Hottey nights: கவர்ச்சி பாதையில் இனியா!

0
602

Hottey nights: கவர்ச்சி பாதையில் இனியா!

மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வந்த இனியாவுக்கு கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் குறைந்து வருகிறது. அதனை சமன் செய்ய கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

2005-ல் சாய்ரா மலையாளப் படத்தில் அறிமுகமானார் இனியா. அதன் பிறகு 2007, 2008, 2009 வருடங்களில் தலா ஒரு படத்தில் நடித்தார். 2010-ல் பாடகசாலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து யுத்தம் செய், வாகைசூடவா, மௌனகுரு என்று முக்கியமான படங்களில் நடித்தார். அம்மாவின் கைப்பேசி திரைப்படம் இனியாவின் திறமைக்கு சான்று சொல்லும் படங்களில் ஒன்று.

தமிழில் நடித்த அதேநேரம் மலையாளத்திலும் இனியா நடித்தார். 2020-ல் கன்னடத்தில் த்ரோனா என்ற படத்தில் நடித்தார். அந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ஒரே படம் அதுதான். தமிழில் இனியா நடிப்பில் இரு படங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவையிரண்டுமே படப்பிடிப்பு நடக்காமல் முடங்கியுள்ளன. 2021-ல் எந்தப் புதிய படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

கிட்டத்தட்ட படங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்துக்கு வந்திருக்கும் நிலையில், பட எண்ணிக்கையை பூஸ்ட் செய்ய, கவர்ச்சியில் இறங்கியுள்ளார். விதவிதமான கவர்ச்சிப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனியா பதிவிட்டு வருகிறார். இனியாவா இது என்று கேட்கும் அளவுக்கு இருக்கின்றன அவரது கவர்ச்சிப் புகைப்படங்கள்.

இனியாவின் இந்த புதிய பாதையில் பசுஞ்சோலைகள் எதிர்ப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.