53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இதயங்களை வென்ற கிளிண்டன்

0
151

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இதயங்களை வென்ற கிளிண்டன்

“என்னை உறைவிடப் பள்ளிக்கு அனுப்பியதற்காக முன்பெல்லாம் என் பெற்றோரிடம் கோபமாக இருந்தேன், இப்போது அது எனது படத்தைத் தயாரிக்க எனக்கு உதவியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று இயக்குனர் பிருத்விராஜ் தாஸ் குப்தா 53வது திரைப்பட விழாவின்  டேபிள் டாக்ஸ்’ அமர்வில் பேசும்போது கூறினார்.  அவரது திரைப்படம், கிளிண்டன் மேற்கு வங்கத்தின் கலிம்போங்கில் உள்ள உறைவிடப் பள்ளியில் அவரது சொந்த அனுபவங்களிலிருந்து உருவாகியுள்ளது.

10 வயது கிளிண்டன் பள்ளியில் கொடுமைக்காரனை எதிர்த்து நிற்கும் கருணை மற்றும் தைரியமுள்ள சிறுவனைப் பற்றிய படம். குழந்தைகள் உலகத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதற்கு பதிலளிக்கும் பாடம். கிளிண்டன்  இந்திய பனோரமா பிரிவின் கதை அம்சம் இல்லாத ஆங்கில மொழித் திரைப்படமாகும்.

இயக்குநர் பிருத்விராஜ் தாஸ் குப்தா, “இந்தக் கதையை என்னால் மட்டுமே சொல்ல முடியும், அது என்னுடைய நிஜம், இந்தக் கதைக்கு ஒரு நம்பகத்தன்மையை என்னால் கொண்டு வர முடியும்” என்றார். ஐஎப்எப்ஐயில் இயக்குனரின் இரண்டாவது வெளியீடாகும் இது.

பள்ளிகளில் மட்டுமல்லாது வயது வந்தோர் பார்க்கும் இடங்களிலும் படம் திரையிடப்படும் என நம்புவதாகக் கூறிய அவர், பெரியவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பது முக்கியம் என்றும், குழந்தைகள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மற்ற குழந்தைகளுக்கான பாடம் என்றும் குறிப்பிட்டார்.கலிம்போங்கில் தனது குழந்தைப் பருவத்தை இது நினைவுபடுத்துவதாக அவர் கூறினார்.