ஆர் யூ ஓகே பேபி சினிமா விமர்சனம் : ஆர் யூ ஓகே பேபி பெற்ற தாய்க்கும் வளர்ப்பு தாய்க்கும் நடக்கும் உணர்ச்சிகள் நிறைந்த உரிமை போராட்டத்தை விழிப்புணர்வு கலந்து தெளிய வைத்து எச்சரித்துள்ளது | ரேட்டிங்: 3/5

0
409

ஆர் யூ ஓகே பேபி சினிமா விமர்சனம் : ஆர் யூ ஓகே பேபி பெற்ற தாய்க்கும் வளர்ப்பு தாய்க்கும் நடக்கும் உணர்ச்சிகள் நிறைந்த உரிமை போராட்டத்தை விழிப்புணர்வு கலந்து தெளிய வைத்து எச்சரித்துள்ளது | ரேட்டிங்: 3/5

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்து இயக்குனர் விஜய் வழங்கும் ஆர் யூ ஓகே பேபி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இதில் சமுத்திரக்கனி, அபிராமி, லட்சுமி ராமகிருஷ்ணன், மிஸ்கின், ஆடுகளம் நரேன், ,பாவல் நவநீதன், முல்லையரசி,ரோபோ சங்கர்,அசோக்,அனுபமா குமார், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுந்:-இசை: ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா,ஒளிப்பதிவு: கிருஷ்ணசேகர் டி.எஸ்,எடிட்டிங்: சி.எஸ்.பிரேம்குமார்,ஆடிN ர்களயாகிராபி: தபஸ் நாயக்,வண்ணம்: ராஜசேகரன் கே.எஸ்,ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் கே விஜய் பாண்டி – தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு,மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ்.

சென்னையில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் ஷோபா (முல்லையரசி) மற்றும் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் உதாரித்தனத்துடன் சுற்றும் அசோக். பல முறை கரு கலைப்பு செய்யும் ஷோபா, கடைசியாக ஒரு பெண் குழந்தையை கரு கலைப்பு செய்ய முடியாத சிக்கலான காரணத்தால் பெற்றெடுக்கிறார். வறுமை காரணமாக ஷோபா நர்ஸ் வினோதினி வைத்தியநாதன் அறிவுறுத்தலின் பேரில் குழந்தையை, கேரளாவில் வாழும் வித்யா (அபிராமி) மற்றும் பாலன் (சமுத்திரக்கனி) தம்பதிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்துக் கொடுக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டு தத்து கொடுத்து விடுகிறார். வித்யாவும் பாலனும் பாசமுடன் குழந்தையை வளர்க்கிறார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் அந்த பெண் குழந்தை வேண்டும் என்று ஷோபா முடிவு செய்து குழந்தைகள் நல சங்கத்தின் தலைவராக மிஷ்கினையும், நீதிமன்றத்தையும் அணுகுகிறார். இதற்கான முயற்சிகள் சென்று கொண்டிருக்க, ஷோபா பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சொல்லாததும் உண்மை’ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தன் குழந்தைப் பற்றிய தகவலை பகிர்கிறார். விளம்பரத்திற்காகவும், டிஆர்பி ரேட்டிங்கிற்காகவும் ரியாலிட்டி ஷோவை பரபரப்பாக்குவதற்காக பல முயற்சிகள் செய்கின்றனர். ரியாலிட்டி ஷோ தொகுப்பாளரிடமிருந்து (லக்ஷ்மி ராமகிருஷ்ணன்) தத்தெடுத்த வித்யா மற்றும் பாலன் தம்பதியருக்கு அழைப்பு வருகிறது, அதில் அவர் குழந்தையின் தாயான ஷோபா (முல்லை அரசி) தனது குழந்தையை மீட்க உதவி கோரி அவர்களை அணுகியதாக கூறுகிறார். உடைந்துபோகும் வளர்ப்பு தம்பதிகள், தாயிடமிருந்து உரிய அனுமதியுடன் குழந்தையைக் காவலில் எடுத்ததாக விளக்கி கூறி குழந்தையை வளர்க்க முடியாது என்பதை உணர்ந்த பிறகு, குழந்தையை தத்து கொடுக்க பெற்றதாய் தான் முடிவு செய்தார் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும், வித்யாவும் பாலனும் ஷோபா கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவமனை செலவையும், மருத்துவ உதவி தேவைப்படும் போது குழந்தையின் சிகிச்சை செலவையும் தாங்களே ஏற்றுக்கொண்டதாக  சுட்டிக்காட்டுகின்றனர். குழந்தைக்காக தந்தைக்கு பெரும் தொகை கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.இருப்பினும், வளர்ப்பு தம்பதியர் பணம் செலுத்தியதால், அவர்கள் மீது வழக்கு திரும்புகிறது, மேலும் அவர்கள் மீது குழந்தை கடத்தல் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றத்திற்காக வித்யா மற்றும் பாலன் ஆகியோரிடமிருந்து குழந்தை பிரிக்கப்படுகிறது? இறுதியில் வளர்ப்பு தம்பதியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதா? பெற்ற தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதா? என்பது தான் படத்தின் க்ளைமேக்ஸ்.

சமுத்திரக்கனி, அபிராமி இருவரும் குழந்தையின்மையால் அவதிப்படும் போதும், குழந்தை வந்த பின்பு அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் போதும், திடீர் பிரச்சனையால் குழந்தையை பிரிந்து இருக்கும் போதும் வௌ;வேறு தருணங்களின் அவர்களின் உணர்ச்சிகரமாக நடிப்பால் கவர்கின்றனர். குழந்தையை மீட்க போராடும் நேரங்களில்; கவனிக்க வைத்துள்ளனர். சமுத்திரக்கனியும் சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஆதரவற்ற தந்தையாக தனது சிறந்ததைக் கொடுத்துள்ளார்.

ஷோபாவாக முல்லையரசி முதலில் குழந்தையை மனமுவந்து கொடுத்துவிட்டு பின்னர் பாசத்தால் மீண்டும் குழந்தையை மீட்க எடுக்கும் முயற்சிகள், அதற்காக அனைத்து வழிகளையும் கையாண்டு வளர்ப்பு தம்பதியருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் என்று படம் முழுவதும் தேர்ந்த நடிப்பால் ஆச்சர்யப்பட வைத்துள்ளார். நீதிமன்றத்தில் முல்லை அரசி மற்றும் அபிராமியின் நடிப்பு ஒருவித நம்பகத்தன்மையை சேர்த்து எதிர்பார்க்கப்பட்டதை திறம்பட வழங்கியுள்ளனர்.

குழந்தைகள் நல சங்கத்தின் தலைவராக மிஷ்கின் நடித்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று. முல்லை அரசியின் ஜோடியாக நடித்துள்ள அசோக்குமார் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ரியாலிடி ஷோ தொகுப்பாளராக லட்சுமி ராமகிருஷ்ணன் இயல்பான, சாதுர்யமான பேச்சு, திசை திருப்பும் லாவகம், பிரச்சனைகளை இன்னும் சிக்கலாக மாற்றுவதை திறம்பட விவரித்துள்ளதற்கு பாராட்டுக்கள்.

இவர்களுடன் ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், ரோபோ சங்கர், அனுபமா குமார், வினோதினி வைத்தியநாதன் ஆகியோரின் பண்பட்ட நடிப்பு படத்திற்கு பலம்.

இளையராஜா இசை படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து காதுகளுக்கு இனிமை சேர்த்து மனதை வருடுகிறது.

ஒளிப்பதிவு: கிருஷ்ணசேகர் டி.எஸ், எடிட்டிங்: சி.எஸ்.பிரேம்குமார் ஆகியோர் கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தின் நோக்கம் தத்தெடுப்பு செயல்முறையுடன் தொடர்புடைய சிக்கல்களை திறம்பட வெளிச்சம் போட்டு காட்டுவதே என்பதில் முழுவதுமாக வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு அதிகம் தெரியாத பல சிக்கல்களை புரிய வைத்திருப்பதுடன் தெளிய வைத்துள்ளது என்பதே உண்மை. அடிதட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்வு என்ற பெயரில் ரியாலிட்டி ஷோக்களுக்கு அழைத்து வந்து அவர்களின் குடும்ப பிரச்சனையை மேலும் கேலிக்குரியவர்களாக்கி சிக்கலாக்கி வியாபார லாபம் பார்க்கும் ஷோ தயாரிப்பாளர்களின் உண்மை முகத்தை அதிர்ச்சியோடு புரிய வைத்திருப்பதில் பெரும் பங்கு லட்சுமி ராமகிருஷ்ணனையே சாரும். இவர் உண்மையில் அத்தகைய நிகழ்ச்சியை நடத்துவதால், படத்தில் அதை தத்ரூபமாக விவரித்து முகத்திரையை கிழித்துள்ளார்.மிக முக்கியமாக, இந்தியாவில் தத்தெடுப்பு செயல்முறை எவ்வளவு சிக்கலானது மற்றும் அடிப்படை உண்மைகளுடன் தொடர்பில்லாத குழந்தை தத்தெடுப்புச் சட்டங்கள் எவ்வளவு உணர்ச்சியற்றவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பெற்ற தாயின் அனுமதியைப் பெற்று குழந்தையை சரியாக தத்தெடுத்ததாக நினைக்கும் எத்தனை பேர், நீதிமன்றத்தில் தத்தெடுப்பு பத்திரம் அங்கீகரிக்கப்படாததால், பிற்காலத்தில் பெரும் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை இப்படம் சித்தரித்து அதில் சிக்கிக்கொள்ளும் வளர்ப்பு தம்பதியருக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளதற்காக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்டியாக வேண்டும்.

மொத்தத்தில் மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கும் ஆர் யூ ஓகே பேபி பெற்ற தாய்க்கும் வளர்ப்பு தாய்க்கும் நடக்கும் உணர்ச்சிகள் நிறைந்த உரிமை போராட்டத்தை விழிப்புணர்வு கலந்து தெளிய வைத்து எச்சரித்துள்ளது.