MIK Prodcutions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் படம் MIK Production No :- 1 பூஜையுடன் துவங்கியது

0
379

MIK Prodcutions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் படம் MIK Production No :- 1 பூஜையுடன் துவங்கியது.

பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் MIK Productions No 1 இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

MIK production (P) Ltd நிறுவனம் சார்பாக P இளையராஜா தயாரிக்கும் இந்தப்புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

பல வெற்றி படங்களில் தனது சிறந்த ஒளிப்பதிவை வழங்கிய வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு பெயர்பெற்ற கனல் கண்ணன் இப்படத்தின் பைட் கொரியாகிராபராக பங்கேற்கிறார். இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் firstlook போஸ்டரை வெயிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர்கள்

நாயகன் – விமல்

நாயகி – தான்யாஹோப்

மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது

தொழில்நுட்பகலைஞர்கள்

தயாரிப்பு: MIK Productions (P) Ltd
P. இளையராஜா

இயக்கம் : குட்டிப்புலி சரவண சக்தி

ஒளிப்பதிவு: வைட் ஆங்கிள் ரவிசங்கர்

எடிட்டர் : கோபி கிருஷ்ணா

ஸ்டண்ட்: கனல் கண்ணன்

ஆர்ட் டைரக்டர் : ஜெயகுமார்

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கர்ண ராஜா

புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ்: தர்மராஜ் மாணிக்கம்

மக்கள் தொடர்பு : P. தியாகராஜன்

ALSO READ:

ACTOR VIMAL AND DIRECTOR SARAVANA SAKTHI TEAM UP: MIK PRODUCTION NO:1 SHOOTING COMMENCES WITH RITUAL POOJA CEREMONY