‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் வாய்ப்பை நழுவவிட்ட மிஷ்கின்

0
177

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் வாய்ப்பை நழுவவிட்ட மிஷ்கின்

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மா தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய்க்கு வில்லனாக நடிக்க இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தமாகி உள்ளார். முதலில் இயக்குனர் மிஷ்கினை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்களாம். ‘பிசாசு 2’ பட பணிகளில் பிசியாக இருந்ததால், அவரால் பீஸ்ட் படத்திற்காக தேதிகள் ஒதுக்க முடியவில்லையாம். இதையடுத்து தான் இயக்குனர் செல்வராகவனை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.