2020 தேசிய விருதுகள் அறிவிப்பு.. 10 விருதுகளைப் பெற்ற தமிழ்ப்படங்கள்

0
257

2020 தேசிய விருதுகள் அறிவிப்பு.. 10 விருதுகளைப் பெற்ற தமிழ்ப்படங்கள்

டெல்லியில் இன்று 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் திரைப்படங்களுக்கு 10 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த படங்கள் எந்த பிரிவில் தேசிய விருது பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஆஸ்கர் விருது பட்டியில் அவரை ‘சூரரைப்போற்று’ திரைப்படம் தேர்வாகியிருந்தது. ஆனால் விருது கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான் 5 விருதுகளைச் சூரரைப் போற்று திரைப்படம் குவித்துள்ளது.

சிறந்த படம் – சூரரைப்போற்று

சிறந்த நடிகர் – சூர்யா

சிறந்த நடிகை -அபர்ணா பாலமுரளி

சிறந்த இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்

சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா ஆகிய 5 பிரிவில் தேசிய விருது பெற்றுள்ளது.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம் – இயக்குநர் வசந்த்.

சிறந்த எடிட்டர் – ஸ்ரீகர்பிரசாத்து

சிறந்த துணை நடிகை – லட்சுமிப்ரியா சந்திரமவுலி.

நடிகர் யோகிபாபு நடத்த மண்டேலா திரைப்படம் தேர்தலின் நாம் அளிக்கும் வாக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நகைச்சுவை மூலம் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த படம்.

இந்த படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வசனம் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதுக்கு மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதர விருதுகள் வருமாறு:-

சிறந்த தெலுங்கு படம்:- கலர் போட்டோ

சிறந்த மலையாள படம்:- திங்களச்சா நிச்சயம்

சிறந்த கன்னட படம்:- தொள்ளு

சிறந்த இந்தி படம்:- துளசிதாஸ் ஜூனியர்

சண்டை இயக்கம்:- அய்யப்பனும் கோஷியும்

நடன இயக்கம்:- சந்தியா ராஜு (நாட்யம்-தெலுங்கு)

பாடலாசிரியர்:- மனோஜ் முண்டாஷிர் (சாய்னா-இந்தி)

ஒப்பனை:- ராம்பாபு (நாட்யம்-தெலுங்கு)

ஆடை வடிவமைப்பு:- நச்சிகேத் பர்வே, மகேஷ் ஷெர்லா (தனாஜி:தி அன்சங் வாரியர்-இந்தி)

தயாரிப்பு நிர்வாகம்:- அனீஸ் நாடோடி (கப்பெலா-மலையாளம்) பாடகர், பாடகி

படத்தொகுப்பு:-ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்-தமிழ்)

ஒளிப்பதிவு:- சுப்ரதிம் போல் (அபிஜத்ரிக்-பெங்காலி)

பின்னணி பாடகர்:- ராகுல் தேஷ்பாண்டே (மி வசந்த்ராவ்-மராத்தி)

பின்னணி பாடகி:- நஞ்சம்மா (அய்யப்பனும் கோஷியும்-மலையாளம்)

குழந்தை நட்சத்திரம்:- அனிஷ் மங்கேஷ் கோசவி, அகங்க்ஷா பிங்க்ளே, திவ்யேண் இந்துல்கர்

குழந்தைகள் படம்:-சுமி (மராத்தி)

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம்:- தலேதண்டா (கன்னடம்)

‘சூரரைப் போற்று’ படம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம், திரைக்கதை, பின்னணி இசை என 5 விருதுகளை பெற்றுள்ளது. ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம், தமிழில் சிறந்த படம், துணை நடிகை, படத்தொகுப்பு என 3 விருதுகளும், ‘மண்டேலா’ படம், சிறந்த வசனம், புதுமுக இயக்குனர் என 2 விருதுகளும் பெற்றுள்ளன. எனவே, தமிழ் திரையுலகுக்கு 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.