இறைவன் விமர்சனம் : இறைவன் மனதளவில் பெரும் பாராத்தையும் பாதிப்பையும் உண்டாக்குபவன் | ரேட்டிங்: 2/5
பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் இறைவன்.
இதில் ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி, ராகுல் போஸ்.வினோத் கிஷன், ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி, நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ஹரி.கே.வேதாந்த், படத்தொகுப்பாளர் ஜெ.வி.மண்கண்ட பாலாஜி, கலை இயக்குநர் ஜாக்கி, பிஆர்ஒ-டிஒன்
சென்னையில் சில மாதங்களிலேயே 12; இளம் பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக விவரிக்க முடியாத அளவு சித்திரவதை செய்து கொல்லப்படுகின்றனர். இதற்கு காரணமாக ஸ்மைலி சைக்கோ கில்லரை பிடிக்க அசிஸ்டெண்ட் கமிஷனர் ஜெயம் ரவியும், அவரது நண்பர் நரேனும் நியமிக்கப்படுகின்றனர். இந்த தேடுதலில் சைக்கோ கில்லரை பிடித்துக் கொடுத்துவிட்டு நரேன் இறக்கிறார். இதனால் பெரும் மனஉளைச்சலடையும் ஜெயம் ரவி வேலையை ராஜினாமா செய்கிறார். அதே சமயம் சைக்கோ கில்லர் ஜெயிலிருந்து தப்பித்து விட, மீண்டும் தொடர் கொலைகள் நடைபெறுகிறது. ஜெயம் ரவியையும் பழி வாங்க சைக்கோ கில்லர் புறப்படுகிறார். ஜெயம் ரவி சைக்கோ கில;லரை மீண்டும் தேடி கண்டுபிடித்தாரா? தன் நண்பனின் சாவிற்கு பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
பயம் என்பதே கிடையாது என்று சொல்லும் முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை அழுத்தமான ஆக்ரோஷம் நிறைந்த போலீஸ் அதிகாரியாக விரைப்புடன், இறுகிய முகத்துடன், மிரட்டலான ஆக்ஷனுடன் நடிப்பை வழங்கியுள்ளார்.
நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி, ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி படத்திற்கான சிறிய பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
முதல் வில்லன் மிரட்டும் ராகுல் போஸ், இரண்டாவது வில்லன் மிகையான நடிப்பில் வினோத் கிஷன் அனைவரின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். ஹரி கே வேதாந்தம் கொடூரமான தொடர் கொலைகளையும், அதன் பின்னணி இடங்களையும் தனது ஒளிப்பதிவில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார். படத்தொகுப்பாளர் ஜெ.வி.மண்கண்ட பாலாஜி படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். கலை இயக்குநர் ஜாக்கி பங்களிப்பு படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
சைக்கோ கொலையாளியை பிடிக்க புறப்படும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், அவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் என்று பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்த படத்தில் அனைத்து காட்சிகளும் குறிப்பாக கொலைகள் காட்சிப்படுத்திய விதமும், காரணமும் முகம் சுளிக்கும் அளவிற்கு உள்ளது. சம்பந்தமே இல்லாமல் காட்சிகள் நீண்டு கொண்டே போவது போல் இருக்கிறது. கோர்வையான காட்சிகள் இல்லாமல் சில இடங்கள் தெரிகிறது. இப்படத்தை பார்ப்பவர்களுக்கு மன உளைச்சல் தான் ஏற்படும். இனியாவது இயக்குனர்கள் பாலியல் வன்முறைகள், குழந்தைகள் பெண்களை மையப்படுத்தி நடக்கும் கொலைகள் என்று கதைக்களத்தை உருவாக்காமல் இருந்தாலே பல குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு என்று நம்பலாம். இயக்குனர் ஐ.அகமது இறைவன் என்று பெயர் காரணம் எதற்கு வைத்தார் என்றே புரியவில்லை.
மொத்தத்தில் பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இறைவன் மனதளவில் பெரும் பாராத்தையும் பாதிப்பையும் உண்டாக்குபவன்.