அழகிய கண்ணே சினிமா விமர்சனம்: அழகிய கண்ணே திருமண பந்தத்தில் இணைந்து இறுதியில் அணையும் காதல் ஜோதி | ரேட்டிங்: 2/5

0
320

அழகிய கண்ணே சினிமா விமர்சனம்: அழகிய கண்ணே திருமண பந்தத்தில் இணைந்து இறுதியில் அணையும் காதல் ஜோதி | ரேட்டிங்: 2/5

எஸ்தெல் எண்டர்டெயினர் சார்பில் டாக்டர். எஸ். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், சீனு ராமசாமியிடம் உதவியாளராக இருந்த விஜயகுமார் இயக்கியுள்ள படம் ‘அழகிய கண்ணே’.

இதில் ஹீரோவாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, சிங்கம் புலி, ராஜ்கபூர், அமுதவாணன், ஆண்ட்ரூஸ், சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் விஜய் சேதுபதி என பலரும் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – ஏ.ஆர். அசோக் குமார், படத்தொகுப்பு – இ.சங்கத்தமிழன், பாடல்கள் – வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி, இசை-என்.ஆர்.ரகுநந்தன், நடனம் – ஐ. ராதிகா, ஸ்டண்ட் – ஸ்டண்ட் சில்வா, கலை – விஜய் தென்னரசு, தயாரிப்பு மேலாளர்: இளையராஜா செல்வம். மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இன்பா (லியோ சிவகுமார்) நாடகம் எழுதுவது, கிராமத்தில் புரட்சிகரமாக கருத்துக்கள் கொண்ட நாடகங்களை அரங்கேற்றுவது, மீதி நேரத்தில் சினிமாவில் இயக்குனராக முயற்சிகள் மேற்கொள்கிறார்.அவர் வீட்டிற்கு எதிரில் வசிக்கும் பிராமணப் பெண் கஸ்தூரி (சஞ்சிதா ஷெட்டி), கல்லூரி விழாவில் நாடகம் நடத்த இன்பா உதவி செய்ய அவர் மீது கஸ்தூரிக்கு காதல் வருகிறது. பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேர இன்பா சென்னைக்கு செல்ல, கஸ்தூரியும் படிப்பை முடித்து சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் சேர்கிறார். இவர்களின் காதல் சென்;னையில் தொடர,இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். வேற்று மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. திண்டுக்கல்லில் இவர்களின் காதலுக்கு இன்பா வீட்டில் சம்மதம் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் கஸ்தூரியின் தந்தையும் மகளின் காதலுக்கு ஓகே சொல்ல கஸ்தூரியின் சித்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார். சித்தியின் எதிர்ப்புகளுக்கு இடையே இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். தம்பதியினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சென்னையில் வாழ முடிவு செய்கிறார்கள். குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இன்பா இயக்குநராக முயற்சி செய்யும் நிலையில் குடும்ப சூழல் காரணமாக வேலையை விட முடியாமல் குழந்தையை அருகில் இருந்து கஸ்தூரியால் கவனிக்க முடியாமல் தவித்து போகிறாள். இந்நிலையில் இன்பாவிற்கு இயக்குனர் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. அதே சமயம் கஸ்தூரியின் மாமன் (சித்தியின் தம்பி) இன்பாவை பழி வாங்க முடிவு செய்கிறார். இறுதியில் இன்பாவிற்கு என்ன நடந்தது? இன்பா தப்பித்தாரா? கஸ்தூரி என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடனம், வசன உச்சரிப்பு, உணர்ச்சிகரமான காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.

பயந்த சுபாவம் கொண்ட ஆனால் தைரியமிக்க பெண்ணாக சஞ்சிதா ஷெட்டி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். சிங்கம் புலி, ராஜ்கபூர், அமுதவாணன், ஆண்ட்ரூஸ், சிறப்பு தோற்றத்தில் இயக்குநர்  சாலமன், நடிகர் விஜய் சேதுபதி வந்து போகிறார்கள்.

ஏ.ஆர். அசோக் குமார் ஒளிப்பதிவு, இ.சங்கத்தமிழன் படத்தொகுப்பு, வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி பாடல் வரிகள், என்.ஆர்.ரகுநந்தன் இசை மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் முடிந்தவரை தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

சீனு ராமசாமியின் தம்பியும், அவரிடம் உதவி இயக்குனராக இருந்த விஜயகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். வேற்று மதத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் தங்கள் லட்சியங்களை நோக்கி பயணிக்கும் போது சாதனைகளை விட சோதனைகளை தாண்டி கரை சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை கிராமத்தையும், நகரத்தையும் இணைத்து ஒரு அழகான காதல் கதையை லாஜிக் மீறலுடன் சொல்லிருக்கும் இயக்குனர் விஜயகுமார் கொஞ்சம் அழுத்தமாக வலுவான திரைக்கதையை எழுதியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் இவரின் முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் எஸ்தெல் எண்டர்டெயினர் சார்பில் டாக்டர். எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள அழகிய கண்ணே திருமண பந்தத்தில் இணைந்து இறுதியில் அணையும் காதல் ஜோதி.