38 வயதில் சத்தம் இல்லாமல் திருமணம் செய்த பிரபல நடிகை!

0
174

38 வயதில் சத்தம் இல்லாமல் திருமணம் செய்த பிரபல நடிகை!

தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லட்சுமண். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

சந்திரா லட்சுமண் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேள்வி எழுப்பி வந்தனர். சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் டோஷ் கிறிஸ்டியை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் சந்திரா லட்சுமண் தெரிவித்தார்.

இந்நிலையில் சந்திரா லட்சுமண்-டோஷ் கிறிஸ்டி திருமணம் கேரளாவில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ வெளியாகியிருக்கிறது. சந்திரா, டோஷ் இருவருக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.