37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு… ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு

0
416

37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு… ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு

பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

முந்தானை முடிச்சு ரீமேக் படத்தில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் அந்த படத்தின் ரீமேக்கைஉருவாக்க பாக்யராஜ் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கினார். அதன்படி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாக்யராஜ் அவர்களின் கதை, திரைக்கதை, வசனத்தில் முந்தானை முடிச்சு உருவாக உள்ளதாகவும், சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை யார் இயக்குவார்கள் என அறிவிக்கப்படாத நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தானை முடிச்சு படத்தில் இணைவது மகிழ்ச்சி என நடிகர் சசிகுமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.