ஆலன் சினிமா விமர்சனம் : ஆலன் ஆன்மீக தேடலில் மீட்டெடுத்த தொலை தூர வாழ்க்கையின்  நினைவு பயணம் | ரேட்டிங்: 2.5/5

0
452

ஆலன் சினிமா விமர்சனம் : ஆலன் ஆன்மீக தேடலில் மீட்டெடுத்த தொலை தூர வாழ்க்கையின்  நினைவு பயணம் | ரேட்டிங்: 2.5/5

3எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிவா ஆர் எழுதி, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ஆலன்.

இதில் வெற்றி – தியாகு, மதுரா – ஜனனி தாமஸ், அனு சிதாரா – தாமரை, விவேக் பிரசன்னா – பாக்கியநாதன், அருவி மதன் – செல்வேந்திரன், டிடோ வில்சன் – தனசேகரன், ஸ்ரீ தேவா – ராகவன், ஹரிஷ் பெரடி – ஆன்மிக குரு, கருணாகரன் – மேன்ஷன் ஓனர் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் : ஒளிப்பதிவாளர் : விந்தன் ஸ்டாலின், இசையமைப்பாளர் : மனோஜ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் : மு காசி விஸ்வநாதன், மக்கள் தொடர்பு : யுவராஜ்

பெற்றோர்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக வாழும் சிறு வயது வெற்றியின் வாழ்க்கையில்  ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வு அவனின் மீதமுள்ள வாழ்க்கை பயணத்தை எத்தகைய மாற்றத்தை செய்கிறது என்பதைச் சுற்றிய கதைக்களம். சிறு வயதில் தியாகு (வெற்றி) சுற்றுலா செல்லும் இடத்தில் தன்னுடைய பெற்றோர், உறவினரை சித்தப்பாக்களின் சூழ்ச்சியால் இழக்கிறார். அதிலிருந்து தப்பித்து ஒடும் தியாகு காசிக்கு செல்கிறார். அங்கே ஆன்மிக குரு ஹரிஷ் பெரடியை சந்தித்து சாமியாராக வலம் வருகிறார். ஆனால் தியாகுவிற்கு பழைய நினைவுகளை மறக்க முடியாத மனஉளைச்சலில் சிக்கி தவிப்பதாலும் எழுத்தாளனாக வேண்டும் எண்ணமும் மேலோங்குவதால் ஆன்மீகத்தில் ஈடுபட முடியாமல் தவிக்கிறார். அதனால்; எழுத்தாளனாக வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்து விட்டு திரும்பி வா என்று ஆன்மிக குரு சொல்கிறார். ரயிலில் சென்னைக்கு வரும் தியாகுவிற்கு வழியில் தமிழ் மீது பற்று கொண்டு,  தமிழ் கலாச்சாரங்களை ஆராய வரும் ஜெர்மன் நாட்டு பெண் ஜனனி தாமஸ் (மதுரா) அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் நட்பாக பழக காதலாக மலர்கிறது. இதனிடையே தன் ஆராய்ச்சி நிமித்தமாக சென்னையில் தியாகுவிடம் சொல்லிவிட்டு தனியாக பாண்டிச்சேரிக்கு செல்லும் ஜனனி அங்கே பாலியல் சீண்டலால் இறந்து விடுகிறார். இதனால் மீண்டும் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கும் தியாகு பத்து ஆண்டுகளாக பல ஆன்மிக மலைகளில் சுற்றி திரிந்து ஆலன் என்ற புத்தகத்தை ஜனனி தாமஸ் என்ற பெயரில் எழுதி தன் நண்பனின் உதவியுடன் வெளியிட பிரபலமடைகிறார். முக அடையாளத்தை மறைத்து மறைமுக பிரபல எழுத்தாளனாக வலம் வரும் தியாகு அதன் பின் யாரை சந்தித்தார்? இந்த சந்திப்பு எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது? என்பதே படத்தின் முடிவு.

வெற்றி தியாகுவாக முற்றும் துரந்த சாமியாராக வலம் வருவதும், பின்னர் தன்னுடைய எழுத்தார்வத்தால் மீண்டும் சாதாரண மனிதனாக வாழ நினைப்பதும், அதன் பின் சந்திக்கும் இரு பெண்களால் ஏற்பட்ட மாற்றத்தை நன்றாக பிரதிபலித்துள்ளார்.

மதுரா காதலி ஜனனி தாமஸாக மற்றும் அனு சிதாரா அத்தை மகள் தாமரையாக இருவரும் படத்தின் முக்கிய தருணங்களில் அழகான, சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

விவேக் பிரசன்னா – பாக்கியநாதன், அருவி மதன் – செல்வேந்திரன், டிடோ வில்சன் – தனசேகரன், ஸ்ரீ தேவா – ராகவன், ஹரிஷ் பெரடி – ஆன்மிக குரு, கருணாகரன் – மேன்ஷன் ஓனர் என்று அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் : விந்தன் ஸ்டாலின், இசையமைப்பாளர் : மனோஜ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் : மு காசி விஸ்வநாதன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணி ஆன்மீக நகரங்களான காசி மற்றும் ரிஷிகேஷ் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் அளவிற்கு முக்கிய காட்சிகளின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

1999ல் தொடங்கும் படத்தில் 1986, 1991 என்று முன்னுக்கு பின்னாக நடக்கும் சம்பவங்களை ஒருங்கிணைத்து ஒரு மனிதனின் ஆன்மீக அலைபாயும் பயணத்தில் இரண்டு பெண்களின் எதிர்பாராத பிரவேசம் அவனது வாழ்க்கையின் போக்கையே மாற்ற  அவர் மனம் அமைதி அடைய முடிந்ததா? எழுத்துலகில் வெற்றி காண முடிந்ததா என்பதே படத்தின் கதைக்களமாக எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் இயக்குனர் சிவா.ஆர். இதில் வாழ்;க்கை தரும் கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த கலாச்சார பாரம்பரியம், அடையாளத்துடன் புதிய அனுபவத்தை காட்சிக்கோணங்களில் சித்தரித்துள்ளார் இயக்குனர் சிவா.ஆர்.

மொத்தத்தில் 3எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிவா ஆர் எழுதி, தயாரித்து இயக்கியிருக்கும் ஆலன் ஆன்மீக தேடலில் மீட்டெடுத்த தொலை தூர வாழ்க்கையின்  நினைவு பயணம்.