இன்பினிடி விமர்சனம் : இன்பினிடி குற்ற பின்னணி கொண்ட த்ரில்லர் கதையில் தவறும் கனக்ட்டிவிடி | ரேட்டிங் : 2/5

0
287

இன்பினிடி விமர்சனம் : இன்பினிடி குற்ற பின்னணி கொண்ட த்ரில்லர் கதையில் தவறும் கனக்ட்டிவிடி | ரேட்டிங் : 2/5

மென்பனி புரொடக்ஷன்ஸ் வி.மணி கண்டன், யு.பிரபு,கே.அற்புதராஜன், டி. பாலபாஸ்கரன் ஆகியோர் தயாரித்திருக்கும் இன்பினிடி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சாய் கார்த்திக்.

இதில் நட்டி நடராஜன், வித்யா பிரதீப்,முனீஸ்காந்த், தா.முருகானந்தம், சார்லஸ் வினோத், வினோத் சாகர், நிகிதா, ஜீவா ரவி, மோனா பெட்ரீ, ஆதவன், சிந்துஜா, கிருஷ்ணராஜூ, பாலபாஸ்கரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சரவணன் ஸ்ரீ, இசை-பாலசுப்பிரமணியன்.ஜி, எடிட்டர்-எஸ்.என்.ஃபாசில், கலை-பிரன்மலை சரவணன், சண்டை-ஸ்டன்னர் சாம், தயாரிப்பு நிர்வாகி- உமாமகேஷ்வரா ராஜூ.டி, பிஆர்ஒ-நிகில் முருகன்.

இளம்பெண், காவல் அதிகாரி, எழுத்தாளர், மது போதை ஆசாமி என்று நான்கு கொலைகள் தொடர்ச்சியாக நடக்கிறது. போலீஸ் விசாரிக்கும் போதே காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. போலீஸ் நிலையத்தில் ஒரு இளம் பெண் காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுக்க, அவர்களும் மறுநாள் காணாமல் போகின்றனர். இதனிடையே கொலை வழக்குகளை சிபிஐ அதிகாரியான எவ்வி இளவளவன்(நட்டி நட்ராஜ்) விசாரிக்கிறார். இந்த வழக்கின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை அரசு மருத்துவர் டாக்டர் நந்தினி (வித்யா பிரதீப்) வழங்குகிறார். இவரும் சிபிஐ அதிகாரி எவ்விக்கு இந்த வழக்கில் உதவி செய்கிறார். இடையில் எவ்வி இளவளவனையும், டாக்டர் நந்தினியையும் கொல்ல முயற்சிகள் நடக்கிறது. இந்த கொலைகளை தீவிரமாக எவ்வி இளவளவன் விசாரிக்கும் போது திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இன்னொரு புறம் அரசு டாக்டரான வித்யா பிரதீப் சிகிச்சை அளிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பல குழந்தைகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனால் அவரையும் கண்காணிக்க ஆரம்பிக்கிறார் நட்ராஜ். கொலைகளுக்கும் டாக்டர் நந்தினிக்கும் தொடர்பு இருக்கிறதா? கொலைகளை செய்தது யார்? கொலை செய்யப்பட்ட நால்வருக்கும் இருக்கும் தொடர்பு என்ன? எவ்வி இளவளவன் குற்றவாளியை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சிபிஐ அதிகாரியான எவ்வி இளவளவனாக நட்டி நட்ராஜ் தன்னுடைய இயல்பான நடிப்பால் மிடுக்கான சிபிஐ அதிகாரியாக யோசித்து நிதானமாக செயல்படுத்தும் இடங்களில் உணர்ச்சிகள் நிரம்பிய வசனங்களுடன் அசத்தலாக செய்துள்ளார்;. பல நேரங்களில் பயணிப்பதிலேயே பல காட்சிகள் நகர்ந்து விடுகிறது.

டாக்டர் நந்தினியாக வித்யா பிரதீப் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு கச்சிதமாக செய்து முதலில் உயிரைக் காப்பாற்றும் டாக்டராக வந்து பின்னர் உயிரை எடுக்கும் வில்லியாக சித்திரிக்கப்பட்ட கேரக்டரில் சண்டை, உருட்டல், மிரட்டல் என்று சிறப்பாக நடித்துள்ளார்.

சிரிப்பு வரவழைக்க முடியாத காமெடியில் முனீஸ்காந்த், தா.முருகானந்தம், சார்லஸ் வினோத், வினோத் சாகர், நிகிதா, ஜீவா ரவி, மோனா பெட்ரீ, ஆதவன், சிந்துஜா, கிருஷ்ணராஜூ, பாலபாஸ்கரன் ஆகியோர் துணை கதாபாத்திரங்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

பாலசுப்பிரமணியன் இசை, பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

சரவணன் ஸ்ரீ; ஒளிப்பதிவு கொலைக்கான விசாரணையைச் சுற்றி வருவதால் தன்னால் முடிந்தவரை நியாயம் செய்துள்ளார்.

படத்தொகுப்பாளர் எஸ்.என்.ஃபாசில் இன்னும் விறுவிறுப்போடு சுவாரஸ்யத்தோடு காட்சிகளை கொடுக்க முயற்சித்திருக்கலாம்.

மாநகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி உண்மையான கொலையாளியை கண்டுபிடித்தாரா என்ற கதைக்களத்தில் முதல் பாதி வேறு திசையில் பயணிக்க இரண்டாம் பாதியில் திருப்புமுனை என்ற பெயரில் ஏதேதோ காரணங்கள், நம்பமுடியாத சம்பவங்கள் என்று ரசிக்கும்படி எதுவும் இல்லாமல் ஏனோ தானோ என்று திரைக்கதையில் கோட்டை விட்டு இயக்கியுள்ளார் சாய் கார்த்திக். இறுதியில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி காட்வின் இரண்டாம் பாகம் வருவதற்கான சான்ஸ் இருப்பதாக முடித்துள்ளார்.

மென்பனி புரொடக்ஷன்ஸ் வி.மணிகண்டன், யு.பிரபு, கே.அற்புதராஜன், டி. பாலபாஸ்கரன் ஆகியோர் தயாரித்திருக்கும் இன்பினிடி குற்ற பின்னணி கொண்ட த்ரில்லர் கதையில் தவறும் கனக்ட்டிவிடி.