லாபம் விமர்சனம்

0
127

லாபம் விமர்சனம்

7சிஸ் எண்டர்டெயின்மெண்ட்(பி) லிட்,விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆறுமுககுமார் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து தயாரித்திருக்கும் படம் லாபம்.
இதில் விஜய்சேதுபதி ,ஸ்ருதிஹாஸன்,  சாய் தன்ஷிகா,; ஜெகபதி பாபு, டயானா சம்பிகா, ஐ.எஸ். ராஜேஷ், வின்சென்ட் அசோகன், சண்முகராஜன், ஓஏகே.சுந்தர், மாரிமுத்து,அழகன் தமிழ்மணி, ரமேஷ் திலக்,கலையரசன்,டேனி, நித்தீஷ் வீரா, ப்ரித்வி பாண்டியராஜன், ஜெய்வர்மன், தமிழ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை – ஆலயமணி,  ஒளிப்பதிவு – ராம்ஜி, இசை – டி.இமான், படத்தொகுப்பு -என்.கணேஷ் குமார், எஸ்.பி.அஹமது, கலை – வி. செல்வகுமார், பாடல்கள் – கவிஞர் முத்துலிங்கம், யுகபாரதி, அறிவு, சண்டை பயிற்சி – டான் அசோக்,நடனம் – கல்யாண் , கூல்பஜயந்த், நாகேந்திரபிரசாத், ஈஸ்வர் பாபு, மக்கள் தொடர்பு-யுவராஜ்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு பெருவயல் கிராமத்திற்கு வரும் விஜய் சேதுபதி அங்குள்ள விவசாய மக்கள் கிராமத்தை விட்டே செல்வதைக் கண்டு அதை மாற்ற விவசாய சங்கத் தலைவராகிறார். அந்த கிராமத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முன்னாள் விவசாய சங்கத் தலைவர் ஜெகபதி பாபு, முன்னாள் உறுப்பினர்களான வின்சென்ட் அசோகன், சண்முகராஜன், ஓஏகே.சுந்தர் ஆகிய நான்கு பேரையும் எதிர்த்து களமிறங்குகிறார். கிராமத்து மக்களின் நன்மதிப்பை பெற்று கூட்டு பண்ணைத் திட்டத்தில் சேர வைக்கிறார். இவரின் செயல்களால் வெறுப்புற்ற ஜெகபதிபாபு திருட்டு பட்டம் கட்டி கிராமமே வெறுக்கும்படி விஜய் சேதுபதியை பழி வாங்கி துரத்தி விடுகிறார். இறுதியில் இந்த பழியிலிருந்து விஜய் சேதுபதி மீண்டு கிராமத்து மக்களின் விவசாயத்தால் கிடைத்;;;;;;த விளை பொருட்களின் அதிக விலையில் நிர்ணயம் செய்து லாபம் பார்த்தாரா? மக்களுக்கு கொடுத்தாரா? என்பதே மீதிக்கதை.
இதில் விஜய் சேதுபதி படம் முழுவதும் வசனத்தாலே நம்மை முழ்கடித்துவிடுகிறார். ஒவ்வொரு காட்சிக்கும் கருத்துக்களும், கோட்பாடுகளும், புள்ளி விவரங்களும் அள்ளி வீசிவிட்டுக் கொண்டே இருக்கிறார். இதனிடையே வில்லன்களையும் சமாளித்து கிராமத்து விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் கொடுத்த கதாபத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சாய் தன்ஷிகா காட்சி பொருளாக வந்து போகிறார்.
இவர்களுடன் அக்மார்க் வில்லனாக தனி முத்திரை பதித்திருக்கும் ஜெகபதி பாபு,வின்சென்ட் அசோகன், சண்முகராஜன், ஓஏகே.சுந்தர், டயானா சம்பிகா, ஐ.எஸ். ராஜேஷ், மாரிமுத்து,அழகன் தமிழ்மணி, ரமேஷ் திலக்,கலையரசன்,டேனி, நித்தீஷ் வீரா, ப்ரித்வி பாண்டியராஜன், ஜெய்வர்மன், தமிழ் மற்றும் பலர் படத்திற்கு பலம்.
டி.இமானின் இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும், என்.கணேஷ் குமார், எஸ்.பி.அஹமது ஆகிய இருவரின் படத்தொகுப்பும் கச்சிதம்.
கருத்துள்ள வசனங்களை தந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் ஆலயமணி.
கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன். விவசாய மறுமலர்;ச்சி, கூட்டுப் பண்ணைத் திட்டம், விளை பொருட்களின் விலை நிர்ணயம், விவசாயத்தை எப்படி லாபத்துடன் நடத்திச் செல்லலாம் என்பதை திறம்பட திட்டங்களை வழிவகுத்து சொல்லிருக்கும் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் முயற்சியை பாராட்டலாம்.
மொத்தத்தில் 7சிஸ் எண்டர்டெயின்மெண்ட்(பி) லிட்,விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கம் படம் மக்களுக்கு விவசாயம் சாபம் அல்ல லாபம் என்பதை உணர்த்தும் படம்.