PS 2 நான்கு நாட்களில் உலகெங்கும் இவ்வளவு வசூலா?

0
202

PS 2 நான்கு நாட்களில் உலகெங்கும் இவ்வளவு வசூலா?

பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இதனையடுத்து நேற்று முன் தினம் வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம் அந்தவசூல் சாதனையை முறியடிக்குமா? என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 வெளி வந்து நான்கு நாட்கள் முடிவடைந்துள்ளது. அந்தவகையில் இரண்டு நாட்களில் உலகளவில் இப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இருப்பினும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட நான்கு நாட்கள் வசூலில் இரண்டாம் பாகம் வசூலில் சற்று குறைவு தான் என தகவல் தெரிவிக்கின்றன.

படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.30 கோடி முதல் ரூ.32 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரைவசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது படம் வெளியாகி நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகெங்கும் மொத்தம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.