அன்யாஸ் டுடோரியல் விமர்சனம் : ‘அன்யாஸ் டுடோரியல்’ ஒரு சிறந்த ஆன்லைன் தொடர் |மதிப்பீடு: 3/5

0
395

அன்யாஸ் டுடோரியல் விமர்சனம் : ‘அன்யாஸ் டுடோரியல்’ ஒரு சிறந்த ஆன்லைன் தொடர் |மதிப்பீடு: 3/5

பாகுபலி’ படத் தயாரிப்பு நிறுவனமான ‘ஆர்கா மீடியா ஒர்க்ஸ்’ சமீபத்தில் வெப் சீரிஸ் களத்தில் இறங்கியுள்ளது. இந்த அமைப்பு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘அன்யாஸ் டுடோரியல்’ என்ற வெப் சீரிஸ் தயாரித்துள்ளது. பல்லவி கங்கி ரெட்டி இந்த வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கதாநாயகி ரெஜினா மற்றும் நிவேதிதா சதீஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ், ஜூலை 1 முதல் பிரபலமான ழுவுவு தளமான ஆஹாவில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் வந்துக் கொண்டிருக்கிறது.

அர்கா மீடியா சார்பில் ஷோபு யர்லகட்டா, பிரசாத் டெவினெனி தயாரித்து பல்லவி கங்கிரெட்டி இயக்கிய இத்தொடரில் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ், பிரமோதினி பம்மி, தர்ஷ், சமீர் மல்லா, சாய் காமாட்சி பாஸ்கரலா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசையமைப்பாளர்: அர்ரோல் கொரேலி, ஒளிப்பதிவு: விஜய் கே.சக்கரவதி,எடிட்டர்: ரவி தேஜா கிரிஜாலா,மக்கள் தொடர்பு – யுவராஜ்
இந்தத் தொடர் லாவண்யா (நிவேதிதா சதீஷ்) மற்றும் அவரது மூத்த சகோதரி மது (ரெஜினா) ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு உளவியல் த்ரில்லர் ஆகும்.

ரெஜினா, நிவேதிதா இருவரும் சகோதரிகள். தந்தை இழந்து தாயின் ஆதரவில் வளர்ப்பவர்கள். குடும்பப் பிரச்சினைகளால் மனமுடைந்த லாவண்யா மூத்த சகோதரி மதுவுடன் சண்டை போட்டு, தனது வீட்டை விட்டு வெளியேறி ஒரு அபார்ட்மெண்ட்டில் வாடகைக்கு தனியாக வாழத் தொடங்குகிறாள். அந்த குடியிருப்பில் அவளைத் தவிர வேறு யாரும் தங்குவதில்லை. கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரமும் இதுதான். வேறு வழிதெரியாமல், தைரியமாகவும் தனிமையாகவும் இருக்கும் லாவண்யா  இன்ஸ்டாகிராமில் அன்யாஸ் டுடோரியல் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்து கொண்டிருப்பது அக்கா மவிற்;குப் பிடிக்காமல் போகிறது. தனிமையில் இருக்கும் லாவண்யா அமானுஷ்ய நடவடிக்கைகளை அனுபவிக்கத் தொடங்கும் போது கதையில் திருப்பம் எழுகிறது.  ஒரு நாள் மேக்கப் பற்றி லைவ் கொடுக்கும்போது… அவளுக்குப் பின்னால் பேய் இருப்பதைப் பின்தொடர்பவர்கள் கவனிக்கிறார்கள். அதன் மூலம் லாவண்யா சமூக வலைதளங்களில் பிரபலமாகிறாள். அன்யாஸ் டுடோரியல் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் அதிகரிக்க சிலர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளை விளம்பரப்படுத்த பணம் கொடுக்கிறார்கள். லாவண்யா அமானுஷ்ய நடவடிக்கைகளை அனுபவிக்கத் தொடங்கும் போது கதையில் திருப்பம் எழுகிறது. அதாவது… லாவண்யாவின் அக்கா மது (ரெஜினா) தன் தங்கை செய்வதெல்லாம் குப்பை என்கிறாள். சிறுவயதில் இருந்தே பேய், பிசாசு கிடையாது என்பது லாவண்யாவுடன் தனக்கும் தெரியும் என்கிறாள். மது செய்யும் ஒரு காரியத்தால் லாவண்யாவின் அன்யாஸ் டுடோரியல் பக்கம் பின்தொடர்பவர்களை இழக்க நேரிடுகிறது. அதன்பிறகு, இன்னொரு லைவ் செய்த லாவண்யா, தன் மூத்த சகோதரி தன்னை ஒரு குழந்தையாக எப்படி நடத்தினாள் என்று கூறுகிறார். அவள் சகோதரியுடன் இருப்பதை விட பிசாசுடன் இருப்பது சிறந்தது என்கிறார். துரதிர்ஷ்டவசமாக, இந்த திகில் கூறுகள் அவரது சகோதரி மதுவுடன் தொடர்பு கொண்டுள்ளனவா?  லாவண்யாவின் வாழ்க்கையில் என்ன திகில் மறைந்திருக்கிறது? அக்கா மதுவுடன் அவளுக்கு என்ன சண்டை? லாவண்யாவின் வாடகை வீட்டில் பேய் நடமாட்டம் உள்ளதா? இந்த கேள்விகளுக்கான பதில்களை அன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ரெஜினா மற்றும் நிவேதிதா சதீஷ் இந்த தொடரில் சகோதரிகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெஜினா கசாண்ட்ராவுக்கு குறைவான திரை நேரம்தான் என்றாலும் தனித்து நின்று  துணை வேடத்தில்  சிறப்பாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நிவேதிதா சதீஷ் நடித்த லாவண்யாவின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது இந்தத் தொடர். நிவேதிதா சதீஷின் கண்களில் இருக்கும் அப்பாவித்தனம் அவரது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. அவரது முகபாவங்கள் அல்லது குழப்பமான மற்றும் அதிர்ச்சிகரமான நிலையை அவர் வெளிப்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. கடைசி இரண்டு எபிசோட்களில் அவரது மாற்றத்தைக் கவனிக்கலாம்.

குழந்தை நடிகர்களான நந்திதா மற்றும் திவ்யா மற்றும் பிரமோதினி பம்மி, தர்ஷ், சமீர் மல்லா, சாய் காமாட்சி பாஸ்கரலா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தொடரைப் பார்க்கக்கூடியதாக மாற்றியதன் பெருமையின் பெரும்பகுதி தொழில்நுட்பக் குழுவுக்குச் செல்கிறது – ஒளிப்பதிவாளர் விஜய் கே சக்கரவர்த்தி, எடிட்டர் ரவிதேஜா கிரிஜாலா, அரோல் கொரெல்லியின் பின்னணி  இசை மற்றும் கலை இயக்குனர்கள் அபிஷேக் ராகவ், திருமலா மற்றும் நாகேந்திரா பேய் வீட்டின் பயத்தை அதற்கேற்ற இருட்டு பயத்துடன் அற்புதமாக உருவாக்கி காட்சிபடுத்தியுள்ளனர்.

அன்யாஸ் டுடோரியல் இரண்டு சகோதரிகளுக்கு இடையிலான ஒரு தனித்துவமான சைபர்-திகில் கதையைச் சுற்றி வருகிறது. அமானுஷ்ய அம்சம் கதை ஒன்றை எடுத்துக் கொண்டு படமாக்கிய பல்லவி கங்கிரெட்டி இந்தத் தொடரின் மூலம் இன்றைய இளைஞர்களை இணைக்கும் நவீன பின்னணியில் கதையை அமைத்துள்ளார். ஆனால்  பின் கதையின் முக்கிய அத்தியாயங்களில் தெளிவு இல்லாதது நிறைய குழப்பத்தை உருவாக்குகிறது. நிவேதிதா சதீஷின் குழந்தைப் பருவத்தில் என்ன நடந்தது என்பதை தெளிவாகக் காட்டவில்லை. ஆனால் முதல் இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களுக்குப் பிறகு கதையின் வேகம் கூடுகிறது. திரையின் ஒவ்வொரு மூலையிலும் பேயின் பார்வையை எப்போதும் தேடுகிறது. சீசன் இரண்டில் தொடரும் கதைக்கு போதுமான குறிப்பில் முடித்துள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் நீங்கள் திகில் வகையை ரசிக்கிறீர்கள் என்றால், ஆர்கா மீடியாவால் தயாரிக்கப்பட்ட  ‘அன்யாஸ் டுடோரியல்” ஒரு சிறந்த ஆன்லைன் தொடர்.