நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது

0
148

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து படம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஏற்கெனவே தெரிவித்தபடி படம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.