | ரேட்டிங் – 2.5/5

0
180

ஐங்கரன் விமர்சனம்: அறிவியல் கண்டுபிடிப்புகளோடு களமிறங்கி புத்திசாலித்தனமான படைப்பில் அசத்தும் ஐங்கரன் | ரேட்டிங் – 2.5/5

காமென் மேன் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் ஐங்கரன் படத்தை இயக்கியிருக்கிறார் ரவிஅரசு.
இதில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பெராடி, சித்தார்த்தா சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு-அபிமன்யு, எடிட்டிங்-ராஜாமுகம்மது, இணை தயாரிப்பு -சுபா கணேஷ், பிஆர்ஒ-கோபிநாத்.

நாமக்கல்லில் போலீஸ்காரரான ஆடுகளம் நரேனின் மகன் ஜி.வி.பிரகாஷ்குமார். விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாட்டால் புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதற்கான உரிமம் பெற அரசு மையத்திற்கு விண்ணப்பம் செய்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்.இதனிடையே சென்னை மற்றும் பல நகரங்களில் நகைகளை கொள்ளையடிக்க வடநாட்டு திருட்டு கும்பல் திட்டம் போடுகின்றனர். சென்னை மற்றும் பல இடங்களில் கொள்ளையடித்த தங்கம் மற்றும் வைர நகைகளை எடுத்துக்கொண்டு நாமக்கலுக்கு வருகின்றனர். அங்கே போலீசின் கெடிபிடியால் அந்த நகை மூட்டையை பாதுகாக்க ஒரு இடத்தில் தூக்கி வீசும் போது மூடாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் வீழ்ந்து விடுகிறது. வட நாட்டு கும்பலால் குழிக்குள் ஆழமாக சென்ற அந்த நகைகளை எடுக்க முடியாமல் தவிக்க, ஒரு பெண் குழந்தையை கடத்தி அந்த குழிக்குள் போட்டு விடுகின்றனர். அதனால் அந்த இடமே பரபரப்புக்கு உள்ளாகிறது. குழந்தையை மீட்கும் முயற்சியில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்படுகிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் குழந்தையை மீட்க முடியாமல் அதிகாரிகள் தவிக்க, இதனை கேள்விப்படும் ஜி.வி.பிரகாஷ்குமார் குழிக்குள் குழந்தையை மீட்கும் இயந்திரத்தை உருவாக்கி அந்த இடத்திற்கு எடுத்து வருகிறார். இதற்கு சில அ;திகாரிகள் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், வேறு வழியின்றி ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு அனுமதி கொடுக்கின்றனர். பல போராட்டங்களுக்கு பிறகு குழந்தை பத்திரமாக உயிருடன் மீட்கப்பட கூடவே அந்த நகை மூட்டையும் வெளியே வருகிறது. அதன்பின் என்ன நடந்தது? போலீஸ் அதிகாரிகள் அந்த நகையை மீட்டு விசாரணை நடத்தினார்களா? இந்த நகைக்காக காத்திருக்கும் வடநாட்டு கும்பல் என்ன செய்தார்கள்? என்பதே க்ளைமேக்ஸ்.

இளம் விஞ்ஞானியாக ஜி.வி.பிரகாஷ்குமார் கிடைத்த பொருட்களை வைத்து புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அங்கீகாரத்திற்கான மெனக்கெடல்கள், சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம், நட்பு, தந்தைக்கு நேர இருக்கும் ஆபத்தை உணர்ந்து விரைவது, ஆக்ஷன் காட்சிகள் என்று படம் முழுவதும் பரபரப்பாகவும், நேர்த்தியாகவும் தன்னுடைய பங்களிப்பை திறம்பட கொடுத்துள்ளார். இப்படம் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு மிக முக்கியமான படமாக அமைத்து நல்ல பேரை வாங்கித்தரும்.

காதலியாக மஹிமா நம்பியார், நண்பராக காளி வெங்கட், தந்தையாக ஆடுகளம் நரேன், வில்லன் போலீஸ்காரராக ஹரீஷ் பெராடி மற்றும் பலர் படத்திற்கு பக்கபலமாக இருந்து அனைவருமே யதார்த்தமாக நடித்து அசத்தியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையை விட பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பான ஒட்டத்திற்கு கை கொடுக்கிறது.

படத்தில் முக்கிய உழைப்பு சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு. படத்தின் மற்றொரு பலமாக இருந்து தூக்கி நிறுத்துகிறார். தனது கிரிஸ்பான எடிட்டிங்கால் படத்தொகுப்பாளர் ராஜா முகம்மது படத்தை தொய்வில்லாமல் கொண்டு போயிருக்கிறார்.

பலரும் அறிந்திருந்தும் அதை நேர்த்தியாக கொடுத்திருக்கும் புதிய நல்ல கதையில் சுவாரசியத்தோடு திரைக்கதை அமைத்து நட்சத்திர் கதாப்பாத்திரங்களின் மூலம் கதை நகர்வை விறுவிறுப்பாக படமாக்கும் விதத்தில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்,குறிப்பாக த்ரில்லாக க்ளைமேக்ஸ் காட்சி கொடுத்திருக்கும் ஈட்டி படத்தின் இயக்குனர் ரவிஅரசுவின் இரண்டாவது படம் ஐங்கரன். திறமைக்கும், அறிவிற்கும் மதிப்பு குறைவே என்பதை சுட்டிக்காட்டி, ஏமாற்றுபவர்கள், கொள்ளையடிப்பவர்களுக்கு தான் காலம், பணம் அனைவரையும் சூழ்ச்சியில் மாட்டி சிக்க வைத்து விடும் என்பதை பரபரப்பாகவும், சிறப்பாகவும் இறுதிக்காட்சி வரை கொடுத்துள்ள இயக்குனர் ரவிஅரசுற்கு வாழ்த்துக்கள். இந்தியாவில் இளம் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்புகளையும் இறுதியில் காட்டி அவர்களுக்கு மரியாதை செய்திருக்கும் விதத்திலும் தனித்து நிற்கிறார்.

மொத்தத்தில் காமென் மேன் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் அறிவியல் கண்டுபிடிப்புகளோடு களமிறங்கி புத்திசாலித்தனமான படைப்பில் அசத்தும் ஐங்கரன்.