அகிலன் விமர்சனம்: அகிலன் கப்பல் வர்த்தக கடத்தலில் அகிலத்தை திரும்பி பார்க்க வைக்க முயற்சிப்பவன் | ரேட்டிங்: 3.5/5

0
588

அகிலன் விமர்சனம்: அகிலன் கப்பல் வர்த்தக கடத்தலில் அகிலத்தை திரும்பி பார்க்க வைக்க முயற்சிப்பவன் | ரேட்டிங்: 3.5/5

ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் பி லிட்  தயாரிப்பில் அகிலன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் என். கல்யாண கிருஷ்ணன்.
இதில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், சிரக் ஜானி, தருண் அரோரா, மதுசூதன் ராவ், ஹரீஷ் பெரடி, ஹரீஷ் உத்தமன், ராஜேஷ், தமிழ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-சாம் சி.எஸ், ஒளிப்பதிவு-விவேக் ஆனந்த் சந்தோஷம், எடிட்டிங்-என்.கணேஷ்குமார், கலை-ஆர்.கே.விஜய் முருகன், சண்டை-மிரக்கிள் மைக்கேல், பாடல்கள்-விவேக், நடனம் – ஈஸ்வர் பாபு, எம்.ஷெரிஃப், உடை-பல்லவி சிங், தயாரிப்பு நிர்வாகி-ஏபி.ரவி, பிஆர்ஒ-நிகில்.

சென்னை துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோத பொருட்களை கப்பல் கன்டெய்னர்களில் கடத்தும் பரந்தாமன்(ஷரிஷ் பெரடி) அவருக்கு உறுதுணையாகவும், அடியாளாகவும், கிரேன் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார் அகிலன் (ஜெயம் ரவி). பரந்தாமனின் முக்கிய அடியாளாக வலம் வந்தாலும், என்றாவது ஒரு நாள் பரந்தாமனின் இடத்தை பிடித்து சட்டவிரோத கடத்தலில் தலைவனும், தாதாவுமான கபூரை தருண் அரோரா) சந்தித்து இந்திய பெருங்கடலின் ராஜாவாக வலம் வர அகிலன் துடிக்கிறார்.பரந்தாமனிடமிருந்து விலகி தனியாக கடத்தல் தொழிலில் ஈடுபட்டு பரந்தாமனுக்கு பெரும் தலைவலியை கொடுக்கிறார் அகிலன். அதுமட்டுமில்லாமல் துறைமுகத்தில் தமிழன்னை என்ற சாரிட்டி கப்பலை வாங்கி அதற்கு உரிமம் பெற்று சர்வதேச நாடுகளுக்கு செல்ல அனுமதி வாங்க விண்ணப்பிக்கவும் செய்கிறார்.அகிலனின் சட்டவிரோத நடவடிக்கைகளை கப்பல் போக்குவரத்து காவல் அதிகாரி சிராஜ் எதிர்க்கிறார். அதே சமயம் பரம எதிரியாக மாறும் பரந்தாமன் எப்படி தமிழன்னை கப்பலை இயக்க விடாமல் தடுக்கிறார்? தமிழன்னை சாரிட்டி கப்பலை அகிலன் எதற்காக வாங்கினார்? அவரின் குறிக்கோள் நிறைவேறியதா? வெற்றிகரமாக தமிழன்னை கப்பல் பயணம் மேற்கொண்டதா? உலக மக்களின் துயரை துடைத்ததா? என்பதே மீதிக்கதை.

அகிலனாக ஜெயம் ரவி படத்தின் முதுகெலம்பு. அதனால் தான் முறுக்கேறிய உடம்புடன், அழுத்தமான வசன உச்சரிப்புடன், மிரட்டல் தோனியில் படத்தின் காட்சிகளை தன் நடிப்பால் தாங்கி பிடித்துள்ளார். இவர் வரும் காட்சிகள் பிரம்மாண்டமாகவும், சண்டைக் காட்சிகளில் மிரட்டல் ரகமாகவும் கை தேர்ந்த நடிப்பால் சாதித்துள்ளார். கடின உழைப்பு படத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன இருவருமே படத்தில் பற்றாக்குறைதான். இவர்களுடன் கப்பல் காவல் அதிகாரியாக சிரக் ஜானி, தருண் அரோரா, மதுசூதன் ராவ், ஹரீஷ் பெரடி, ஹரீஷ் உத்தமன், ராஜேஷ், தமிழ், மைம் கோபி ஆகியோர் படத்திற்கு பலம்.

விவேக்கின் பாடல்களும், பின்னணி இசையையும் அதிரடியாக கொடுத்து அசத்தியுள்ளார் சாம்.சி.எஸ்.

துறைமுகத்தின் பிரம்மாண்ட காட்சிகளை இதுவரை பார்த்திராத வண்ணம் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷம்.
எடிட்டிங்-என்.கணேஷ்குமார், கலை-ஆர்.கே.விஜய் முருகன், சண்டை-மிரக்கிள் மைக்கேல் ஆகியோர் படத்தின் விறுவிறுப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

கப்பலில் சர்வதேச கடத்தல் செய்யும் இளைஞன், தன்னுடைய புத்தி சாதுர்யத்தால் இந்திய பெருங்கடலின் ராஜாவாக மாறுகிறான் என்பதை முதல் பாதியில் அவனின் வேலை சாமர்த்தியத்தையும், இரண்டாம் பாதியில் உலகத்தின் பசியை போக்கும் உயரிய எண்ணம் கொண்டவனாகவும் இருவேறு திசையில் கப்பலில் பயணிக்கும் திரைக்தையை தன்னுடைய பாணியில் சிறப்புற இயக்கியுள்ளார் கல்யாண கிருஷ்ணன். இதில் துறைமுகத்தையும், அதன் உள்ளே நடக்கும் சம்பவங்களையும் பிரம்மாண்ட திரையில் புதிய கோணத்துடன் பிரம்மிப்புடன் கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் பி லிட்  தயாரிப்பில் அகிலன் கப்பல் வர்த்தக கடத்தலில் அகிலத்தை திரும்பி பார்க்க வைக்க முயற்சிப்பவன்.