DUNE படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்.. 7வது முறையாக ஆஸ்கர் வெல்லும் நமித் மல்கோத்ரா – யார் இவர்?

0
88

DUNE படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்.. 7வது முறையாக ஆஸ்கர் வெல்லும் நமித் மல்கோத்ரா – யார் இவர்?

உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. அதன்படி, 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதில் ‘Dune’ திரைப்படம் சிறந்த தயாரிப்பு, வடிவமைப்பு, ஒளியமைப்பு, விஷுவல் எபக்ட்ஸ் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது.

மேலும் King Richard படத்திற்காக முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் நடிகர் வில் ஸ்மித். அதேபோல் ‘Dune’ திரைப்படத்தில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிக்காக நமித் மல்கோத்ராவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்தியரான இவரது நிறுவனம் வாங்கும் 7வது ஆஸ்கர் விருது இதுவாகும்.

ஏற்கனவே டெனெட் (2021), ஃபர்ஸ்ட் மேன் (2019), பிளேட் ரன்னர் 2049 (2018), எக்ஸ் மெஷினா (2016), இன்டர்ஸ்டெல்லர் (2015) மற்றும் இன்செப்ஷன் (2011) ஆகிய படங்களுக்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.

இந்த 7வது முறையாக Dune படத்திற்கும் இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் ஆர்.ஆர்.ஆர். படத்திலும் நமித் மல்கோத்ரா பணியாற்றியுள்ளது. மேலும் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாஸ்திரா படத்திற்கும் இவரது நிறுவனம் ஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மும்பையைச் சேர்ந்த இவர் DNEG என்ற பெயரில் visual effects மற்றும் animation நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் தான் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.