சிம்பு குரலில் ‘சுல்தான்’ பாடல்… இன்று வெளியீடு!

0
199

சிம்பு குரலில் ‘சுல்தான்’ பாடல்… இன்று வெளியீடு!

‘யாரையும் இவ்ளோ அழகா’ எனும் இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக ‘சர்ப்ரைஸ்’ தெரிவித்துள்ளது சுல்தான் படக்குழு!

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கேஜிஎஃப் வில்லன் ராம்சந்திர ராஜு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.

‘சுல்தான்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஏப்ரல் 2-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
ஏற்கெனவே இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிவுள்ளது. ‘யாரையும் இவ்ளோ அழகா’ எனும் இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக ‘சர்ப்ரைஸ்’ தெரிவித்துள்ளது சுல்தான் படக்குழு. இதனால் இப்பாடலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.