தேசிய விருது – நடிகர்கள் தனுஷ், விஜய்சேதுபதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0
253

தேசிய விருது – நடிகர்கள் தனுஷ், விஜய்சேதுபதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளது. சிறந்த நடிகராக தனுஷும், சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த இசையமைப்பாளராக டி இமானும், ஒத்த செருப்பு படத்துக்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டன. தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், தேசிய விருது வென்றவர்களை வாழ்த்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது: “தேசிய விருது பெறும் திரைக்கலைஞர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் மற்றும் இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ‘அசுரன்’ வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துக்கள். அர்ப்பணிப்புடன் முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது. மகிழ்கிறேன். மென் மேலும் சிறப்புகளை பெறுக”. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.