அகோரி சினிமா விமர்சனம் : அகோரி சூப்பர்நேச்சுரல் த்ரில்லராக ஒரு அற்புதமான திகில் கலந்த பயணத்தை வழங்குகிறது | ரேட்டிங்: 3/5
மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கும் அகோரி படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார்.
இதில் சித்து சித், சோனு கவுடா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, வெற்றி விஜய், மதன் கோபால், ரியாமிகா, மாதவி, கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு அமல்ராஜ் விஜயலஷ்மி வசந்தகுமார், இசை ஃபோர் மியூசிக், சிஜி -அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார், படத்தொகுப்பு ராஜ்குமார், கலை இயக்குநர் சந்திரகாந்த், ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி, மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.
அமானுஷ்யம் நிறைந்த மர்மக் கதையை எழுதும் இயக்குனர் தான் எண்ணியபடி கதை அமையாயதால் ஒரு காட்டு பங்களாவில் தற்கொலை செய்து கொள்கிறார். அந்த சம்பவம் நடந்த பல ஆண்டுகள் கழித்து திகில் படம் இயக்கும் ஆசையில் இருக்கும்; சித்து சித், கதை விவாதத்திற்காக தனது நண்பர்கள் வெற்றி விஜய், மதன் கோபால் மற்றும் தோழி ரியாமிகா ஆகியோருடன் காட்டுப் பகுதியில் இருக்கும் அந்த பங்களாவிற்கு தங்க வருகிறார்கள். அந்த பங்களாவை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது பல வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்ட இயக்குநர் கதைச் சுருக்கம் டெவில் ஸ்கிரிப்ட் என்று தலைப்பில் எழுதிய புத்தகம் கண்ணில் படுகிறது. அதிலிருந்து ஒரு பக்கம் மதன் கோபால் கையில் கிடைக்க, அதில் எழுதியபடி நால்வருக்கும் அபசகுணமான சில சம்பவங்கள் நடக்கிறது.அதன் பின் நாயகன் சித்து சித்விடம் ஒரு பக்கம் கிடைக்கிறது. அதில் எழுதப்பட்டதை போல அவர்களுக்கு சம்பவங்கள் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஐந்தாவதாக ‘கலக்கப்போவது யாரு’ சரத் வந்து சேர ஒவ்வொரு முறையும் புத்தகத்தில் ஒரு பக்கம் அங்கிருப்பவர்களை தேடி வருகிறது. அந்த பக்கத்தில் குறிப்பிட்டபடி நடக்க வேண்டும், இல்லையென்றால் இறந்து விடுவார்கள் என்று எழுதப்பட்டிருக்க, அதிலிருந்து தப்பிக்க நினைத்தாலும் வெளியே போக முடியாமல் அமானுஷ்ய சக்தி தடுத்து பயமுறுத்துகிறது. இப்படியாக காதலனை தேடி வரும் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணன், மற்றும் அவர்களை காப்பாற்ற வரும் சாமியார் மைம் கோபி சிக்குகிறார்கள். சாமியார் மைம் கோபி, வெற்றி விஜய் கொல்லப்படுகின்றனர். காட்டுப் பகுதியில் இருக்கும் அந்த பங்களாவிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று அவர்கள் ஈடுபடும் முயற்சிகள் அனைத்திலும் தோல்வியில் முடிகிறது. இறுதியில் வரும் ஒரு பக்கத்தில் சித்துவிற்கும் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கும் ஆபத்தை பற்றி விவரிக்கிறது. அதை யார் செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஏன் இவ்வாறு அந்த பங்களாவில் நடைபெறுகிறது? பின்னணி என்ன? நண்பர்கள் என்ன முடிவு செய்தார்கள்? சித்துவிற்கும் அவரது காதலிக்கும் நேர்ந்த கொடுமை என்ன? நண்பர்கள் அந்த பக்கத்தில் எழுதியபடி செய்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
சித்து சித், சோனு கவுடா, சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, வெற்றி விஜய் , மதன் கோபால், ஜக்குல்லா பாபு, மாதவி, வெற்றி, கார்த்தி, டிசைனர் பவன் ஆகியோர் சஸ்பென்ஸ் மற்றும் திகில் ஆகியவற்றை உணர்ச்சிகரமான அற்புதமான நடிப்பை வழங்கி, அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை திறம்பட கையாண்டு படத்தின் அமானுஷ்ய சூழலுக்கு நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கிறார்கள்.
கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக் என்ற நான்கு பேர் சேர்ந்த கூட்டணி இப்படத்திற்கு இசையை வழங்கி அலற வைத்துள்ளனர்.
அமல்ராஜ் விஜயலஷ்மியின் ஒளிப்பதிவு இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழலின் பங்களிப்பையும், பேய் பங்களாவில் நடக்கும் பயங்கரங்களுக்கு ஒரு அதிவேக காட்சி அமைப்பை கொடுத்து, ஹரித்துவார் செட், சாயாஜி ஷிண்டே அகோரிகளுடன் நடித்து சண்டையிடும் காட்சிகளும், ஒரே வீட்டைச் சுற்றி அலுப்பு ஏற்படாத வண்ணம் உள்ளே வெளியே எடுத்த காட்சிக் கோணங்களையும், மர்மங்களையும், பயத்தையும் ஒரு சேர கொடுத்து மிரள வைத்துள்ளார்.
கம்பூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாகவும், நம்பகத்தன்மையுடன் ஒருவித பயத்தை ஏற்படும் வண்ணம் படைக்கப்பட்டிருக்கிறது.
ராஜ்குமார் எடிட்டிங்; படத்தின் அதிவேக அனுபவத்திற்கு நுணுக்கமான பங்களிப்பை தருகிறது.
துரைசாமி சுப்ரமணியனின் இயக்கம் திகில் மற்றும் உளவியல் த்ரில்லர் கூறுகளை தடையின்றி ஒருங்கிணைத்து பயம் மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் மூலம் கதையை சிக்கலுடன் வழிநடத்துகிறது. பேய் மாளிகையின் மூலம் கதாபாத்திரங்களைத் திறமையாகக் கையாண்டு பார்வையாளர்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும் பயங்கரத்தின் உச்சக்கட்டத்தை உணரச்செய்கிறார். கதைக்களம் துல்லியமாக விரிவடையும் போது அமானுஷ்யத்தால் தொடர்ச்சியான மோசமான பணிகளை முன்வைத்து சவால்கள், உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக துன்புறுத்துவது இடைவிடாத சஸ்பென்ஸ{டன் கதையை முன்னோக்கி செலுத்தி கதாபாத்திரங்கள் தீய சக்தியை வெல்வார்களா அல்லது பயத்திற்கு அடிபணிவார்களா என்ற மையக் கேள்வி படம் முழுவதும் வசீகரித்துள்ளது.
மொத்தத்தில் மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கும் அகோரி சூப்பர்நேச்சுரல் த்ரில்லராக ஒரு அற்புதமான திகில் கலந்த பயணத்தை வழங்குகிறது.