Actor Vishnu Vishal: நற்பணி மன்றம் தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால்!
தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஷ்ணுவிஷால் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டிவருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Its time to start giving back….
❤️❤️
Spread the word to the needy and the deserving 🙏@DuraiKv pic.twitter.com/nDoC4iJroE
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) July 17, 2023