41 தியேட்டர்களில் வெளியாகும் ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா
இயக்குநரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா’. செப்டம்பர் 8ஆம் தேதியன்று 41 தியேட்டர்களில் வெளியாகிறது.
ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படம் ஏற்கனவே நிறைய வந்துள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதையை ஒரே கதாபாத்திரத்தின் கோணத்தில் இப்படம் சொல்லியிருக்கிறது.
கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரூ ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். காதல் பாடல் ஒன்றும், சோகப்பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.
ஒரே ஒரு நடிகர் நடித்திருந்தாலும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளையும் திரைக்கதையில் இடம் பெற வைத்து உள்ளனர். அது மட்டுமின்றி சமீப காலமாக நடந்த குற்றங்களை மையப்படுத்தியே திரைக்கதையும் அமைக்கப்பட்டு உள்ளது.
சண்டைக் காட்சிகளில் ஹிரோவை தவிர யாருமே திரையில் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். சண்டை காட்சிகளில் எதிரியுடனான சண்டையின் போது நம்பகத்தன்மைக்காக எதிராளியின் முகத்தை காட்டாமல், காலணி மட்டும் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும். ஆனாலும் சண்டைக் காட்சியை படமாக்கும் போது ஒளிப்பதிவாளருக்கும், சண்டை பயிற்சி இயக்குநருக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது.
படத்தின் தலைப்பு பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், இது கமர்சியலான படம் என்பதற்காகவும் இந்த பெயரை சூட்டினோம்.
அனைத்து இயக்குநர்களுக்கும் எப்போதுமே இதை செய்திருக்கலாமோ… அதை செய்திருக்கலாமோ… என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்காது. ஆனால் அதையும் மீறி படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டில் நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து, எல்லாவற்றையும் தடுத்துவிடும். இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து கமர்சியல் அம்சங்களையும் இடம்பெற வைத்திருக்கிறோம்.
‘ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா’ எனும் திரைப்படத்தை ஜி சிவா கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கிறார். ஓகி ரெட்டி சிவக்குமார் மற்றும் அருண் சுசில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி சேகரன் செல்வா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை சந்துரு கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜே. பி. அரவிந்த் மேற்கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி பாலா ஞானசுந்தரம் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை சாய் பாபா பிக்சர்ஸ் வழங்குகிறது. மக்கள் தொடர்பு பா.சிவக்குமார்.
ஒரே ஒரு நடிகர் நடிப்பில் கமர்சியலாக உருவாகி இருக்கும் படம் என்பதால் ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா’ எனும் திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.